மக்களின் உரிமைகளை பாதுகாக்க உயர் நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது;பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தெரிவிப்பு
பொது மக்களின் உரிமைகளையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்க உயர் நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புகளால் நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பங்குதாரராக தான் இருந்ததில் பெருமைப்படுவதாகவும் ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவின் ஓய்வை ஒட்டி 25-07-2025 அன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான பிரியாவிடை விழாவில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்த பிரியாவிடை நிக்ழ்வில் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள், நீதிவான் நீதிமன்றங்களின், மாவட்ட நீதிமன்ரங்கலின் நீதிபதிகள், சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் பெருமளவான சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஓய்வுபெறும் பிரதம நீதியர்சர் முர்து பெர்ணான்டோ, சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவியாக தான் புதுக்கடை பகுதிக்கு வந்ததாகவும், பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தில் உறுப்பினரானதாகவும், இறுதியில் உயர் நீதிமன்ற நீதியரசராகவும் பிரதம நீதியர்சராகவும் கடமைபுரிய முடிந்த்ததாகவும் தெரிவித்தார்.
இலங்கை உயர் நீதிமன்ற வரலாற்றில் 48வது பிரதம நீதியர்சராக தான் பதவியேற்றதாகவும், பிரதம நீதியரசரின் வகிபாகம் உயர் நீதிமன்றத்தின் தலைவராகச் செயல்படுவது மட்டுமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதித்துறையின் நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை நிலைநிறுத்த நீதிபதிகள் கடமைப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதம நீதியர்சர் முர்து பெர்ணான்டோ , அந்த விதிமுறைகளை மீறுவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் கூறினார். அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளும் இந்த விதிமுறைகளை நிலைநிறுத்த கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஏராளமான இளைஞர் யுவதிகள் சட்டத்துறையில் நுழைவதாகவும், அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், சட்டத்தின் நெறிமுறைகள் மற்றும் மரபுகளை நிலைநிறுத்த அவர்கள் பாடுபட வேண்டும் என்றும் முர்து பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க நீதித்துறை மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். மக்களின் உரிமைகளையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்க உயர் நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது என்றும், உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புகளால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறிய பிரதம நீதியர்சர் முர்து பெர்னாண்டோ, அதில் ஒரு பங்குதாரராக தான் இருந்ததில் பெருமைப்படுவதாகக் கூறினார்.

