லீபனின் சிலை அகற்றத்துடன் அரசாங்கம் தொடர்புபடவில்லை; அமைச்சர் சந்திரசேகர்
- Editor
- September 29, 2026
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் 27-09-2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்விதத்திலும் தொடர்படவில்லை. தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒருசில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத் தூண்டவும் பார்க்கிறார்கள்.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசுவதையோ, மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதையோ விடுத்து, கடந்த தேர்தலில் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் செயற்படுகின்றனர்.
நான் மீண்டும் கூறுகின்றேன். திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாநகரசபை எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்காததால் பொலிசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மாநகரசபையும் பொலிஸாரும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே இதுவாகும். அரசாங்கத்தின் நிலைப்பாடு: இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் தேவையான உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

