ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்குமிடையே கலந்துரையாடல்

விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கும் ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டம் ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் Gevorg Sargsyan தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே 13-10-2026  அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒக்டோபர் 30 ஆம் திகதி TRACE Expert City வளாகத்தில் நடைபெறவுள்ள ‘AgriConnect Sri Lanka’ …

Continue Reading

இளைஞர் சமுதாயம் பயனடையக்கூடிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது அவசியம்; உலக வங்கியின் தலைவர்

வேகமாக வளர்ச்சியடைந்துவரும் இளைஞர் சமுதாயம் பயனடையக்கூடியவகையில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, உற்பத்தித்திறன் கொண்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இயலுமையே தற்போதைய மக்கள் தொகை மாற்றத்தின் பெறுபேறைத் தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையகாலத்தில் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களில் வேலைவாய்ப்புக்களின் எதிர்காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரயோகம் என்பன பற்றிக் கருத்துரைத்துள்ள அஜய் பங்கா, அடுத்த 15 ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் சுமார் 120 கோடி இளைஞர்கள் 18 வயதை அடைவார்கள் என்றும், அரசுகளும் நிறுவனங்களும் அவர்கள் முன்னேறுவதற்கு …

Continue Reading

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு முகங்கொடுக்கும் அபாயத்தில் இலங்கை; சர்வதேச நாணய நிதியம்

மிகவேகமாக வயதடைந்துவரும் மக்கள் சனத்தொகைக்கு மத்தியில் இல்ஙகை அதன் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், தொழிலாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. ‘ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைத்தல்: வாய்ப்புகளும் சவால்களும்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையிலேயே சர்வதேச நாணய நிதியம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் பொருளாதாரமானது மக்கள் தொகை சார்ந்த நலன்களுக்கு அப்பால், தற்போது சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகை மற்றும் அதிகரித்துவரும் வயதடைந்தோர் சனத்தொகை என்பவற்றுடன் தொடர்புடைய …

Continue Reading

கண்டி – யாழ்ப்பாணம் வீதியை அகலப்படுத்தி மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி – யாழ்ப்பாணம் வீதியின் குறிப்பிட்ட பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கண்டி – யாழ்ப்பாணம் வீதியின் 58+240 கிலோமீற்றர் முதல் 63+000 கிலோமீற்றர் வரையான பகுதியை அகலப்படுத்துதல் மற்றும் நவீன முறையில் மேம்படுத்துதல் இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய போட்டி விலைமுறிக்கோரல் முறையின் கீழ் இதற்காக மொத்தம் 08 விலைமனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட …

Continue Reading

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இறுதித் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின்னரே நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்டத் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான வேலைத்திட்டம் வரும் …

Continue Reading

இலங்கை விவசாய, உணவு ஏற்றுமதித் துறையினருக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குபெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கையின் விவசாய மற்றும் உணவு ஏற்றுமதித்துறையைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறைப் பங்காளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கினை பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகம் கடந்த வாரம் நடாத்தியது. பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகம் கடந்த 6 ஆம் திகதி இலங்கையின் வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொழில்முனைவோர், விவசாயம் மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெறும் யுபுசுஐNகுழு திட்டம் என்பன இணைந்து, இலங்கையின் விவசாய மற்றும் உணவு ஏற்றுமதித்துறையைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறைப் பங்காளர்களுக்காக …

Continue Reading

4.4 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு,வறுமை 16.9 வீதமாக தொடர்கிறது ; உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டில் 4.4 சதவீதம் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளதுடன், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொருளாதாரம் 4.7 சதவீதம் வளர்ச்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய 2018 ஆம் ஆண்டின் நிலையை மீண்டும் எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், நாட்டின் வறுமை விகிதம் இன்னும் 16.9 சதவீதமாக காணப்படுவதுடன், பொருளாதார மீட்சியின் பயன்கள் அனைத்து மக்களையும் சமமாகச் சென்றடையவில்லை எனவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து 12 காலாண்டுகளாக பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக …

Continue Reading

கடுமையாக சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு 110 மில்லியன்; உலக வங்கி

தித்வா புயல் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த 600 கிலோமீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கு இலங்கைக்கு 110 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் குழுவின் கீழ் வழங்கப்படும் இந்தப் புதிய நிதியுதவி, சூறாவளியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள்,   பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீண்டும் புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில்  பாதிக்கப்பட்ட வீதிகள் அமைக்கப்படும். இவை அடிக்கடி மற்றும் தீவிரமாக ஏற்படும் தீவிர வானிலை …

Continue Reading

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன மத்திய வங்கி அவசியம்; நாணய நிதியத்தின் செயற்திட்டப்பிரதானி

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுயாதீனமாகவும் சிறப்பாகவும் இயங்கக்கூடிய மத்திய வங்கி அவசியமாகும். இதனூடாக தீர்மானம் மேற்கொள்ளலில் தொடர்பற்ற வெளியகத்தரப்பினர் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யமுடியும். இதன் அர்த்தம் மத்திய வங்கி பொறுப்புக்கூறலின்றி செயற்படவேண்டும் என்பதல்ல. மாறாக மத்திய வங்கிக்கான ஆணை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளினாலேயே தயாரிக்கப்படுகின்றது. எனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை உரியவாறு நிறைவேற்றுவதன் ஊடாக மத்திய வங்கி மக்களுக்கும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குமான பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் செயற்படவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான …

Continue Reading

 தற்காலிக  வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்த நடவடிக்கை; மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு தெரிவிப்பு

பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக  வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி  அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, குறித்த ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க …

Continue Reading