பதவிகளுக்காக யாரிடமும்m மண்டியிடப்போவதில்லை – அனந்தி சசிதரன்
- Editor
- June 7, 2026
- கருத்துக்கள், தமிழ் Header
- கருத்துக்கள்
- 0 Comments
2013ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் ஒரு சாதாரணப் பெண்ணாகப் போட்டியிட்டுஇ ஈழப் போராட்டத்தின் சாட்சியாகவும்இ ஒரு போராளியின் மனைவியாகவும் மக்கள் முன் நின்று சாதனை வாக்குகளைப் பெற்றவர் அனந்தி சசிதரன் தற்போது ஈழவர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடருகிறார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறுஇ
கேள்வி: அனந்தி சசிதரன் என்கிற ஆளுமை கடந்த சில காலமாக அரசியல் தளத்தில் சற்று மௌனமாக இருந்ததாக உணரப்படுகிறது. எங்கே சென்றிருந்தீர்கள்? இந்த இடைவெளிக்கு என்ன காரணம்?
பதில்: அனந்தி சசிதரன் எங்கும் போய்விடவில்லை. ஈழத் தமிழ்ப் பரப்பில்இ குறிப்பாக அரசியல் களத்தில் பயணிக்கின்ற பெண்களுக்குப் பல அடுக்குச் சவால்கள் உள்ளன. 2013இல் நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த சூழல் வேறு. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப் பெரியது. ஆனால்இ அந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகுஇ தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்இ கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மற்றும் தனிப்பட்ட ரீதியாக நான் எதிர்கொண்ட அழுத்தங்கள் காரணமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டது.
பெண் அரசியல்வாதிகள் இலங்கையில்இ குறிப்பாக வடக்கில் இயங்குவது என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. நாங்கள் பேசினால் அது விமர்சிக்கப்படும்இ அமைதியாக இருந்தாலும் விமர்சிக்கப்படும். இந்த இடைவெளியில் நான் எனது ஈழவர் சுயாட்சி கழகத்தைக் கட்டியெழுப்புவதிலும்இ அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிவதிலும் கவனம் செலுத்தினேன். மௌனம் என்பது பின்வாங்குதல் அல்லஇ அது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான ஆயத்தமாகும்.
கேள்வி: வடமாகாண சபையில் நீங்கள் அமைச்சராக இருந்தபோது உங்களால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே? குறிப்பாக நிதி விவகாரங்கள் குறித்துப் பேசப்படுகிறதே?
பதில்: வடமாகாண சபையில் நான் மகளிர் விவகார அமைச்சராக இருந்தபோது எமது கைகள் கட்டப்பட்டிருந்தன என்பதே உண்மை. மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மிகக் குறைவு. அதற்குள்ளும் நிர்வாக ரீதியாகப் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. 35 மில்லியன் ரூபாய் நிதி விவகாரம் பற்றிப் பேசுகிறார்கள். உண்மையில்இ அந்த நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த நான் முற்பட்டபோதுஇ மாகாண சபையின் தலைமைப்பீடம் மற்றும் சில அதிகாரிகள் அதற்குத் தடையாக இருந்தனர்.
நியதிச் சட்டங்களை உருவாக்கிஇ முறைப்படி பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவர நான் போராடினேன். ஆனால்இ சபையின் அவைத்தலைவர் போன்றவர்கள் நிர்வாகச் சிக்கல்களைக் காட்டி அந்தத் திட்டங்களை முடக்கினார்கள். ஊழல் மோசடிகள் மாகாண சபையின் சில மட்டங்களில் இருந்ததை நான் சுட்டிக்காட்டியபோதுஇ நான் ஒரு ‘கட்டுப்பாடற்ற பெண்ணாக’ சித்தரிக்கப்பட்டேன். ஒரு போராளியின் மனைவியாக நான் எதற்கும் அஞ்சாமல் உண்மையைச் சொன்னது பலருக்குப் பிடிக்கவில்லை.
கேள்வி: உங்களுக்கு அரசியலில் ஒரு பெரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது இலங்கைத் தமிழரசு கட்சி. ஆனால்இ அந்தக் கட்சியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டதற்கும்இ உங்கள் மீதான ஒழுக்காட்டு நடவடிக்கைகளுக்கும் நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன?
பதில்: தமிழரசு கட்சி எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால்இ அந்த வாய்ப்பு என்பது மக்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஆணை. நான் கட்சித் தலைமைக்கு அடிபணிந்து நடப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால்இ நான் மக்களின் உணர்வுகளுக்கு மட்டுமே அடிபணிந்தேன். குறிப்பாகஇ ஜெனீவா விவகாரங்களில் தமிழரசு கட்சியின் சில நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தபோது நான் அதைக் கண்டித்தேன்.
கட்சி தீர்மானத்திற்கு எதிராகச் செயற்பட்டதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால்இ அநியாயம் நடக்கும்போது தட்டிக்கேட்கும் ஒரு பண்பு எனக்குள் எப்போதும் உண்டு. அன்று கட்சியின் மத்திய குழுவில் ஜனநாயகம் இருக்கவில்லை. ஒரு சிலரின் விருப்பமே கட்சியின் முடிவாக இருந்தது. இன்று அந்தக் கட்சிக்குள் நடக்கும் பிளவுகளைப் பார்க்கும்போதுஇ நான் அன்று சொன்னது எவ்வளவு உண்மை என்பது மக்களுக்குப் புரியும். ஸ்ரீதரன் போன்ற தலைவர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டபோதுஇ நான் வெளியே நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்தேன். கொள்கைக்காகக் கட்சியைத் துறப்பதில் எனக்குத் தயக்கம் இருந்ததில்லை.
கேள்வி: இன்றும் கூட பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியலில் இருக்கும் பெண்களும் கூட காலப்போக்கில் ஒதுங்கிச் செல்கிறார்களேஇ இதற்கு என்ன காரணம்?
பதில்: இது ஒரு ஆணாதிக்கச் சமூகம் என்பது அரசியலில் மிகத் தெளிவாகத் தெரியும். பெண்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. ‘பெண் ஆளுமை’ என்று மேடையில் பேசுவார்கள்இ ஆனால் நடைமுறையில் ஒரு பெண் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வருவதை ஆண்கள் விரும்புவதில்லை.
பெண்களுக்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் ஒரு ‘சலுகையாகவே’ பார்க்கின்றன. தேர்தலில் 25 சதவீத இடஒதுக்கீடு என்று சட்டம் இருந்தாலும்இ வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மேலும்இ அரசியலில் இருக்கும் பெண்களைச் சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்த அல்லது அவர்களின் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் நிற்க வேண்டும் என்றால்இ அவருக்குப் பெரும் மனவலிமை தேவை.
கேள்வி: அரசியலுக்கு வர விரும்பும் இளம் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அவர்களுக்கு எத்தகைய தயார்நிலை தேவை?
பதில்: வெறும் உணர்ச்சிவசப்பட்டு அரசியலுக்கு வரக்கூடாது. பெண்களுக்கு முதலில் அடிப்படை அரசியல் அறிவு தேவை. எமது போராட்ட வரலாறு என்ன? சர்வதேச அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கின்றன? அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் என்ன? என்பவற்றைத் துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாகஇ பொருளாதாரச் சுதந்திரம். ஒரு பெண் பிறரைச் சார்ந்து இருக்கும்போதுஇ அவரது அரசியல் முடிவுகளும் பிறரால் தீர்மானிக்கப்படுகின்றன. மூன்றாவதாகஇ தைரியம். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். நான் அரசியலுக்கு வந்தபோது என் மீது எத்தனையோ சேறு பூசல்கள் நடந்தன. ஆனால்இ நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அந்தத் தைரியமே ஒரு பெண்ணை அரசியலில் நிலைநிறுத்தும்.
கேள்வி: மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அனந்தி சசிதரன் போட்டியிடுவாரா? உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
பதில்: நான் மக்களின் சேவகி. தேர்தல் என்பது ஒரு களம் மட்டுமே. வடமாகாண சபைத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டால்இ எமது ஈழவர் சுயாட்சி கழகம் நிச்சயம் போட்டியிடும். ஆனால்இ அது ஒரு கொள்கை ரீதியான அணியாக இருக்கும். பதவிக்காக யாரிடமும் மண்டியிடமாட்டோம். மக்களுக்காக உண்மையாக உழைக்கக்கூடியஇ மக்களின் வலிகளைச் சுமக்கக்கூடிய ஒரு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

