எங்களுக்கென ஒரு மாகாண சபை கிடையாது;விக்ரம் மிஸ்ரியுடனான சந்திப்பில் மலையக கட்சிகள் வலியுறுத்து

நாட்டின் எதிர்வரும் காலங்களில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல், புதிய அரசிலமைப்பு உருவாக்கம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு அபிலாஷைகள் 13ஆவது திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் மலையக மக்களின் அதிகாரப் பகிர்வு ஆகிய முக்கிய பல விடயங்களை முன்னிலைப்படுத்தி; இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரிடம் எடுத்துரைத்தாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ வி;ஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையகத் தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் 05-08-2026 அன்று  கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பாராடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் இந்திய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சந்திப்பு தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் தங்களது தேசிய மற்றும் பிராந்திய அதிகாரப் பகிர்வு அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடத்த வேண்டிய மாகாண சபைத் தேர்தலிலும், புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையிலும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் எடுத்துக் கூறினோம். புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பு என்பது இன்று அரசியலமைப்பில் இருக்கக்கூடிய மாகாண சபை முறைமையை ஒழித்து விடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுமா என்ற இந்திய அரசின் நியாயமான சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைத்தோம். ஏனென்றால், கடந்த நல்லாட்சியின் போது புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தை ஆரம்பித்த பொழுது, அது நிறைவேறாவிட்டாலும் கூட ஒரு இடைக்கால அறிக்கை வரை நாங்கள் வந்திருந்தோம். ஆகவே, நண்பர் அநுர குமார திசாநாயக்க தாம் ஜனாதிபதியானால் அந்த இடைக்கால அறிக்கை வரை நாம் அனைவரும் எட்டிக்கொண்டிருக்கக்கூடிய அந்த நிலைப்பாடுகளில் இருந்துதான் புதிய பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்போவதாகவும், எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடங்கப்போவதாக இல்லை என்றும் கூறியிருந்தார். அது நல்ல விடயம். ஆகவே நாங்கள் இடைக்கால அறிக்கை வரை வந்தது, அதாவது இன்றைய அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆம் திருத்தத்தை, மாகாண சபை முறைமையை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றது. ஆகவே இந்திய அரசுக்கு அத்தகையதொரு சந்தேகம் நியாயமாக இருந்தாலும் கூட, அது தற்போது அவசியமில்லை. அநுர குமார திசாநாயக்க தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் கூறியிருந்தோம். அதேபோல, இந்நாட்டில் ஏறக்குறைய 12, 13 மாவட்டங்களில் சிதறிப் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்களுக்கு என்று ஒரு மாகாண சபை நாங்கள் பெரும்பாண்மையாக வாழக்கூடிய, முதலமைச்சராக வரக்கூடிய மாகாண சபை கிடையாது என்ற காரணத்தினாலே, பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ என்ற புதிய பிரேரணையையும் நாங்கள் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக இருப்பதாக விக்ரம் மிஸ்ரிக்கு நாங்கள் தெரிவித்தோம். அத்துடன், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றும் முழுதாக அகற்றிவிடும் எண்ணம் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எப்போதுமே கிடையாது. கடந்த கால அரசியலமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது கூட, மட்டுப்படுத்தப்பட்ட, அதிகாரம் குறைக்கப்பட்ட, பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லக்கூடிய, ஆனால் முழு நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் கூறியிருந்தோம். முழு நாட்டுக்கும் பதில் கூறக்கூடிய ஜனாதிபதி ஒருவர் இருக்கும் பொழுதுதான், அவர் தேர்தல்கள் காலங்களிலும் அதற்கு இடைப்பட்ட காலங்களிலும் வாழக்கூடிய எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அவாக்களுக்கும், தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். எங்களது பிரச்சினை தேசிய மட்டத்திலே விவாதிக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒட்டுமொத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஜனாதிபதி முறைமைதான் காப்பாற்றி நிற்கிறது என்பதால், இந்த நிலைப்பாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாங்கள் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் மிஸ்ரிக்குக் கூறியிருந்தோம். மேலும், இந்திய அரசாங்கத்திலே அநுர குமார திசாநாயக்க தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், இந்தியாவுடனான உறவு சார்பாகவும் ஒரு நேர்முகமான சிந்தனை கொண்டிருந்தாலும் கூட, அவரது அரசாங்கத்திலும் அவரது கட்சியிலும் இருக்கக்கூடிய பலர் எதிர்மறை எண்ணப்பாடுகள் கொண்டிருப்பதாக நாங்கள் கூறியிருந்தோம். குறிப்பாக, இந்த அரசாங்கத்தைச் சார்ந்த தமிழ் பிரதிநிதிகள் அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரம் பேசுதல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே, அதை எள்ளி நகையாடி, அதைத் தரம் தாழ்த்தி, தங்கள் கட்சித் தலைவர் அல்லது நாட்டின் ஜனாதிபதியே முன்வந்து எங்களோடு பேசுகின்ற பொழுது அதை புறக்கணிக்கும் உருவமாக குவித்து இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் இந்திய வெளியுறவு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தோம். ஆகவே இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நாடி நாம் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய மக்களின் நியாயமான விருப்பங்களைப் பெற்றுக்கொள்வதிலே எங்காவது தடை ஏற்பட்டால், அது எம்மாலோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவாலோ என்றல்லாமல், இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளாலேயே அது நிகழும் என்று எமது எச்சரிக்கையை நாங்கள் இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்திருந்தோம் என்றார்.

Continue Reading

பிரதமர் ஹரணியுடன் இந்திய வெளியுறவு செயலாளர் விரிவாக கலந்துரையாடல்

இலங்கை – இந்திய நாடுகளின் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுபடுத்துவுதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வலுவானதும், மக்களை மையப்படுத்தியதுமான மிகநெருங்கிய நல்லுறவை இருதரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர். அத்தோடு இருநாடுகளினதும் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர …

Continue Reading

பாராளுமன்றம் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் தெரிவித்தார். குறித்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள ஓகஸ்ட் 05ஆம் திகதி தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 …

Continue Reading

மாகாண சபைகளை உடனடியாக நிறுவுவதற்கான பொருத்தமான தேர்தல் முறை குறித்து, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் மூன்று முன்மொழிவுகள்

மாகாண சபைத் தேர்தல்களுக்கான முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம்  சமூக நீதிக்கான தேசிய இயக்கம், 3 முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம், மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்தில் கொள்ளவும், தொடர்புடைய முன்மொழிவுகளை மேலும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதமின்றி எவ்வாறு நடத்தலாம் என்பதைச் சுட்டிக்காட்டவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எதிர்பார்க்கிறது. கலாநிதி சுஜாதா கமகே, பேராசிரியர் சுதாந்தா லியனகே மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியான செல்வி லிஹினி பெர்னாண்டோ ஆகியோரின் …

Continue Reading

பிராந்திய ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு வழங்கப்படும்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

பிராந்திய மட்டத்தில் ஏற்றுமதித் துறையின் விரைவான வளர்ச்சியை எட்டும் நோக்கில் ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை எதிர்ப்பாகும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமேல் மற்றும் வட மத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை ஒன்றிணைக்கும் பிராந்திய வலையமைப்பு மாநாடு அண்மையில் சிலாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் …

Continue Reading

பொருளாதார மீட்சியானது மக்களுக்கு உண்மையான பலன்களை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது. தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதற்கும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருப்பதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தைப் பாராட்டியது.பல சவால்களுக்கு மத்தியிலும்இ இலங்கை உறுதியுடன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொண்ட நிதியம், நாடு தனது பொருளாதார மீட்சியை நோக்கி நகரும் போது அரசாங்கத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது. வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக அல்லாமல், பொருளாதாரக் …

Continue Reading

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சி பாராட்டத்தக்கது; சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் உறுதி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் ஏற்றுக்கொண்டு, இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக  பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உறுதியளித்தனர். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, …

Continue Reading

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி,ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க  நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

Continue Reading

இந்தியா-இலங்கை அறிவு பகிர்வு   கூட்டாண்மையின் தேவை ஏன்?

ஜீவன் தியாகராஜா இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்புகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் இலக்குகளையே மீறி முதன்மையான மிகை நிலை அடையப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2022இன் வீழ்ச்சி கடந்த காலமாகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால் தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தையோ, முல்லைத்தீவில் வசிக்கும் ஒரு தாயையோ, இந்த மீட்சி அவர்களை எட்டிவிட்டதா என்று கேட்டால், பதில் வேறுபட்டதாகவே இருக்கும். தேசியளவில் …

Continue Reading

மாகாண தேர்தலை நடத்தாமை அரசியலமைப்பு அவமதிப்பாகும்:  சுனில் ஜயசேகரவின் நேர்காணல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமலிருப்பது அரசியலமைப்பு அவமதிப்பாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர வழங்கிய நேர்காணலின் முழுமையான வடிவம்: கேள்வி: மாகாண சபை அமைப்பின் தற்போதைய நிலை குறித்த விரிவான விளக்கத்துடன் இந்த உரையாடலைத் தொடங்குவோமா? பதில்: மாகாண சபைகள் என்பவை இந்த நாட்டின் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட பிரதான மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களாகும். அதுமட்டுமன்றி, நாட்டின் நிர்வாகம் தொடர்பான பல துறைகளில், குறிப்பாகச் சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம் போன்றவற்றில் அடிப்படை ஆளுகை அதிகாரங்களைக் கொண்ட ஒரு …

Continue Reading