பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும்.; ஜனாதிபதி அநுரகுமார

இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல் மற்றும் கடந்த கால படுகொலைகள் குறித்து  விசாணைகளை மேற்கொள்ளும்  போது விசாரணையாளர்களை எதிர்க்கட்சியினர் எதிரிகளாக பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த …

Continue Reading

ஒன்லைன் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை

நாற்பது வருடங்களுக்கு மேலாக அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற 70 வயதுடைய தொழில்முறை பொறியியலாளர் ஒருவர், வட்ஸ்அப் ஊடாக நடத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் 90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தனது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளார். பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால் கொழும்பிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தங்கி வாழ்ந்து வந்த இவருக்கு, சொந்தமாக வீடொன்றும், 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி வைப்புகளும் இருந்துள்ளன. இணைய வங்கிச் சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை நன்கு பயன்படுத்தத் …

Continue Reading

கைத்தறி நெசவு அழிந்து வரும் துறை அல்ல; பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க

கைத்தறி நெசவு அழிந்து வரும் துறை அல்ல. எதிர்காலத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி தொழிலாக மாறக்கூடிய துறையாகும் என்று  பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இலங்கையின் கைத்தறி நெசவு துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை , தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த “The Art of Weaving” பணிமனை மற்றும் ஆடை அலங்காரக் காட்சி நேற்று  தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதியமைச்சர் Chathuranga Abeysinghe அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு …

Continue Reading

2.5 மில்லியன் டொலர் மோசடி  விவகாரம்;  இரண்டு அறிக்கைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிப்பு

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த  இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து   குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக  அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு  திறைசேரியால்  செலுத்தப்பட்ட  2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில்  இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. …

Continue Reading

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் வாய் திறக்கவில்லை; சந்திரிக்கா

அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் இணைந்து பகிரங்க கருத்தாடல்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியிருப்பதாவது: எமது நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் பலர் தற்போது வெகுவாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மனிதனின் நிலைத்திருப்பு …

Continue Reading

ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும்.

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் …

Continue Reading

எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு, அதிகாரிகள் குழு நியமனம்

 உலகளாவிய ரீதியில் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் பாரதூரமான தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக, விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றங்களுக்கு இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கை காணப்படுவதால், எல் நினோ நிலைமை காரணமாக நாட்டில் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், அதிக வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த இடர்கள் அதிகரித்துள்ளன. விஞ்ஞானபூர்வமான எதிர்வுகூறல்களின்படி, இவ்வருட இறுதி தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இந்த எல் நினோ …

Continue Reading

மாத்தளை மனிதப்புதைகுழி விசாரணைகளை மீள ஆரம்பியுங்கள்; காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மனு

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் 23-06-2026 அன்று  மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1980 களின் பிற்பகுதியில் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) எழுச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவுக்கு அங்கம் வகிக்கும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்களால் சட்டத்தரணிகளான ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் ஊடாக நேற்றைய தினம் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.   இம்மனுத்தாக்கலின் பின்னர் நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைத்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் …

Continue Reading

இலங்கை நடுநிலையான கொள்கையை பேணும்; அமைச்சர் விஜித்த

இலங்கை நடுநிலையானதும் சர்வதேச ரீதியில் இணக்கமானதுமான வெளிவிவகாரக் கொள்கைளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 22-06-2026அன்று  வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. …

Continue Reading

கடற்படைக்கு செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா

உலகின் மிகப் பரபரப்பான சில கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் கடல்சார் இணைப்பைப் பலப்படுத்தும் வகையில் ‘ஃப்ளீற் ப்ரோட்பான்ட்’ செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்க வழங்குமென கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு கப்பில் வைத்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் 22-06-2026அன்று  அறிவித்தார். நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் …

Continue Reading