கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
-
Editor
-
October 19, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த 6 முஸ்லிம் பெண் சுகாதார உதவி ஊழியர்களை அவர்களது ஹிஜாப் உள்ளிட்ட மத நம்பிக்கை அடிப்படையிலான ஆடைகளை அணியவேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகம் பணித்ததன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்துக்கு முரணான விதத்தில் வைத்தியசாலை நிர்வாகம் ஊழியர்களின் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காண்பித்திருப்பதாகவும், தொழிலில் ஈடுபடுவதற்கான அவர்களது …
Continue Reading
மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன்; ஜனாதிபதி அநுரகுமார
-
Editor
-
October 15, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். சவூதி அரசாங்கத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மீதமுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் எனது அரசாங்கம் தொடர்ந்து வழங்கும். வாழ்வாதாரத்தைத் தேடி நமது நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும், தாங்கள் தனித்து நிற்பதாக ஒருபோதும் உணரக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து சவூதி உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை வரவேற்று …
Continue Reading
தேரர் சிறையில் காவியுடை அணியலாம் பரிந்துரை கையளிப்பு
-
Editor
-
October 15, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
சிறைக்கைதியான தேரர் ஒருவர் ஏதேனுமொரு காரணத்திற்காகச் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அவர் காவியுடை அணிந்திருப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தோ அல்லது நிகாயவிடமிருந்தோ குறித்த காவியுடையை அகற்றுமாறு அறிவித்தல் கிடைக்கும் வரை அவர் காவியுடை தரிக்க முடியும். அதேபோல் பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலடைக்கப்படும் போது, அக்கைதி அதுவரை அணிந்துள்ள காவி உடை அகற்றுவது தொடர்பாக பௌத்த விவகாரத் திணைக்களத்திற்கு அறிவித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏதேனுமொரு வகையில் …
Continue Reading
அனோஜனின் மரணதண்டனை இரத்து; வீடுதிரும்புவதற்காக காத்திருக்கும் குடும்பம்
-
Editor
-
October 15, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட மதம் தொடர்பான கருத்தொன்றின் அடிப்படையில் மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டநிலையில் இலங்கை வெளிவிகார அமைச்சின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீட்டை அடுது;து மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர …
Continue Reading
மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இறுதித் தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின்னரே நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்டத் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான வேலைத்திட்டம் வரும் …
Continue Reading
கிராமப்புற சமூகங்களை வளர்ச்சித் திட்டங்களின் வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களை பங்குதாரர்களாகவும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களாகவும், வளர்ச்சியின் உந்துசக்திகளாகவும் அங்கீகரிக்க வேண்டும். – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கொழும்பில் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஆசிய-பசிபிக் கிராமப்புற மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு மற்றும் (CIRDAP) ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு மைய அறிவுச் சுழற்சி உரையாடலின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறும் ஆசிய-பசிபிக் கிராமப்புற மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கான மாநாடானது, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு மையமும் (CIRDAP) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் …
Continue Reading
கடுமையாக சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு 110 மில்லியன்; உலக வங்கி
தித்வா புயல் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த 600 கிலோமீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கு இலங்கைக்கு 110 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் குழுவின் கீழ் வழங்கப்படும் இந்தப் புதிய நிதியுதவி, சூறாவளியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீண்டும் புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்ட வீதிகள் அமைக்கப்படும். இவை அடிக்கடி மற்றும் தீவிரமாக ஏற்படும் தீவிர வானிலை …
Continue Reading
சீனாவின் ஒத்துழைப்புகள் அரசியல் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அல்ல; சீன தூதுவர்
இலங்கையுடனான தனது நீண்டகால நட்புறவை சீனா தொடர்ந்து பேணும். சீனாவின் உதவிகளும் ஒத்துழைப்புகளும் ஒருபோதும் அரசியல் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அல்ல.எதிர்காலத்திலும் சீனாவின் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் வெய் ஹுவாசியாங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீனா இடையே பொது நிர்வாக சீர்திருத்தங்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கொள்ளளவை அதிகரித்தல், பேரிடர் முகாமைத்துவம், சுத்தமான குடிநீர் வழங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன் எச்சரிக்கை அமைப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் இலங்காவுக்கான புதிய சீனத் தூதர் வெய் …
Continue Reading
தற்காலிக வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்த நடவடிக்கை; மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு தெரிவிப்பு
பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, குறித்த ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க …
Continue Reading
பிரதமர் ஹரிணியின் சிறுவர் தின வாழ்த்து
பல தசாப்தங்களாக, ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கையில் ஒரு சிறப்புமிக்க தினமாக இருந்து வருகின்றது. இத்தினத்தில் நாம் எமது சிறுவர்களைக் கொண்டாடுவதுடன்,எமது முதியோரையும் கௌரவிக்கின்றோம். எமது சமூகத்தை வடிவமைத்த தலைமுறைகளுக்கும், அதேபோன்று அதன் எதிர்காலத்தை வடிவமைக்கவுள்ள தலைமுறைக்குமான எமது பொறுப்பை இத்தினம் எமக்கு நினைவூட்டுகின்றது. எமது சிறுவர்களின் மனங்களை வலுப்படுத்தும்போது எமது நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்துகின்றோம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்து சிறுவர்களுக்கும் எனது உளநிறைவான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை …
Continue Reading