‘வடக்கு நுழைவாயில்’ முன்முயற்சி திட்டம் : ‘பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான வரைபடம்’
- Editor
- March 31, 2026
- விவரணங்கள்
- 0 Comments

ஜீவன் தியாகராஜா
‘வடக்கு நுழைவாயில’ முன்முயற்சியானது இலங்கையின் வட மாகாணத்தை ஒரு மூலோபாய பொருளாதார மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும்.
இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ‘பாக் ஜலசந்தி வழித்தட சிறப்புத் திட்டத்தை’ (Palk Strait Corridor Excellence Program) தொடங்க வேண்டும்.
இந்த முன்முயற்சியானது, இந்தியாவின் நிதி, சந்தை வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக தென்னிந்திய மாநிலங்களின் உயர்வளர்ச்சி, தொழில் சார்ந்த மாதிரிகளைப் பிரதிபலிக்கிறது.
வட மாகாணத்தை ஒரு முன்னணி செழுமை மிக்க மாகாணமாக மறுசீரமைக்க முடியும். அதன்மூலம் வளர்ச்சி சார்ந்த மேம்பாட்டிற்கான (Growth-Led Development) ஒரு நேரடி ஆய்வகமாகச் செயற்படும்.
பாரம்பரிய உதவிகள் சார்ந்த மாதிரிகளைப் போலன்றி, வடக்குக்கான இந்த ‘முன்னணி’ அந்தஸ்து இப்பகுதியை சர்வதேச மூலதனத்திற்கான உயர் வளர்ச்சி நுழைவுப் புள்ளியாக நிலைநிறுத்துகிறது.
வடக்கில் ஒழுங்குமுறை தடைகளைத் தளர்த்துவதும், ‘முதல்-முயற்சியாளர்’ ஊக்கத் தொகைகளைப் பயன்படுத்துவதும் நிறுவப்பட்ட தொழில்முறை மையங்களை விடவும் போட்டி நன்மையை உருவாக்குகின்றன.
தென்னிந்தியாவின் ட்ரில்லியன் டொலர் பொருளாதாரத்துடனான நெருக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வட பகுதியை ஒரு உப-தேசிய பொருளாதார வழித்தட (Subnational Economic Corridor) முன்னோடியாக உருவாக்க முடியும்.
அவ்விதமான மாற்றமானது வட மாகாணத்தை தேசிய ரீதியில் முக்கியமான பொளருhதார பிராந்தியமாக மாற்றுகிறது. அதன் ஊடாக பரவலாக்கப்பட்ட, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மற்றும் நுண்பாக-பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது.
அதேநேரம், வட மாகாணத்தை முன்னணி மாகாணமாக, மாற்றுவதில் ‘பசுமை மற்றும் டிஜிட்டல்’ விடயம் முக்கியமான அளவுகோலாக மாறுகிறது.
பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள், செயற்கைக்கோள் தொழில்நுட்ப மையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம், பிராந்திய மேம்பாடு என்பது வெறுமனே சமூகத்தேவை மட்டுமல்ல என்பதற்கு அப்பால் ஒரு மூலோபாய பொருளாதார கட்டாய தேவை என்பதையும் நிரூபிக்கிறது.
வட பகுதியை ‘முன்னணி மாகாணமாக’ மாற்றுவதில் ஒழுங்குமுறை ஊக்கத்தொகைகள், கட்டமைப்பு சுயாட்சி ஆகியன முக்கியமானவையாகின்றது. இந்திய, இலங்கை அரசாங்கங்கள் குறித்த விடயங்களை செயற்படுத்துவதற்கான தாமதங்களை தவிர்ப்பதில் பங்கேற்பதோடு முதலீட்டாளர் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கும் சிறப்பு ஒழுங்குமுறை ஆட்சியை அமுல்படுத்த வேண்டியது அவசிமாகின்றது.
‘துரிதகதி’ ஒழுங்குமுறையை முன்னெடுப்பதற்காக ‘வடக்கு ஒற்றைச் சாளர அதிகாரசபை’ (Nளுறுயு) தொடர்பில் ஆராயலாம். குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்கு போன்று வட மாகாணத்திற்காக அதிகாரசபையை நிறுவுவதன் ஊடாக 30 நாட்களுக்குள் உரிமங்கள், அனுமதிப்பத்திரங்கள், வழங்குதல் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றத்தை அடையலாம். அதேபோன்று சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளை வழங்குவதற்கான அதிகாரத்தை கொண்டிருத்தலும் மிக முக்கியமானது.
டிஜிட்டல் குடியிருப்பு மற்றும் தொழில்முறை விசாக்கள் தொடர்பில் உடனடி அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்க, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்புப் பயிற்சியாளர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான முன்னுரிமை விசாக்களை அறிமுகப்படுத்துதல் முக்கிய விடயமாகும்.
தொழிலாளர் நெகிழ்வுத்தன்மை விடயத்தில் பெங்களுர் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் மாதிரியுடன் இணைந்து, தொழிநுட்பட தளவாடங்களில் திட்ட அடிப்படையிலான ஆட்சேர்ப்பு மற்றும் முழுவாரத்திலும் இருபத்து நான்கு மணிநேர செயற்பாடுகளை அனுமதிக்கும் ‘சிறப்பு தொழிலாளர் குறியீட்டை’ தொழில் மையங்களில் அமுல்படுத்துதல்.
வர்த்தகம் மற்றும் இணைப்பு ஒருங்கிணைப்புக்காக பாக்.ஜலசந்தி சுங்க வழிதடத்தினை முன்னெடுத்தல் முக்கியமானதாகிறது. இதன்மூலம் தென்னிந்திய தொழில் குழுமங்களிலிருந்து (சென்னை, தூத்துக்குடி) வரும் அல்லது அங்கு செல்லும் பொருட்களுக்காக காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு ‘பசுமை இணைப்புக்களை’ (Green Channel) நிறுவுதல் அவசியமாகின்றது.
நாணய இயல்பாக்க விடயத்தில் சிறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நாணயமாற்று விகித ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க, வட மாகாண பொருளாதார வலயங்களுக்குள் நேரடி வர்த்தகத் தீர்வுகளுக்காக இந்திய ரூபாவை பயன்படுத்துவதை முறைப்படுத்துதல் சிறந்ததாகம்.
வரிவிலக்கு அந்தஸ்து, நிதி கட்டமைப்புகள் பொறுமையாக மூலதனத்தை ஈர்ப்பதற்காக, இந்த முன்முயற்சியானது இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டம் 2026 இல் திருத்தங்களை மாதிரியாகக் கொண்ட வரிச் சலுகைகளைப் அடியொற்றியதாகும்.
துறை சார்ந்த வரி விலக்களிப்பு (2026–2036) தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்வதோடு குறைந்தபட்சம் 50 வேலைவாய்ப்புக்களை உருவாக்குமாயின் 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிறுவன வருமான வரி விலக்களிப்புக்களை வழங்கலாம்.
உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் விடயத்தில் மன்னார் காற்றுச் சக்திவளம் அல்லது காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு (50மில்லியன் டொலர்கள் – 150மில்லியன் டொலர்கள்) 6 ஆண்டுகள் வரி விலக்களிப்பு வழங்கப்படும்.
உற்பத்தி மற்றும் விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அலகுகள் (50 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடு) உள்ளூர் வேலை உருவாக்கத்தின் அடிப்படையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரி விலக்களிப்பைப் பெற தகுதியுடையவையாக இருக்கும்.
இறக்குமதி மற்றும் செயற்பாட்டு விலக்குகள் மூலதனப் பொருட்கள் வரி விலக்குக்காக திட்ட அமுலாக்கக் கட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கு சுங்க இறக்குமதி வரி, பெறுமதி சேர் வரி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி, ஆகியவற்றிலிருந்து முழு விலக்களிக்கப்பட வேண்டும்.
பூச்சிய வரி ஏற்றுமதி சேவைகள் தொடர்பில் இந்திய நிறுவனங்களிடமிருந்து வட மாகாண ‘செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு’ வெளிவாரியாக செய்யப்படும் அனைத்து தொழில்நுட்ப சேவைகளும் வற்வரியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்தின் முக்கிய மூலோபாயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது தென்னிந்திய வரைபடமாகும். வடபகுதியை மையப்படுத்திய திட்டம் தென்னிந்திய மாநிலங்களின் வெற்றியில் இருந்து பெறப்பட்ட மூன்று ‘பிரதிபலிக்கக்கூடிய’ தூண்களை மையமாகக் கொண்டுள்ளது.
01.தமிழ்நாடு தொழில்முறை மைய மாதிரி: யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் சிறப்பு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை உருவாக்கி, அவற்றை சென்னை மற்றும் கோயம்புத்தூரின் விநியோகச் சங்கிலிகளுடன் இணைத்தல்.
02.பெங்களூர் தொழில்நுட்ப சூழல்: இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மென்பொருள் சோதனை மற்றும் அலுவலகப் பணிகளில் வட மாகாண இளைஞர்களை வெளிவாரியாக இணைத்துக்கொள்ளச் செய்யும் வகையில் ‘செயற்கைக்கோள் மற்றும் தொழில்நுட்பப் பூங்காக்களை’ நிறுவுதல்.
03.கேரளா மனித மேம்பாட்டு மாதிரி: இந்திய நிதியுதவியுடன் கூடிய தொழிற்கல்வி கட்டமைப்புகள் மூலம் வடக்கின் உயர் எழுத்தறிவு விகிதத்தை சிறப்பு தொழில்நுட்ப மூலதனமாக மாற்றுதல் ஆகியவற்றை பின்பற்றலாம்.
நிதி மற்றும் உள்கட்டமைப்பு விடயத்தில் இந்தோ-லங்கா வடக்கு மூலதன நிதி முக்கியமானது. இந்திய எக்சிம் வங்கி, தனியார் நிறுவனங்களால் இணைந்து நிர்வகிக்கப்படும் 150மில்லியன் டொலர்கள் நிதியத்தை உருவாக்க முடியும்.
இது விவசாயத் தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் உள்ள வடமாகாண புதிய தொழில் முனைவாளர்களுக்கான மூலதனத்தை வழங்குகிறது.
அடுத்து எரிசக்தி ஒருங்கிணைப்பு விடயத்தில் இந்தியாவின் 500 மில்லியன் டொலர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிப்பாட்டைப் பயன்படுத்தி, இந்தியாவுடனான மின் கட்டமைப்பு இணைப்பின் மூலம் வட பகுதியை பசுமை எரிசக்தி ஏற்றுமதியாளராக மாற்றலாம்.
தொழிலாளர் மாற்றத்தை பொறுத்தவரையில் திறமையான மூலதனத்தை உருவாக்குதல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் ‘இரட்டை தொழிற்கல்வி மாதிரியை’ பின்பற்றி, டாடா, மஹிந்திரா அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர் திறனை மேம்படுத்துதலாம்.
நான் முதல்வன் (Naan Mudhalvan) ஒருங்கிணைப்பு திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ஸ்டீம் ஆகிய துறைகளில் தொழில் சார்ந்த கற்கைகளை வழங்குவதோடு 2000இற்கும் அதிகமான இந்திய வழிகாட்டிகள் மூலம் இளைஞர்களை உலகத் தரத்திற்குத் தயார்படுத்தலாம்.
அதேபோன்று வெற்றி நிச்சயம் (Vetri Nichayam) மையங்கள் ஊடாக வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களுக்கான ‘பினிஷிங் ஸ்கூல்’ ஆகச் செயற்படுவதோடு கட்டுமானம், விருந்தோம்பல் போன்ற துறைகளில் 165இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப படிப்புகளை வழங்க முடியும்.
உயர்நிலை பயிற்சிக்காக துறை சார்ந்த சிறப்பு மையங்களை நிறுவலாம். தமிழ்நாட்டின் அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மையங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட இந்த மையங்கள், சுகாதாரம், வங்கி, நிதி சேவைகள், காப்புறுதி ஆகியவற்றில் உயர் மதிப்புள்ள வகையில் கவனம் செலுத்துகின்றன. இது முழு இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுக்கும் சேவை செய்யக்கூடிய ஒரு சிறப்பு தொழிலாளர் படையை உருவாக்குகின்றன.
அதேபோன்டறு நீலப்பொருளாதாரம் மற்றும் பசுமை தொழில்நுட்பத்துறையின் ஊடாக பாரம்பரிய மீனவர்களை கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றுவதோடு மன்னார் எரிசக்தி திட்டங்களுக்கான பராமரிப்பில் 5,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.
டிஜிட்டல்துறைக்கான வெளிவாரியான இணைப்பில் சிறப்புப் பணிகளுக்கான 10,000 கோடிக்கும் அதிகமான வருடாந்த தேவையுடன் பிராந்தியத்தின் 92.7சதவீதமான கல்வியறிவு வீதத்தை சீரமைக்க பெங்களுரின் நிறுவனங்களை மாதிரியாகக் கொண்ட குறியீட்டு மையங்களை உருவாக்க முடியும்.
சான்றிதழ் மற்றும் பரிமாற்றத்தில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை முறைப்படுத்துதல், இந்திய தொழில்துறை வழித்தடத்தில் 6 மாத வதிவிடத்தை மேற்கொள்ள ஆண்டுதோறும் 2,000 பட்டதாரிகளுக்கு ‘தெற்கு பாலம்’ பயிற்சித் திட்டம் ஊடாக வாய்ப்புக்களை வழங்கலாம்.
மூலோபாய இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய தாக்கங்கள் (2026–2031)
| தொழிற்படை | தற்போதைய நிலை | 2031இல் இலக்கு |
| துறைசார் தொழிலாளர் | 22% | 55% |
| மொத்த தேசிய உற்பத்திக்கான பங்கு | 4.5% | 8.0% |
| வருடாந்த தொழிற்கல்வி பட்டதாரிகள் | <1500 | 10,000+ |
| இளைஞர் வேலையின்மை | அதிகம் | 40சதவீதமாக குறைத்தல் |
| பெண் தொழிலாளர் பங்கேற்பு | 24% | 40% |
வட மாகாணத்தை இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இணைப்பதன் மூலம், இப்பகுதி இந்தோ-லங்கா வர்த்தகத்திற்கான முதன்மை மனித மூலதன தளமாக மாறுகிறது.

