நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத்திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு
நீதித்துறை நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பரந்த வேலைத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினருடனும் கலந்துரையாடிச் செயல்படுத்துவதே பொருத்தமானது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் சுதந்திரம் குறித்து சந்தேகங்களை எழுப்பக்கூடிய அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்வததைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மகாநாயக்க தேரர்கள் தங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு …
Continue Reading
எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் முஸ்லிம் எம்.பிக்களுடன் கலந்துரையாடல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. இச்சந்திப்பின்போது, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக …
Continue Reading
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி 90 சதவீதம் நிறைவு; அமைச்சர் சுசில் ரணசிங்க
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தற்போது 90 சதவீதமளவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் 10-08-2026 அன்று இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எஞ்சியுள்ள 10 சதவீத நிலக்கண்ணி வெடி அகற்றும் பகுதிகள், சுமார் 20.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், அவை மிகவும் சிக்கலான காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களாகும். இத்தகைய சவால்கள் …
Continue Reading
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வு
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் …
Continue Reading
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் வெற்றியடைந்துள்ளது; ரோசமண்ட் பைக்
இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது என உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார். உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் 10-08-2026 அன்று அமைச்சின் காரியாலயத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் …
Continue Reading
ஏற்றுமதி, வேலைவாய்ப்புமற்றும்வளர்ச்சி: இலங்கையின்வர்த்தகக்கொள்கைதொழிலாளர்நல்வாழ்வைஉறுதிசெய்ததா?
-
Editor
-
August 11, 2026
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
திசுரி ரோஜி ஏகநாயக்க 1970களின் பிற்பகுதியில் இலங்கை தனது பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியபோது, கொள்கை வகுப்பாளர்கள் ஒரு புதிய பொற்காலத்தை வாக்குறுதி அளித்தனர். தொழிற்சாலைகளின் பெருக்கமும், ஏற்றுமதி வர்த்தகத்தின் விரிவாக்கமும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், நான்கு தசாப்தங்கள் கடந்தும் அந்த வாக்குறுதி எவ்வளவு தூரம் நிறைவேறியுள்ளது என்பது இன்றும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் கீழ் ஆய்வாளர் திசுரி ரோஜி ஏகநாயக்க மேற்கொண்ட ஆய்வு, இந்த வரலாற்றை மீள்பார்வை செய்கிறது. …
Continue Reading
ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், தற்போது அமலில் உள்ள சட்டத்தை பலவீனப்படுத்தாத வகையில் அமைய வேண்டும்
ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள், நாட்டில் ஊழலுக்கு எதிராக உருவாகியுள்ள பொதுமக்களின் நிலைப்பாட்டிற்கு முரணானவையாக இருப்பதோடு, ஊழலை எதிர்க்கும் வகையில் நாடாக நாம் உறுதிப்படுத்தியுள்ள சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகவும் கருதப்படலாம். இவ்விடயம் தொடர்பாக சமூகத்தின் முழுமையான கவனத்தையும் நாம் ஈர்க்க விரும்புகின்றோம். ஏனெனில், 2023 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்படுவதற்காக பங்களித்த தரப்புகளில் ஒன்றாக நாம் இருந்தோம். அச்சட்டம் அப்போது சமூகத்தின் அனைத்து தரப்பினரின் வலியுறுத்தல்களையும் மதித்து நிறைவேற்றப்பட்டது. எனவே, அதன் அடிப்படை நோக்கங்களுக்கு புறம்பாகச் செயல்படாதிருப்பது நாட்டின் …
Continue Reading
இலங்கை அரசாங்கத்தின் எண்ணப்போக்கு என்னவென்பதை அறிய முற்பட்ட இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி
இலங்கையில் தாம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமது தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை எனவும், மாறாக அவற்றைத் துரிதமாக முன்னெடுப்பதற்கே தாம் விரும்புவதாகவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருப்பினும் இந்தியத்தரப்பு தாமதிப்பதாகக் கூறி இலங்கை அரசாங்கமே இவ்விடயத்தைத் தட்டிக்கழித்து வருகிறது எனும் பொருள்பட விளக்கமளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு …
Continue Reading
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது …
Continue Reading
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் சந்திப்பு
நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது முக்கிய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம்;, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
Continue Reading