வடக்கு, கிழக்கு, மலையகப் பிரிநிதிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் விசேட சந்திப்பு

இலங்கை வாழ் மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, எவ்வித பேதங்களுமின்றி அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 22-09-2026அன்று  நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர், இனம், மதம், மாகாணம், மாவட்டம் அல்லது கிராமம் என …

Continue Reading

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு

மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, கீழ்வரும் பெயர்களைக் கொண்ட நீதிச்சேவை அதிகாரிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாளை (23) நியமிக்கப்படவுள்ளனர். 01. பெருமாள் சிவகுமார் 02. ஆனந்தி கனகரத்னம் 03. ஞானேச லலித் கன்னங்கர

Continue Reading

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு பின்வருமாறு; அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை (திருத்தம்)”எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன். உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது; • அரசியலமைப்பின் 83-வது உறுப்புரையின் ஏற்பாடுகளின்படி, “அரசியலமைப்பிற்கான …

Continue Reading

அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளும் வர்த்தகமும் மிகவும் முக்கியமென வலியுறுத்திய இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்  நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணவும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையு பாரட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்றையதினம் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று, இலங்கையை ஒரு மேம்பட்ட வளர்ச்சிப் பாதைக்கு …

Continue Reading

இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருக்கின்றனர்; சர்வதேச நாணய நிதியம்

உயர்கல்வித்தகைமைகளைக் கொண்ட இலங்கையின் இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது கல்வித்தகைமைகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கும் இடையே நிலவும் தீவிர முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. உயர்கல்வி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை சதவீதத்தில், இலங்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. இலங்கையிலும் ஏனைய தெற்காசியப் பொருளாதாரங்களிலும் இளைஞர்கள் கல்வியை முடித்து வேலைவாய்ப்பைப் பெறுவதில் எதிர்கொள்ளும் கடினமான நிலைமையை இத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் மதிப்பிடப்பட்ட 43 சதவீதத்தைத் தொடர்ந்து, இந்தியா சுமார் 42 சதவீதத்துடனும், பங்களாதேஷ்  …

Continue Reading

இந்தோனேசிய மனிதவள அமைச்சருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜாகார்த்தாவிலுள்ள மனிதவள அமைச்சில் இந்தோனேசிய மனிதவள அமைச்சர் பேராசிரியர் யாசியர்லியை (Prof. Yassierli) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புமுறையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், தொழிலாளர் துறையில் பரஸ்பர நன்மைகளை அடைவதையும் மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் அமைந்தது. இக்கலந்துரையாடலின் போது இருநாடுகளின் தொழிலாளர் சக்தி, வேலைச்சூழல், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு …

Continue Reading

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, எம். ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் …

Continue Reading

தகவல் அறியும் உரிமை ஆணையகம்: நீதி அணுகலுக்கும் அப்பால் ஒரு பாதுகாப்பு அமைப்பு

ஜீவன் தியாகராஜா இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணையகம் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு, அரசியலமைப்பின் 14ஏ பிரிவின் அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்துகிறது. 2017ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ள இந்த ஆணையம், வெறும் தகவல் வெளியீட்டு நிறுவனமாக மட்டுமன்றி, நீதி அணுகலை எளிதாக்கும் ஒரு முக்கிய கருவியாகவும் படிப்படியாக உருவெடுத்துள்ளதென சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆணையகத்தின் தீர்ப்புகளில் தொடர்ந்து வெளிப்படும் சில அடிப்படைக்கோட்பாடுகள் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. முதலாவதாக, தகவல் அறியும் உரிமை …

Continue Reading

செப்டெம்பர் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. …

Continue Reading

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட …

Continue Reading