செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் போட்டியில் இலங்கை மாறுபட்ட பாதை;  மோதிலால் டி சில்வா

பல பில்லியன் டொலர்கள் மற்றும் எண்ணற்ற தரவு மையங்கள் மூலம் அளவிடப்படும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய போட்டித்தன்மையானது ஒரு ஆயுத ரீதியான போட்டியைப் போல் தீவிரமடைந்துவரும் தற்போதைய சூழ்நிலையில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையை இலங்கை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் தலைவர் கலாநிதி மோதிலால் டி சில்வா வலியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்துக் கருத்துரைத்துள்ள அவர், ‘செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் என்பது பெருநிறுவனங்களுக்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்காது. மாறாக அது  சமகால உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய செயற்திறன்மிக்க, திறமையான …

Continue Reading

பணவீக்கம் அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டின் பின்னர்வீழ்ச்சியடையும்; மத்திய வங்கி எதிர்வுகூறல்

நாட்டின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலும், அடுத்த ஆண்டின் முற்பகுதியிலும் சுமார் 8 சதவீதம் எனும் உயர்வான மட்டத்தில் காணப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, 2027 இன் இரண்டாம் காலாண்டின் பின்னர் இது இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்துக்கு வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (29) நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை (30) கொழும்பிலுள்ள மத்திய …

Continue Reading

நிதிக்குற்றங்களை எதிர்கொள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது; பொலிஸ் மா அதிபர்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நவீன நிதிக்குற்றங்களை எதிர்கொள்ளவும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது என பொலிஸ் மா அதிபர் ஐ.ஜி.பி. பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘தடயவியல் கணக்கியல் மற்றும் விசாரணைக்கான சிறப்பு பீடம்’ தொடக்க இடம்பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) எம்.டி.பி. தயாரத்ன, பட்டயக் கணக்காளர்கள் நிறுவன தலைவர் திஷான் சுபசிங்க, உப தலைவர் அனோஜி …

Continue Reading

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள்தொடர்பில்  தவறான செய்திகள்;  நிதி பிரதியமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வுக்கு முன்னதாக நடாத்தப்பட்ட தொழில்நுட்பக்குழு கலந்துரையாடல்கள், விவாதங்கள் குறித்து சில ஊடகங்கள் தவறாக விளக்கமளிக்கும் வகையிலான செய்திகளைப் பிரசுரித்திருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பன நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் …

Continue Reading

புதிய நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை;சஜித் பிரேமதாச 

நாட்டின் வறுமையை ஒழித்து, ஏற்றுமதியை மேம்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 220 இலட்சம் மக்களுக்கும் நிவாரணம் வழங்கக்கூடிய புதிய சர்வதேச  நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 26-09-2026 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் சுமை கோடிக்கணக்கான …

Continue Reading

ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் உத்தேச திருத்தங்கள் முன்னைய அடைவுகளை பலவீனப்படுத்திவிடக்கூடாது; நாணய நிதியம்

அண்மைய ஆண்டுகளில் ஊழல் ஒழிப்பு தொடர்பான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, இருப்பினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த யோசனைகளால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பலவீனமடைந்துவிடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பன நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளினால் …

Continue Reading

எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கீடு; ஜனாதிபதி அநுர

உலக சந்தையில் எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை. எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கம்பஹாவில் 28-09-2026 அன்று  நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதார முன்னேற்றத்தின் உச்சபயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குவேன். 5000 ரூபா பகிர்ந்தளித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கலாசாரத்தை …

Continue Reading

அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளும் வர்த்தகமும் மிகவும் முக்கியமென வலியுறுத்திய இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்  நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணவும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையு பாரட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்றையதினம் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று, இலங்கையை ஒரு மேம்பட்ட வளர்ச்சிப் பாதைக்கு …

Continue Reading

இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருக்கின்றனர்; சர்வதேச நாணய நிதியம்

உயர்கல்வித்தகைமைகளைக் கொண்ட இலங்கையின் இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது கல்வித்தகைமைகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கும் இடையே நிலவும் தீவிர முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. உயர்கல்வி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை சதவீதத்தில், இலங்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. இலங்கையிலும் ஏனைய தெற்காசியப் பொருளாதாரங்களிலும் இளைஞர்கள் கல்வியை முடித்து வேலைவாய்ப்பைப் பெறுவதில் எதிர்கொள்ளும் கடினமான நிலைமையை இத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் மதிப்பிடப்பட்ட 43 சதவீதத்தைத் தொடர்ந்து, இந்தியா சுமார் 42 சதவீதத்துடனும், பங்களாதேஷ்  …

Continue Reading

இந்தோனேசிய மனிதவள அமைச்சருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜாகார்த்தாவிலுள்ள மனிதவள அமைச்சில் இந்தோனேசிய மனிதவள அமைச்சர் பேராசிரியர் யாசியர்லியை (Prof. Yassierli) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புமுறையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், தொழிலாளர் துறையில் பரஸ்பர நன்மைகளை அடைவதையும் மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் அமைந்தது. இக்கலந்துரையாடலின் போது இருநாடுகளின் தொழிலாளர் சக்தி, வேலைச்சூழல், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு …

Continue Reading