அரசாங்கத்தை தூக்கி வெள்ளத்தில் எறிவதற்கு இது நேரமல்ல

வீரகத்தி தனபாலசிங்கம்  2004 டிசம்பர் சுனாமியே இலங்கை அதன் அண்மைய வரலாற்றில் முகங்கொடுத்த  படுமோசமான இயற்கை அனர்த்தமாகும்.  அடுத்த பெரிய அனர்த்தம் ‘டித்வா ‘  சூறாவளியும் அதன் விளைவாக ஏற்பட்ட கடந்த வாரத்தைய  வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளுமேயாகும். யேமன் நாட்டில் உள்ள வனப்புமிகு ஏரி ஒன்றின் பெயரிடப்பட்ட இந்த இந்த  சூறாவளியின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சொத்து அழிவுகளையும் பற்றிய முழுமையான  விபரங்களை அறிந்து கொள்வதற்கு பல வாரங்கள் செல்லலாம். ஆனால், இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம் என்று   அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய …

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்

  வீரகத்தி தனபாலசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த  ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின்  இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை  முன்னெடுக்குமாறு  இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல்  தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும்  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்  தமிழர்களுக்கு …

Continue Reading

புத்தாண்டில் சகல தரப்புகளையும் அரவணைத்து கலந்தாலோசனையின் மூலமாக நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும்

 கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது,  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை உறுதிகுலையச் செய்துவிடும் என்று சனத்தொகையில் செல்வாக்குமிக்க பிரிவுகள் மத்தியில் நிலவியா அச்சவுணர்வு இல்லாமல் செய்யப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. வலிமை வாய்ந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைமைத்துவத்துடன் கூடிய புதிய அரசாங்கம் மார்க்சியப் பாரம்பரியத்தில் தனியார் சொத்துடைமையை மதிக்காமல் இருக்கக்கூடும் என்று விசனம் வெளிப்படுத்தப்பட்டது. அது மெய்யாகவில்லை. எந்தவிதமான கொந்தளிப்பும் இல்லாமல,  ஆட்சிமுறையில் முறிவு ஏற்படாமல் மிகவும் சுமுகமான நிலைமாறலை அரசாங்கம் செய்து கொண்டது. …

Continue Reading

ஆபத்துக்குள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

 வீரகத்தி தனபாலசிங்கம்  தனது முதலாவது பதவிக் காலத்தில் ( 2016 — 2020 ) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக  ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025   ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில்  எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று  அவர் தானாகவே கேட்டார். அந்த பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.   இரண்டாவது பதவிக் …

Continue Reading

அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் 

வீரகத்தி தனபாலசிங்கம்  இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில்  இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு  முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு  மத்தியில்  இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள்.  இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022   பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில்  ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான  முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது.  மக்களின் மாபெரும்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் …

Continue Reading

முட்டுக்கட்டை நிலையில் இருந்து தேசிய நலனுக்காக கருத்தொருமிப்புக்கு …!

கலாநிதி ஜெகான் பெரேரா கணக்காய்வாளர் நாயகமாக. சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்னவின் நியமனம் இலங்கையின் மிகவும் முக்கியமான அரசியலமைப்புப் பதவிகளில் ஒன்று தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவிய நிச்சமற்ற நிலையை. முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்னர் அந்த பதவியில் இருந்தவர் 2025 ஏப்ரிலில் ஓய்வுபெற்றதை தொடர்ந்து சுமார் பத்து மாதங்களாக நீடித்த வெற்றிடத்துக்கு நியமனத்தைச் செய்வதற்கு  அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக எடுத்த தீர்மானம் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தொடர்ச்சியை மீள உறுதிப்படுத்துவதுடன்  இலங்கையின் அரசியலமைப்பு ஆட்சிமுறை எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது என்பது …

Continue Reading

இந்தியாவும் வடக்கு,கிழக்கு  தமிழ் அரசியல் கட்சிகளும்

வீரகத்தி தனபாலசிங்கம்  வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது  மாகாணசபை தேர்தல்களை  விரைவில் நடத்துவதுடன்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் தித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு …

Continue Reading

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாகாணசபை தேர்தல்களும் 

 வீரகத்தி தனபாலசிங்கம்  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு   முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு முயற்சி எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதும்  சிறுபான்மைச் சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயம் விரும்பவில்லை என்பதும் வரலாறு ரீதியாக எமக்கு கிடைத்த அனுபவம்.  இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே மாகாண சபைகள் முறை கொண்டுவரப்பட்டது.  அதையும் கூட 38  வருடங்களாக அரசாங்கங்கள் உருப்படியாக செயற்பட அனுமதிக்கவில்லை. அதிகாரப்பகிர்வுக் கோட்பாட்டை அர்த்தமற்றதாக்கும் வகையில்  கடந்த ஏழு வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் மாகாண சபைகள்  ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்துவருகின்றன.  …

Continue Reading

பொருளாதார வளர்ச்சிக்காக தேசிய ஐக்கியத்தைப் பயன்படுத்துதல்

கலாநிதி ஜெகான் பெரேரா தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 2026 பட்ஜெட் பொதுவில் நன்றாக வரவேற்கப்பட்டிருக்கிறது  . பட்ஜெட்டை பாராட்டிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தின  தலைவர் கிரிஷான் பாலேந்திரா தனியார் துறையின் கருத்துக் கோணத்தில் பார்க்கும்போது அது உறுதிப்பாட்டை உறுதிப்பாட்டை தருகிறது என்று கூறினார். 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எம்மால் காணக்கூடியதாக இருந்த ஒழுங்குமுறையையும் அடுத்து உயர்ந்த பணவீக்கத்தினாலும் செலாவணி வீதங்களின் வீழ்ச்சியினாலும் பல வருடங்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் சென்ற அதே பாதையில் கீழிறங்கிச் செல்வதை இலங்கை தவிர்த்திருக்கிறது …

Continue Reading

கரூர் அனர்த்தமும் விஜயின் அரசியல் எதிர்காலமும்

வீரகத்தி தனபாலசிங்கம் இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம் விளையாட்டுப் சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.  ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில்  கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின்  தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள்,   உட்பட 41 பேர் …

Continue Reading