செம்மணிஎலும்புக்கூடுகள்: தொற்றுநோய் அல்லது அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுடையவை; பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை

செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், அங்கு உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளை சேர்த்துப் புதைப்பதை விடவும், அவர்களது உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருந்திருக்கலாம் என்றும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு செம்மணியில் ஆடைகள், துணிகள் பெருமளவில் அகழ்ந்தெடுக்கப்படாமையை, அங்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட வேளையில் ஆடைகள் இருக்கவில்லை …

Continue Reading

பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையை நிராகரிக்குமாறுகோரி ; யாழ். நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம்

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த திங்கட்கிழமை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சுருக்க அறிக்கையை நிராகரிக்கவேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரான வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்நகர்த்தல் பத்திரத்தில், தனது முந்தைய மூன்று அறிக்கைகளிலும் ‘மனிதப்புதைகுழி’ என்ற பதத்தைப் பயன்படுத்திவந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இடைக்கால சுருக்க அறிக்கையில் வேண்டுமென்றே அப்பதத்தைத் தவிர்த்திருக்கிறார் எனவும், இந்தத் தவிர்ப்பானது இடைக்கால அறிக்கையின் துல்லியத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தீவிர சந்தேகங்களைத் …

Continue Reading

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் முற்றாக நீக்குங்கள்;  மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

பயங்கரவாதத்தடைச்சட்டம் எவ்வித நிபந்தனைகளுமின்றி முழுமையாக நீக்கப்படவேண்டுமேயன்றி, அதற்குப் பதிலாக அதனையொத்த பரந்துபட்ட அதிகாரங்களைக்கொண்ட பிறிதொரு சட்டம் கொண்டுவரப்படக்கூடாது. எனவே அரசாங்கம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை உடன் மீளப்பெறவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: …

Continue Reading

எழுத்தாளர் தீபச்செல்வனின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரது நூல்கள் தடுத்துவைப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழு

எழுத்தாளர் தீபச்செல்வனின் அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறும் வகையில் அவரது இரண்டு தமிழ் நூல்களின் பிரதிகள் சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவ்விரு நூல்களின் சகல பிரதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தீபச்செல்வனால் எழுதப்பட்டு, சென்னையில் அச்சிடப்பட்டு, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘பயங்கரவாதி’, ‘சயனைட்’, ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்’, ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ ஆகிய 4 நூல்களின் 288 பிரதிகள் நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் …

Continue Reading

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க இராஜாங்கதிணைக்கள அறிக்கையில் 2 ஆம் நிலையில் இலங்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில், இலங்கை தொடர்ந்து 5 ஆவது ஆண்டாகவும் 2 ஆம் நிலையை பெற்றுள்ளமை குறித்துப் பெருமையடைவதாகவும், இது ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய மட்டத்திலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்தல், சட்ட அமுலாக்கத்தை மேம்படுத்தல், தடுப்பு முயற்சிகள் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன உள்ளடங்கலாக …

Continue Reading

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த 6 முஸ்லிம் பெண் சுகாதார உதவி ஊழியர்களை அவர்களது ஹிஜாப் உள்ளிட்ட மத நம்பிக்கை அடிப்படையிலான ஆடைகளை அணியவேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகம் பணித்ததன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்துக்கு முரணான விதத்தில் வைத்தியசாலை நிர்வாகம் ஊழியர்களின் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காண்பித்திருப்பதாகவும், தொழிலில் ஈடுபடுவதற்கான அவர்களது …

Continue Reading

மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன்;  ஜனாதிபதி அநுரகுமார

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். சவூதி அரசாங்கத்துக்கு மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.மீதமுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் எனது அரசாங்கம் தொடர்ந்து வழங்கும். வாழ்வாதாரத்தைத் தேடி நமது நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும், தாங்கள் தனித்து நிற்பதாக ஒருபோதும் உணரக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து சவூதி உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை வரவேற்று …

Continue Reading

தேரர் சிறையில் காவியுடை அணியலாம்  பரிந்துரை கையளிப்பு

சிறைக்கைதியான  தேரர் ஒருவர் ஏதேனுமொரு காரணத்திற்காகச் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அவர் காவியுடை  அணிந்திருப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தோ அல்லது நிகாயவிடமிருந்தோ குறித்த காவியுடையை அகற்றுமாறு அறிவித்தல் கிடைக்கும் வரை அவர் காவியுடை தரிக்க முடியும். அதேபோல்  பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலடைக்கப்படும் போது, அக்கைதி அதுவரை அணிந்துள்ள காவி உடை அகற்றுவது தொடர்பாக பௌத்த விவகாரத் திணைக்களத்திற்கு அறிவித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏதேனுமொரு வகையில் …

Continue Reading

அனோஜனின் மரணதண்டனை இரத்து; வீடுதிரும்புவதற்காக காத்திருக்கும் குடும்பம்

கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட மதம் தொடர்பான கருத்தொன்றின் அடிப்படையில் மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டநிலையில் இலங்கை வெளிவிகார அமைச்சின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீட்டை அடுது;து மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர …

Continue Reading

சீனாவின் ஒத்துழைப்புகள் அரசியல் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அல்ல; சீன தூதுவர்

இலங்கையுடனான தனது நீண்டகால நட்புறவை சீனா தொடர்ந்து பேணும். சீனாவின் உதவிகளும் ஒத்துழைப்புகளும் ஒருபோதும் அரசியல் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அல்ல.எதிர்காலத்திலும் சீனாவின் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் வெய் ஹுவாசியாங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீனா இடையே பொது நிர்வாக சீர்திருத்தங்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கொள்ளளவை அதிகரித்தல், பேரிடர்  முகாமைத்துவம், சுத்தமான  குடிநீர் வழங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு  சார்ந்த முன் எச்சரிக்கை அமைப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் இலங்காவுக்கான புதிய சீனத் தூதர் வெய் …

Continue Reading