செம்மணி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டும்;கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி
-
Editor
-
October 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் இனவழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதிகோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பதில்களையும் நீதியையும் கோரிக் …
Continue Reading
சஜித் செம்மணிக்காகவும் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்; ரவிகரன் எம்.பி.
-
Editor
-
October 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
கவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான நீதியான விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை கோரும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச செம்மணி மனிதப்புதைகுழி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பன்னாட்டு நிபுணர்களின் தலையீட்டுக்காகவும் பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும் தமிழ் தரப்புடன் சேர்ந்து தமிழ் மக்களுக்காகத் துணைநிற்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் 21-10-2026 அன்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு …
Continue Reading
கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்த போது ராஜ் சோமதேவ உறுப்பினர்; கஜேந்திரகுமார் எம்.பி.
-
Editor
-
October 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்த போது அந்த குழுவின் உறுப்பினராக ராஜ் சோமதேவ செயற்பட்டார். ராஜ் சோமதேவ சிங்கள, பௌத்த தேசியவாதி.இவர் நிகழ்சி நிரலொன்றி அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.உள்ளக வவிசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார் …
Continue Reading
இனப்படுகொலை இடம்பெறவில்லையென காண்பிக்கும் முயற்சியா? ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி கேள்வி
-
Editor
-
October 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையானது இங்கு இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற கேள்வித் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்தகால ஆட்சியாளர்களையும் படையினரையும் பாதுகாப்பதிலேயே உறுதியாக இருக்கிறது என்ற விடயம் இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் …
Continue Reading
கிளர்ச்சிகளை முன்னெடுத்த சக்திகளை தேர்தல்களில் மக்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை?
வீரகத்தி தனபாலசிங்கம் தெற்காசியாவில் அண்மைய வருடங்களில் மக்கள் கிளர்ச்சிகளினால் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்ட நாடுகளில் முதலில் இலங்கையில் 2024 ஆண்டு பிற்பகுதியிலும் அடுத்து பங்களாதேஷில் கடந்த வாரமும் தேர்தல்கள் மூலம் புதிய அரசாங்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. மூன்றாவது நாடான நேபாளத்தில் மார்ச் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், மூன்று நாடுகளிலுமே கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கிய சக்திகள் அதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளில் செல்வாக்கைச் செலுத்த முடியாதவையாகப் போயிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்த 2022 ‘ அறகலய ‘ …
Continue Reading
எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கம் அடிபணியாது; அமைச்சரவை பேச்சாளர்
-
Editor
-
October 20, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
வெளிநாட்டு அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தோ அல்லது அழுத்தங்களுக்குப் பணிந்தோ அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடாகும். எவ்வாறாயினும், தற்போது பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், தேவையற்ற மோதல்களில் …
Continue Reading
எழுத்தாளர் தீபச்செல்வனின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரது நூல்கள் தடுத்துவைப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழு
-
Editor
-
October 19, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
எழுத்தாளர் தீபச்செல்வனின் அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறும் வகையில் அவரது இரண்டு தமிழ் நூல்களின் பிரதிகள் சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவ்விரு நூல்களின் சகல பிரதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தீபச்செல்வனால் எழுதப்பட்டு, சென்னையில் அச்சிடப்பட்டு, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘பயங்கரவாதி’, ‘சயனைட்’, ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்’, ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ ஆகிய 4 நூல்களின் 288 பிரதிகள் நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் …
Continue Reading
சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரங்கள்; 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம்
-
Editor
-
October 19, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்கள் தொடர்பில் 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பு, முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் …
Continue Reading
ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க இராஜாங்கதிணைக்கள அறிக்கையில் 2 ஆம் நிலையில் இலங்கை
-
Editor
-
October 19, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில், இலங்கை தொடர்ந்து 5 ஆவது ஆண்டாகவும் 2 ஆம் நிலையை பெற்றுள்ளமை குறித்துப் பெருமையடைவதாகவும், இது ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய மட்டத்திலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்தல், சட்ட அமுலாக்கத்தை மேம்படுத்தல், தடுப்பு முயற்சிகள் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன உள்ளடங்கலாக …
Continue Reading
தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் லக்ஸ்மன் கிரியெல்ல, மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழையானது; மனோ சஜித்துக்கு கடிதம்
-
Editor
-
October 19, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
கண்டி மல்வதுபீட மகாநாயக்க தேரரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ் மற்றும் முஸ்லிம், இலங்கையர்களை தொடர்படுத்தி பேசியமை முற்றிலும் தவறானது.அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை மகிழ்விக்க ஞானசாரர் விவகாரத்தை பயன்படுத்துகிறது என்ற பொருள்படும் வகையில் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளமை வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகும். சிறுபான்மை மக்களை ‘சுலுஜாதி’, பெரும்பான்மை மக்களை ‘மகாஜாதி’ என அடையாளபடுத்துகின்றமை தவறாகும். ஞானசார தேரர் விவகாரத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களை தொடர்புப்படுத்தி பேசுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற …
Continue Reading