ஜனாதிபதி அநுரகுமார சிறுவர் தின வாழ்த்து
சிறுவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய நோக்கத்துடன் செயற்பட்டுவரும் இத்தகைய வேளையில்,’ திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் தேசிய சிறுவர்கள் தின வாரத்தைப் பிரகடனப்படுத்தி,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள்,நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளுடன் இம்முறை உலக சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையை நான் பாராட்டுகிறேன். நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான சிறுவர் தின வாழ்த்தினை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க …
Continue Reading
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் விஜித்த சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சி, மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸுக்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் விளக்கமளித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனைத்தொடர்ந்து உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியுள்ளார். அச்சந்திப்புக்களின் ஓரங்கமாகவே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ …
Continue Reading
வட மாகாணத்தின் மொத்த சனத்தொகை தொடர்பான மத்திய வங்கியின் தரவுகள் தவறு;சுமந்திரன்
இலங்கை மத்திய வங்கியின் 2026 ஆம் ஆண்டுக்கான சமூக – பொருளாதாரத் தரவு அறிக்கையில் வடக்கு மாகாணத்தின் சனத்தொகை குறைத்துத் தவறாகக் கணிப்பிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான சமூக – பொருளாதாரத் தரவு அறிக்கையில் ‘நாட்டின் விபரம் – 2025’ எனும் தலைப்பின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ள தரவுகளில் இலங்கையின் மொத்த சனத்தொகை 21.756 மில்லியன் எனவும், வடக்கு மாகாணத்தின் சனத்தொகை 557,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அந்த தரவுகளின் பிரகாரம் மேல் மாகாணம், …
Continue Reading
சபாநாயகருக்கு எதிராக 46 குற்றச்சாட்டுக்களுடன் நம்பிக்கையில்லா பிரேரணை; ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
-
Editor
-
September 29, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, முறையற்ற வகையில் பணிக்கு சேவையாளர்களை அமர்த்தியமை உள்ளிட்ட 46 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டம் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடிய போது ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு அமைவாக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, …
Continue Reading
லீபனின் சிலை அகற்றத்துடன் அரசாங்கம் தொடர்புபடவில்லை; அமைச்சர் சந்திரசேகர்
-
Editor
-
September 29, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் 27-09-2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்விதத்திலும் தொடர்படவில்லை. தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒருசில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் …
Continue Reading
எமது சபைக்கும், கட்சித்தலைமைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது; முதல்வர் மதிவதனி
-
Editor
-
September 29, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ்.மாநகர சபையோ அல்லது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கோ தொடர்பில்லை. அச்சிலை அகற்றப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று யாழ்.மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார். யாழ்.நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் வகையில் யாழ்.மாநகர சபையின் முதல்வர் 27-09-2026 அன்று யாழ்.மாநாகரசபை வளாகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 15-09-2026 அன்று எமது மாதாந்த கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உறுப்பினர் …
Continue Reading
நிதிக்குற்றங்களை எதிர்கொள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது; பொலிஸ் மா அதிபர்
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நவீன நிதிக்குற்றங்களை எதிர்கொள்ளவும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது என பொலிஸ் மா அதிபர் ஐ.ஜி.பி. பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘தடயவியல் கணக்கியல் மற்றும் விசாரணைக்கான சிறப்பு பீடம்’ தொடக்க இடம்பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) எம்.டி.பி. தயாரத்ன, பட்டயக் கணக்காளர்கள் நிறுவன தலைவர் திஷான் சுபசிங்க, உப தலைவர் அனோஜி …
Continue Reading
திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபில் வைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக நேற்று மாலையில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தியாக தீபத்தின் திருவுருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக எடுத்துச்செயன்றமையானது, அராஜகமான செயல் என்று கண்டித்ததுடன், அநுர அரசாங்கம் இரட்டை வேடம் கலைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியதோடு அச்சிலை மீளவும் நிறுவப்படும் வரையில் தமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்றும் வலியுறுத்தினர். இந்தப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசிய …
Continue Reading
அனோஜனின் மன்னிப்பு கோர ஆளும்,எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு விரைவில் சவூதி பயணம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த மேன்முறையீடு மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனிடையே,சிவராசா சார்பாக மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த மேன்முறையீடு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் …
Continue Reading
வெடுக்குநாறிமலைக்கு புத்தர் சிலை வந்தமையால் பதற்றம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது. புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, 26-09-2026 அன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக காலை முதலே ஒன்றுகூட ஆரம்பித்தனர். ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே சென்றபோது அங்கு பௌத்ததேரர் தலைமையில் வருகை …
Continue Reading