பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை: விஜயதாச ராஜபக்ஷ
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு அவ்வாறு செய்வதற்கு உண்மையான விருப்பம் இருந்திருந்தால், தான் முன்னர் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது, தற்போதைய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரியிருந்தனர். இது …
Continue Reading
குருந்தூர் உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள காணி பிரச்சினைகளுக்குஎமது ஆட்சியில் நிச்சயம் தீர்வு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
குருந்தூர் மலை விகாரை விவகாரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முறையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-06-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள் இனவாத நோக்கங்களுக்காக அல்லது இலாப நோக்கங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் …
Continue Reading
நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கும் சட்டமூலம் சமர்ப்பிப்பு
நிகழ்நிலை காப்புச் சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இரண்டாம் மதிப்பீட்டுக்காக சபையில் முன்வைத்தார். பாராளுமன்றம் 23-04-2026 அன்று கூடிய போது சபை முதல்வர் சட்டமூலத்தை இவ்வாறு முன்வைத்தார். 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கமைய, ‘நிகழ்நிலை பாதுகாப்பு’ தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமூலம் 2025.04.18 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது. ‘இந்த சட்டம் 2025ஆம் …
Continue Reading
ஐ.நா சபையின் விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த மற்றும் பரந்துபட்ட அணுகுமுறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழித்தல் தொடர்பான தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி …
Continue Reading
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புக்கள் இன்னும் சந்தைக்கு போதுமான அளவு விநியோகிக்கப்படாமை பிரச்சினையாக மாறியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கையிருப்புகளை சந்தைக்கு விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன் …
Continue Reading
நீதித்துறை சம்பந்தமாக சபாநாயகரிடத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக்கருதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமெனக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் 23-06-2026அன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. அதில் தற்போது நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களின் பணிகளை வினைத்திறனாகவும், சுயாதீனமாகவும், …
Continue Reading
தேர்தல்களில் விரலில் மை வைக்கும் நடைமுறையை நீக்க அரசாங்கம் தீர்மானம்
தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சு (மை) இடும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் முழுமையாக நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள விசேட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ், கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருத்தமான விரலில் …
Continue Reading
அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க-இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்துவரும் பலத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் 22-06-2026அன்று இலங்கையை வந்தடைந்தார். ஜெனரல் கெவின், கட்டளைத் தளபதியாக, இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகளையும், சொத்துக்களையும் ஜெனரல் ஷ்னைடர் மேற்பார்வை செய்கிறார். மூன்று நாள் விஜயத்தின் போது கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட, சிரேஷ்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறைத் தரப்பினருடன் சந்திப்புகளை …
Continue Reading
சதாரண டீசலுக்க 100ரூபா மானியம் வழங்குகின்றோம்; பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சாதாரண டீசல் ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்கி வருவதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதேவேளை, லங்கா ஐஓசி, மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூடுதலான மானியங்களை வழங்குகின்றது. உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது கூட்டுத்தாபனம் வழங்கி வரும் மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர, நுகர்வோருக்கு உடனடியாக விலை குறைப்பை வழங்க முடியாது. அத்துடன், கடந்த ஜனவரி மாதம் …
Continue Reading
போலி நிறுவனங்கள் மூலம் டொலர் கடத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு டொலர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அவசர மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சுமார் 85 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய வெளிநாட்டு நாணய மாற்று மோசடியொன்று அண்மையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பெயர்களை மாற்றிக்கொண்டு, சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கிவிட்டு, பின்னர் மறைந்துவிடும் 105 உள்ளுர் நிறுவனங்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பொன்றே இந்த மோசடியின் பின்னால் இருப்பது விசாரணைகளில் …
Continue Reading