போர்க்காலம் ஒன்றில் மனிதாபிமானத் தலைமைத்துவம்

கலாநிதி ஜெகான் பெரேரா ஈரானிய கடற்படைக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டினா மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து தோன்றிய நிலைவரத்தைக் கையாளுவதில் அரசாங்கம் கடைப்பிடித்த மனிதாபிமான அணுகுமுறை முற்றிலும் சரியானதே என்று நாட்டில் மிகவும் அரிதான கருத்தொருமிப்பு காணப்படுகிறது. இந்த ஆதரவு கட்சி வேறுபாடுகள் கடந்தும் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளிடமிருந்தும் பரந்தளவில்  வந்திருக்கிறது. இலங்கை மனிதாபிமானக் கோட்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டிருக்கிறது என்ற நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள், அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் பிரதான ஊடகங்களில் வெளியான கருத்தாடல்களில் பெருகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் …

Continue Reading

கிளர்ச்சிகளை முன்னெடுத்த சக்திகளை தேர்தல்களில் மக்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை? 

 வீரகத்தி தனபாலசிங்கம்  தெற்காசியாவில் அண்மைய வருடங்களில் மக்கள் கிளர்ச்சிகளினால் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்ட நாடுகளில் முதலில் இலங்கையில் 2024 ஆண்டு பிற்பகுதியிலும்  அடுத்து பங்களாதேஷில்  கடந்த வாரமும் தேர்தல்கள் மூலம் புதிய அரசாங்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. மூன்றாவது நாடான நேபாளத்தில் மார்ச் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், மூன்று நாடுகளிலுமே கிளர்ச்சிகளுக்கு  தலைமை தாங்கிய சக்திகள் அதற்கு  பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளில்  செல்வாக்கைச்  செலுத்த முடியாதவையாகப் போயிருப்பதைக்   காணக்கூடியதாக இருக்கிறது.  இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்த  2022  ‘ அறகலய ‘ …

Continue Reading

இந்தியாவும் வடக்கு,கிழக்கு  தமிழ் அரசியல் கட்சிகளும்

வீரகத்தி தனபாலசிங்கம்  வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது  மாகாணசபை தேர்தல்களை  விரைவில் நடத்துவதுடன்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு …

Continue Reading

மீட்சி இல்லாமல் நிவாரணம்

கலாநிதி ஜெகான் பெரேரா பெருமளவு உயிரிழப்புகள், நகரங்கள் நிர்மூலம் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டுடன் மத்திய கிழக்கில் விரிவடையும் போர் நெருக்கடி உலகம் பூராவும் இலங்கையிலும் ஏனைய பாரதூரமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்பியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளைக் கொண்டுவந்த படுமோசமான சூறாவளியை இலங்கை அனுபவித்தது. அந்த அனர்த்தங்களின் விளைவாக உடனடியாக பத்து்இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்த அதேவேளை, சுமார் 640 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் வரை காணாமல் போயினர். பல நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின.சில …

Continue Reading

தமிழர்கள் மீதான இந்தியாவின் கரிசனை

வீரகத்தி தனபாலசிங்கம்  வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது  மாகாணசபை தேர்தல்களை  விரைவில் நடத்துவதுடன்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு …

Continue Reading

பதிலீடு செய்யும் முயற்சியின் உள்நோக்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை உள்ளவாறு தொடர்ந்து வைத்திருப்பதா? 

வீரகத்தி தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக  முன்னெடுக்கப்படுகின்ற  மூன்றாவது முயற்சியாகும். அந்த சட்ட வரைவு  குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு  அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய …

Continue Reading

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதியை தவறாகப் புரிந்து கொள்ளுதல்

 கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அரசியல் ரீதியில் மிகுந்த உணர்ச்சிபூர்வமானவையும் சர்ச்சைக்குரியவையுமான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் சென்று விளக்கிக் கூறுவதில் தனது அரசியல் மூலதனத்தை முதலீடு செய்துவருகின்றார். சுலபமான அரசியல் தெரிவுகள் இருக்கின்ற ஒரு நேரத்தில், இனத்துவ. சந்தேகத்தையும் அச்சங்களையும் எதிர் கொள்ளும் கடுமையான பாதையை ஜனாதிபதி தெரிவுசெய்கின்றார். குறிப்பாக, மூன்று பிரச்சினைகளில் ஜனாதிபதியின் கருத்துக்கள் கடுமையான எதிர்வினைகளை தோற்றுவித்திருக்கின்றன. முதலாவதாக, நாட்டின் வடபகுதிக்கு தென்னிலங்கையில் இருந்து பௌத்த யாத்திரிகள்கள் தேசியவாத நோக்கங்களுடன் செல்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்து. …

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மூண்டிருக்கும் விவாதம்

வீரகத்தி தனபாலசிங்கம்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி. ) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.  தன்னை ஒரு  ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியானாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத்  தானும் உயிரை மாய்ப்பதற்கு .’ …

Continue Reading

ஐக்கிய நாடுகளுக்கு குழிபறிக்கும் நோக்குடன்  டொனால்ட் ட்ரம்ப் அமைத்திருக்கும் சமாதான சபை

வீரகத்தி தனபாலசிங்கம்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தில் முன்னெடுத்த கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேசிய மற்றும் சர்வதேசிய நடைமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மீதான அவரின் அலட்சியத்தை தெளிவாக காண்பித்தன.   அவர் தொடக்கிவைத்த செயன்முறைகளும் கொள்கைகளும் அமெரிக்காவை மாத்திரமல்ல,  ஏனைய நாடுகளையும் பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தை தோற்றுவித்திருக்கின்றன.  உலக ஒழுங்கு ஒன்று தலைகீழாக திருப்பப்படுகின்றது. கடந்த மாத முற்பகுதியில் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவுக்குள் துருப்புக்களை அனுப்பி ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்காவுக்கு கடத்திச் …

Continue Reading

நிலையான தீர்வுகள் ஒருதலைப்பட்சமான தீர்வுகளாக இருக்க முடியாது

கலாநிதி ஜெகான் பெரேரா ஆழமாக வேருன்றிய இன, மத மற்றும் மொழிப் பிளவுகளைக் கொண்ட இலங்கை போன்ற பன்முக சமுதாயமொன்றில் பிரச்சினைகளும் தீர்வுகளும் சகல தரப்புகளையும் அரவணைக்கும் மனமார்ந்த அணுகுமுறை ஒன்றை வேண்டிநிற்கின்றன. வலிமையான அடையாளங்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்களினால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வுகளைக் காணவேண்டியிருப்பதே இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்துக்கும் இருக்கும் முக்கியமான சவாலாகும். பிளவுபட்ட சமுதாயங்களில் ஜனநாயக முறைமைகளின் நீடித்து நிலைக்கும் தன்மை தேர்தல் வெற்றிகளை விடவும் பெருமளவுக்கு. நிறுவனமயப்பட்ட அரவணைப்பு, கலந்தாலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகள் …

Continue Reading