அமிர்தலிங்கத்தின் மரபுரிமையும்  அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்திற்கான இலங்கையின் ஜனநாயகத் தெரிவுகளும்

கலாநிதி ஜெகான் பெரேரா அமிர்தலிங்கம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய மதத் தலைவர்களே, அரசியல் தலைவர்களே, சிவில் சமூகத்தைச் சேர்ந்த சக தோழர்களே, பெண்மணிகளே நண்பர்களே,  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக இடம்பெறும  இந்த நினைவுப் பேருரையை ஆற்றுவதற்காக 29 ஓகஸ்ட் 2026 சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உங்கள் முன்னால் நிற்பதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அழைப்பை நான் மிகுந்த நன்றியுடனும் அதேவேளை ஆழமான பொறுப்புணர்வுடனும் ஏற்றுக் கொண்டேன், ஏனெனில் அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசுவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவரைப் …

Continue Reading

முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது இலங்கை

இலங்கை அதன் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தேசிய உணவுக் கட்டுப்பாட்டு முறையை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. உணவுப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் இடர் சார்ந்த அணுகுமுறையின் ஊடாக பொதுச்சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவு முறைகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் இந்தக் கொள்கை விரிவானதொரு கட்டமைப்பை வழங்குகிறது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தலைமைத்துவத்தின்கீழ் உணவுக் கட்டுப்பாட்டு நிர்வாகப்பிரிவின் ஊடாகத் தயாரிக்கப்பட்டுள்ள இக்கொள்கையானது உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான முழு உணவுச்சங்கிலியிலும் உணவுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு இடையிலான …

Continue Reading

இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைந்து பயணிக்க அரசாங்கம் தயார்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, தாம் வணிகங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தற்போதைய நிர்வாகம் நிரூபித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் அரசின் திட்டத்துக்கு அமைவாக இந்த மின்சார ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொலன்னறுவையில் நடைபெற்ற கனவு இலக்கு மக்கள் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொலன்னறுவை புகையிரத நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட …

Continue Reading

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி; இந்தியா – இலங்கை இடையே முக்கிய பேச்சுவார்த்தை

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக வளாகத்தில் நடைப்பெற்றது.  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்து கொண்டனர். அத்துடன் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சகச் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்களா, துறைமுக அதிகார …

Continue Reading

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒருங்கிணைந்த ஏழாவது மறு ஆய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நான்காம் பிரிவு கலந்துரையாடலினை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 தொடக்கம் 23 வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜார்ஜியோ தலைமையிலான இந்த குழு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதுணையுடன் பொருளாதார சீர்த்திருத்தத் திட்டத்தில் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தினையும் அண்மைய பேரியல் பொருளாதார நிகழ்வுகளையும் …

Continue Reading

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Continue Reading

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதியை தவறாகப் புரிந்து கொள்ளுதல்

 கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அரசியல் ரீதியில் மிகுந்த உணர்ச்சிபூர்வமானவையும் சர்ச்சைக்குரியவையுமான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் சென்று விளக்கிக் கூறுவதில் தனது அரசியல் மூலதனத்தை முதலீடு செய்துவருகின்றார். சுலபமான அரசியல் தெரிவுகள் இருக்கின்ற ஒரு நேரத்தில், இனத்துவ. சந்தேகத்தையும் அச்சங்களையும் எதிர் கொள்ளும் கடுமையான பாதையை ஜனாதிபதி தெரிவுசெய்கின்றார். குறிப்பாக, மூன்று பிரச்சினைகளில் ஜனாதிபதியின் கருத்துக்கள் கடுமையான எதிர்வினைகளை தோற்றுவித்திருக்கின்றன. முதலாவதாக, நாட்டின் வடபகுதிக்கு தென்னிலங்கையில் இருந்து பௌத்த யாத்திரிகள்கள் தேசியவாத நோக்கங்களுடன் செல்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்து. …

Continue Reading

கடந்த நூற்றாண்டில் மலாயா

டாக்டர் ஏ. விஸ்வலிங்கம் 1907ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூருக்கு வந்தார் — ஒரு உறுதியான திட்டத்தை விட ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு வயது இளைஞர். புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவப் பள்ளியை — பிற்காலத்தில் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி என்றழைக்கப்பட்டது — அவர் அங்கு கண்டார், மேலும் 1904ஆம் ஆண்டு இதன் நிறுவனத்திற்காக அரசாங்கத்திடம் மனு செய்த சீன சமூகத் தலைவர் தான் ஜியாக் கிம்-மின் தொண்டு நிதி மூலம் பெரும்பாலும் நிதியளிக்கப்பட்ட ஒரு உதவித்தொகையையும் பெற்றார். சீன, …

Continue Reading

தமது வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பு

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நாட்டின் நற்பெயருக்கு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உயர் நீதிமன்றங்களின் கௌரவ நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான நடவடிக்கை, மிகுந்த கவனத்துடன்கூடிய பரிசீலனையுடனும், பல தரப்பினரிடையேயான ஆழமான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாடாகும். இதன்போது,  எந்தவொரு சூழ்நிலையிலும் தமது சொந்த வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும். …

Continue Reading

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லை நீடிப்பு; பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும்

மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான முடிவு எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும்.இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் …

Continue Reading