கடுமையாக சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு 110 மில்லியன்; உலக வங்கி

தித்வா புயல் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த 600 கிலோமீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கு இலங்கைக்கு 110 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் குழுவின் கீழ் வழங்கப்படும் இந்தப் புதிய நிதியுதவி, சூறாவளியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள்,   பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீண்டும் புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும்.

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில்  பாதிக்கப்பட்ட வீதிகள் அமைக்கப்படும். இவை அடிக்கடி மற்றும் தீவிரமாக ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தாங்கும் வகையில்,மேம்படுத்தப்பட்ட வடிகால் அமைப்புகள்ஈமண்சரிவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொறியியல் நுட்பங்களைக் கொண்டிருக்கும்.

‘டித்வா சூறாவளி தாக்கமானது இலங்கையின் போக்குவரத்து இணைப்பில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மீண்டும் கட்டியெழுப்புவது என்பது இன்னும் வலுவாக கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பையும் நமக்கு வழங்குகிறது’ என்று இலங்கைக்கான உலக வங்கி குழுவின் நாட்டுப் பணிப்பாளர் ஹெவோர்க் சர்க்சியான் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நிதியுதவியானது தற்போது நடைமுறையிலுள்ள உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கிறது. இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் போக்குவரத்து இணைப்பிற்கான உலக வங்கியின் மொத்த முதலீடு 610 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது.

இந்த முதலீட்டின் மூலம் எட்டு  மாவட்டங்களைச் சேர்ந்த 830,000 க்கும் அதிகமான மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவார்க சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்திட்டத்தின் நன்மைகளைப் பெறுவர். மேலும், புனரமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மூலம் சுமார் 5,671 புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

போக்குவரத்துத் துறை மட்டும் சுமார் 973 மில்லியன் டொலர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதில் சுமார் 2000 கிலோமீட்டர் மாகாண வீதிகள், 3,500 கிலோமீட்டருக்கும் அதிகமான கிராமப்புற வீதிகள் மற்றும் சுமார் 700 பாலங்கள்  என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.. இதிலிருந்து மீள்வதற்கு 1.31 பில்லியன் டொலர்கள் அவசியமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Comment