மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இனிமேலும் அரசியலில் மீட்சி உண்டா?
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி ‘ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயலில் இறங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை ‘ தோற்கடிப்பதற்காக எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் ஆடம்பரமான அரச மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச …
Continue Reading
நல்லிணக்கத்தை யதார்த்தமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய தருணம் இது
-
Editor
-
January 15, 2026
-
பத்திகள்
-
பத்திகள்
-
0 Comments
கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கை மீண்டும் நெருக்கடியானதும் தீர்க்கமானதுமான கட்டத்தில் இருக்கிறது. பல தசாப்தங்களாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களுக்கும் தாமதிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு பிறகு இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான நிலைமைகள் தற்போது இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையின் நிறுவனங்களின் ஊடாக நாட்டின் மிகவும் நீணடதும் மக்களைப் பிளவுபடுத்தியதுமான நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. கடந்த அரசாங்கங்கள் உறுதியளித்த போதிலும், நிறைவேற்றத் தவறிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கும் வசதியாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு …
Continue Reading
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
-
Editor
-
January 12, 2026
-
பத்திகள்
-
பத்திகள்
-
0 Comments
வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு நாளை மறுதினம் செவ்வாய்கிழமையுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 வாக்குகளை பெறாவிட்டாலும், இலங்கையில் இடதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஜனநாயக தேர்தலின் மூலம் முதற்தடவையாக ஆட்சியதிகாரத்துக்கு சந்தர்ப்பமாக அது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தெற்காசியாவில் …
Continue Reading
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
-
Editor
-
January 5, 2026
-
பத்திகள்
-
பத்திகள்
-
0 Comments
வீரகத்தி தனபாலசிங்கம் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வவுனியா நகரில் நவம்பர் 5 ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை …
Continue Reading
வழமையான நீதியா அல்லது நிலைமாறுகால நீதியா?
-
Editor
-
January 2, 2026
-
பத்திகள்
-
பத்திகள்
-
0 Comments
கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்றத்தில் கடந்தவாரம் உரையாற்றியபோது கடந்த காலத்தின் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் கடப்பாட்டை உறுதிப்படுத்திய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க , ” கடந்த காலத்தின் இந்த கவலைக்குரிய மரபுகளுக்கு வெளிப்படையாக, உறுதியாக, சகல சமூகங்களினதும் உணரவுகளைப் புரிந்துகொண்டு முகங்கொடுப்போம்” என்று கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தை பற்றி விசேடமாக குறிப்பிட்ட அவர், ” அது எமது வரலாறாறில் மிகவும் ஆபத்தான, பெரிதும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டமாகும் ” என்று கூறினார். தமிழ் தீவிரவாத இயக்கத்தின் ஆரம்பக் …
Continue Reading
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
வீரகத்தி தனபாலசிங்கம் தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை பதவி கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதே போன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது. இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஷேய்க் …
Continue Reading
2025 ஆம் ஆண்டிலும் கூட கறுப்பு ஜூலை ஏன் கவனத்தில் எடுக்க வேண்டியதாக இருக்கிறது?
கலாநிதி ஜெகான் பெரேரா தலைநகர் கொழும்பிலும் நாடு பூராவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படவும் பல்லாயிரக்கக்கானவர்கள் இடம்பெயரவும் வழிவகுத்த வழிவகுத்த தமிழர் விரோத இனவன்செயலின் 42 வது வருடாந்தத்தை இவ்வாரம் குறித்து நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் 1983 ஜூலை 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணி ஒன்றின் மீது விடுதலை புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 13 படைவீரர்கள் பலியான சம்பவமே கொழும்பில் முதலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மூளவைத்தது. அதைத் தொடர்ந்து வந்த ஒருவாரத்தைப் பற்றிய உண்மையை கண்டறிவது இன்னமும் கூட கஷ்டமானதாகவே இருக்கிறது. …
Continue Reading
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்
வீரகத்தி தனபாலசிங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும்இடையில்தகராறுக்குரியஒருபிராந்தியமாககச்சதீவுஇருந்திருந்தால்கடந்தவாரம்( செப்டெம்பர்1) ஜனாதிபதிஅநுரகுமாரதிசநாயக்கதரிசுநிலமாகக்கிடக்கும்அந்ததீவுக்குமேற்கொண்டமுன்கூட்டியேஅறிவிக்கப்படாதவிஜயம்சர்ச்சைதோன்றுவதற்குகாரணமாகஇருந்திருக்கமுடியும். என்றாலும்கூட, இலங்கைக்குசொந்தமானநிலப்பரப்புக்கு அதன்ஜனாதிபதிசெய்தவிஜயம்அரசியல்மற்றும்இராஜதந்திரஉரையாடல்களில்ஒருமையப்பொருளாககச்சதீவைமாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் அவதானியுமான நிருபமா சுப்பிரமணியன் ” இலங்கையின் ஒரு தீவிடமிருந்து சமிக்கை ” ( Signal From a …
Continue Reading
ரணிலின் கைதும் விளக்கமறியலும் எதிரணி கட்சிகள் மக்களை அணிதிரட்டுவதற்கு உதவக்கூடிய கருவிகளா?
வீரகத்தி தனபாலசிங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘ சாதனைகளுக்கு ‘ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் தேர்தல் …
Continue Reading
ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கோலங்கள் சொல்லிச்சென்ற செய்தி என்ன?
வீரகத்தி தனபாலசிங்கம் ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடத்திய ஹர்த்தால் போராட்டம் முழு நாட்டையுமே செயலிழக்க வைத்தது. அரசாங்கம் மக்களின் சீற்றத்துக்கு பயந்து அதன் அமைச்சரவைக் கூட்டத்தை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஷ் கப்பலில் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. …
Continue Reading