செம்மணி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டும்;கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் இனவழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதிகோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பதில்களையும் நீதியையும் கோரிக் …

Continue Reading

சஜித் செம்மணிக்காகவும் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்; ரவிகரன் எம்.பி.

கவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான நீதியான விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை கோரும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச செம்மணி மனிதப்புதைகுழி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பன்னாட்டு நிபுணர்களின் தலையீட்டுக்காகவும் பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும் தமிழ் தரப்புடன் சேர்ந்து தமிழ் மக்களுக்காகத் துணைநிற்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின்  வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் 21-10-2026 அன்று  நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு …

Continue Reading

கிழக்கு மாகாண  தொல்லியல்  தொடர்பான குழுவை நியமித்த போது ராஜ் சோமதேவ உறுப்பினர்; கஜேந்திரகுமார் எம்.பி.

முன்னாள் ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ஷ  கிழக்கு மாகாண  தொல்லியல்  தொடர்பான குழுவை நியமித்த போது  அந்த குழுவின்  உறுப்பினராக  ராஜ் சோமதேவ செயற்பட்டார்.  ராஜ் சோமதேவ  சிங்கள, பௌத்த தேசியவாதி.இவர்  நிகழ்சி நிரலொன்றி அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம்  வெளிவந்துள்ளது.உள்ளக வவிசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும் என  தமிழ்த் தேசிய முன்னணியின்  தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தினார் …

Continue Reading

இனப்படுகொலை இடம்பெறவில்லையென காண்பிக்கும் முயற்சியா? ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி கேள்வி

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையானது இங்கு இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற கேள்வித் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்தகால ஆட்சியாளர்களையும் படையினரையும் பாதுகாப்பதிலேயே உறுதியாக இருக்கிறது என்ற விடயம் இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் …

Continue Reading

எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கம் அடிபணியாது; அமைச்சரவை பேச்சாளர்

வெளிநாட்டு அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தோ அல்லது அழுத்தங்களுக்குப் பணிந்தோ அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடாகும். எவ்வாறாயினும், தற்போது பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், தேவையற்ற மோதல்களில் …

Continue Reading

சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரங்கள்; 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம்

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்கள் தொடர்பில் 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பு, முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் …

Continue Reading

தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் லக்ஸ்மன் கிரியெல்ல, மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழையானது; மனோ சஜித்துக்கு கடிதம்

கண்டி மல்வதுபீட மகாநாயக்க தேரரிடம்  ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ் மற்றும் முஸ்லிம், இலங்கையர்களை தொடர்படுத்தி பேசியமை முற்றிலும் தவறானது.அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை மகிழ்விக்க  ஞானசாரர் விவகாரத்தை பயன்படுத்துகிறது என்ற பொருள்படும் வகையில் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளமை வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகும். சிறுபான்மை மக்களை ‘சுலுஜாதி’, பெரும்பான்மை மக்களை ‘மகாஜாதி’  என அடையாளபடுத்துகின்றமை  தவறாகும். ஞானசார தேரர் விவகாரத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களை தொடர்புப்படுத்தி பேசுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற …

Continue Reading

கிராமப்புற சமூகங்களை வளர்ச்சித் திட்டங்களின் வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களை பங்குதாரர்களாகவும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களாகவும், வளர்ச்சியின் உந்துசக்திகளாகவும் அங்கீகரிக்க வேண்டும். – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கொழும்பில் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஆசிய-பசிபிக் கிராமப்புற மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு மற்றும் (CIRDAP) ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு மைய அறிவுச் சுழற்சி உரையாடலின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறும் ஆசிய-பசிபிக் கிராமப்புற மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கான மாநாடானது, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு மையமும் (CIRDAP) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் …

Continue Reading

பிரதமர் ஹரிணியின் சிறுவர் தின வாழ்த்து

பல தசாப்தங்களாக, ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கையில் ஒரு சிறப்புமிக்க தினமாக இருந்து வருகின்றது. இத்தினத்தில் நாம் எமது சிறுவர்களைக் கொண்டாடுவதுடன்,எமது முதியோரையும் கௌரவிக்கின்றோம். எமது சமூகத்தை வடிவமைத்த தலைமுறைகளுக்கும், அதேபோன்று அதன் எதிர்காலத்தை வடிவமைக்கவுள்ள தலைமுறைக்குமான எமது பொறுப்பை இத்தினம் எமக்கு நினைவூட்டுகின்றது. எமது சிறுவர்களின் மனங்களை வலுப்படுத்தும்போது எமது நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்துகின்றோம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்து சிறுவர்களுக்கும் எனது உளநிறைவான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய  குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை …

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார சிறுவர் தின வாழ்த்து

சிறுவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய நோக்கத்துடன் செயற்பட்டுவரும் இத்தகைய வேளையில்,’ திடமான உள்ளங்கள்   – வளமான சிறுவர்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் தேசிய சிறுவர்கள் தின வாரத்தைப் பிரகடனப்படுத்தி,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள்,நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளுடன் இம்முறை உலக சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையை நான் பாராட்டுகிறேன்.  நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான  சிறுவர் தின வாழ்த்தினை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க …

Continue Reading