நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்; இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி

முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படையான நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிகளைத் தயாரித்தல் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எனவே நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெறும் 2026 – இலங்கை பொருளாதார …

Continue Reading

மீட்சி இல்லாமல் நிவாரணம்

கலாநிதி ஜெகான் பெரேரா பெருமளவு உயிரிழப்புகள், நகரங்கள் நிர்மூலம் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டுடன் மத்திய கிழக்கில் விரிவடையும் போர் நெருக்கடி உலகம் பூராவும் இலங்கையிலும் ஏனைய பாரதூரமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்பியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளைக் கொண்டுவந்த படுமோசமான சூறாவளியை இலங்கை அனுபவித்தது. அந்த அனர்த்தங்களின் விளைவாக உடனடியாக பத்து்இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்த அதேவேளை, சுமார் 640 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் வரை காணாமல் போயினர். பல நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின.சில …

Continue Reading

அரசு வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை சந்திரகுமார் செவ்வி

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரவும் தேசிய மக்கள் சக்தியும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அவை எதனையும் தற்போது வரையில் நிறைவேற்றவில்லை என்று சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் பங்கேற்பதற்கான காரணம் என்ன? பதில்: கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் பின்னர் தமிழ்க்கட்சிகளினுடைய கூட்டிணைவு பற்றி பேசப்பட்டது. அந்த வகையில் கொள்கைகள் மற்றும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளை கையாளல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் …

Continue Reading

எமக்கு சுமந்;திரனின் தேவை  ஒருபோதும் ஏற்படாது : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் செவ்வி

எமக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனின் தேவை ஒருபோதும் ஏற்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன ஆகியோர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்படுகின்றமைக்கான காரணம் என்ன? பதில்: மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக எந்தவிதமான …

Continue Reading

செயற்கை வளர்ச்சியை உருவாக்க  முயன்றால் மீண்டும் நெருக்கடியே கலாநிதி.இந்திரஜித் குமாரசுவாமி செவ்வி

வரவு,செலவுத்திட்ட பற்றாக்குறையை அதிகரிப்பதன் மூலமோ, செயற்கையாக வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலமோ வளர்ச்சியை உருவாக்க முயன்றால் அது எதிர்காலத்தில் மீண்டும் பெரிய நெருக்கடிக்கே வழிவகுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி.இந்திரஜித் குமாரசுவாமி வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.அதன் முழுவடிவம் வருமாறு, கேள்வி: தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? பதில்: இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட எவரும் தற்போது கவலையடையவே செய்வார்கள். நாம் கடந்த முறை பெரிய நெருக்கடியைக் கடந்து வந்து, அதில் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டோம். அதற்காக …

Continue Reading

மாகாண தேர்தலை நடத்தாமை அரசியலமைப்பு அவமதிப்பாகும்:  சுனில் ஜயசேகரவின் நேர்காணல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமலிருப்பது அரசியலமைப்பு அவமதிப்பாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர வழங்கிய நேர்காணலின் முழுமையான வடிவம்: கேள்வி: மாகாண சபை அமைப்பின் தற்போதைய நிலை குறித்த விரிவான விளக்கத்துடன் இந்த உரையாடலைத் தொடங்குவோமா? பதில்: மாகாண சபைகள் என்பவை இந்த நாட்டின் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட பிரதான மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களாகும். அதுமட்டுமன்றி, நாட்டின் நிர்வாகம் தொடர்பான பல துறைகளில், குறிப்பாகச் சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம் போன்றவற்றில் அடிப்படை ஆளுகை அதிகாரங்களைக் கொண்ட ஒரு …

Continue Reading

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13க்குள் தீர்வு காணப்பட வேண்டும் மரிக்கார் எம்.பி. செவ்வி

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் வரம்புகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக உள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, பதில்: தற்போதைய அரசியல் சூழலை பற்றி மிகவும் சுருக்கமாகச் சொல்வதானால், அது ஏமாற்றமும் கொந்தளிப்பும் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட மாபெரும் …

Continue Reading

பதவிகளுக்காக யாரிடமும்m மண்டியிடப்போவதில்லை – அனந்தி சசிதரன்

2013ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் ஒரு சாதாரணப் பெண்ணாகப் போட்டியிட்டுஇ ஈழப் போராட்டத்தின் சாட்சியாகவும்இ ஒரு போராளியின் மனைவியாகவும் மக்கள் முன் நின்று சாதனை வாக்குகளைப் பெற்றவர் அனந்தி சசிதரன் தற்போது ஈழவர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடருகிறார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறுஇ கேள்வி: அனந்தி சசிதரன் என்கிற ஆளுமை கடந்த சில காலமாக அரசியல் தளத்தில் சற்று மௌனமாக இருந்ததாக உணரப்படுகிறது. எங்கே சென்றிருந்தீர்கள்? இந்த இடைவெளிக்கு என்ன காரணம்? பதில்: அனந்தி …

Continue Reading

உள்நாட்டு பொருளாதாரத்தினை உடன் வலுப்படுத்தாதுவிட்டால் மீண்டும் நெருக்கடி – கலாநிதி அகிலன் கதிர்காமர்

கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பன்முகப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனைச் செய்யத் தவறினால், சர்வதேச நெருக்கடிகளின் போது இலங்கை மீண்டும் பொருளாதாரச் சரிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: தற்போதைய ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? இது உலக நாடுகளுக்கு எத்தகைய செய்தியைச் சொல்கிறது? பதில்: தற்போதைய சூழல் என்பது அனைத்து …

Continue Reading

இலங்கை யாருடன் நெருக்கமாக  செயற்படுகிறது என்ற விடயத்தை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் செவ்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயற்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும் என்று இலங்கை மற்றும் இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஈரானுடனான போர் தொடர்பில் அவர் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின் முக்கியமான விடயங்களின் தமிழ் வடிவம் வருமாறு, …

Continue Reading