திலீபனின் 39ஆவது நினைவேந்தல் வட,கிழக்கில் முன்னெடுப்பு
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிரென மதித்து ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 26-09-2026 அன்று வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அரசியல்வாதிகள், சமயத்தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், மாணவர்கள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர். நல்லூர் யாழ்.நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான …
Continue Reading
ரில்வின் குழுவினர் அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பர்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவொன்று நேற்று புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ள நிலையில் அக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் புதுடில்லியில் தங்கியுள்ள இக்குழுவினர் மேற்படி சந்திப்புக்கு மேலதிகமாக பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். அத்துடன், பா.ஜ.க. தலைமையகத்தில் பல்வேறு பா.ஜ.கவின் அணியினரையும் தலைவர்களையும் சந்திப்பதுடன், இந்திய பாராளுமன்றம் …
Continue Reading
“இந்திரா புற்றுநோய் அறக்கட்டளைக்கு வித்திட்ட கருணையின் மறுவுருவம் இந்திரா”
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு தினத்தில் எனது மகள் இந்திராவை கைகளில் சுமந்தேன் . அவளை எண்ணி சில வார்த்தைகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், என் இதயத்தில் உணரப்படும் வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.ஒரு தந்தைக்கு, தனது பிள்ளையின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாளில் அந்தப் பிள்ளை தன் அருகில் இல்லாதிருப்பதைவிட வேதனையான அனுபவம் வேறு இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, அந்தப் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் அன்பையும், கருணையையும், பரிவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு …
Continue Reading
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
-
Editor
-
September 25, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது. அத்துடன், …
Continue Reading
அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி; கட்டாரில் அருண் ஹேமசந்திரா
-
Editor
-
September 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அணுகக்கூடிய உயரிய மட்டங்களில் அணுகி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார். கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, அங்கு நடைபெற்ற சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சவூதி …
Continue Reading
22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல; சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
-
Editor
-
September 23, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை அரசியலமைப்புக்கு முரணல்ல, ஆகவே சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு …
Continue Reading
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; 15 பிரதிவாதிகளுக்கு கடூழியச் சிறை
-
Editor
-
September 23, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகளுக்குக் கடுமையாக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்தது. இதற்கமைய, ஒரு பிரதிவாதிக்கு 260 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 220 ஆண்டுகள் வீதமும், மேலும் ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 200 ஆண்டுகள் வீதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பிரதிவாதிகளுக்கு தலா 240 …
Continue Reading
பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு குழு; அமைச்சர் விஜித்த ஹேரத்
-
Editor
-
September 23, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவுக்கு பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதியினால் சவூதி மன்னருக்கு அனுப்பப்படும் கடிதத்தை சவூதி மன்னரிடம் கையளிப்பதற்காக எமது பாராளுமன்றத்தை சேர்ந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என பிரேரிப்பதுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயங்களின் உணர்வுபூர்வ நிலைமைகளை கவனத்தில்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பாதிப்பான விடயங்களை தவிர்த்துகொள்ளுமாறும் அனைத்து தரப்பினரையும் …
Continue Reading
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் 17 ஆம் ஏற்பாடுக்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை; சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
-
Editor
-
September 23, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
ஊழல் எதிர்ப்பு (திருத்தச் ) சட்டமூலத்தில் ஒருசில ஏற்பாடுகள் அரசியலமைப்பு பிரிவுகளுடன் முரண்படுகிறது. ஆகவே அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் சட்டமூலத்தின் 17 ஆம் ஏற்பாடு அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதுடன், மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற அமர்வின்போது நீதிமன்ற வியாக்கியானத்தை அறிவித்தார். அவர் மேலும் அறிவித்ததாவது, ஊழல் எதிர்ப்பு (திருத்தச்)சட்டமூலத்தின் சட்டமூலத்தின் 3,4,6(4)மற்றும் 6(5) ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானது …
Continue Reading
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; 5 ஊடக அமைப்புக்கள் கூட்டறிக்கை
-
Editor
-
September 23, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இஸ்லாம் போதிக்கும் நற்பண்புகளின் அடிப்படையில் சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பது குறித்துப் பரிசீலியுங்கள். இத்தகைய கருணைமிகு செயல் இலங்கை மக்களால் பெரிதும் போற்றப்படும் என்பதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்பு மற்றும் கௌரவத்தை மேலும் வலுப்படுத்தும் என சவூதி அரேபிய தலைமைத்துவத்திடம் 5 ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் …
Continue Reading