கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் நீடிக்கப்படுவது குறித்து தீர்மானமில்லை; பிரதி அமைச்சர் ரத்ன கமகே
கடற்றொழிலாளர்களுக்கான மானியக்காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என்று கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நெருக்கடி நிலைமையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கான எரிபொருள் மானியத் திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு …
Continue Reading
பொருளாதார சீர்திருத்தங்களை மீளாய்வு செய்ய நாணய நிதியக்குழு 24இல் இலங்கை வருகை
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான உத்தியோகபூர்வ அதிகாரிகள் மட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜியோர்ஜியு தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின் போது, நாட்டின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்த திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூகப் பங்குதாரர்களுடன் குறித்த குழுவினர் …
Continue Reading
வாய்ப்பு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை நிவாரணம் வழங்கப்படும்; அமைச்சரவை பேச்சாளர்
அமெரிக்கா – ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உலகச் சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் நன்மைகளை மக்களுக்கு நேரடியாகக் கடத்துவதே …
Continue Reading
மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த புதிய தேசிய செயல் திட்டம்
இலங்கையில் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மனித – யானை மோதல்களை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களால், காட்டு யானைகள் நடமாடும் பாரம்பரியப் பாதைகளும் அவற்றின் வாழிடங்களும் பெருமளவில் அழிந்துபோயுள்ளன. இதன் விளைவாகவே இந்த மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையில் இந்த …
Continue Reading
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணி கூடியது
தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில்,தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் நிலப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்குவதில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள …
Continue Reading
பாதுகாப்பு பிரதியமைச்சருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமாக ஆராய்ந்தனர். இதன்போது, இலங்கை ஆயுதப் படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். …
Continue Reading
இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா
அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு இணங்க, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு இருப்புகளிலிருந்து 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்து, அதனை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இராணுவத்திடம் காணப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசரத் தேவையை ஒரே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய இந்திய அரசு உடன்பட்டிருந்தது. இதற்கமைய, ‘ஐ.என்.எஸ் சாரதா’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் மூலம் இப்பொருட்கள் விசேடமாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுக் கையளிக்கப்பட்டன. …
Continue Reading
பயங்கரவாத தடுப்பு சட்டத்தைவிரைவில் இரத்து செய்ய வேண்டும்; சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக நாகரீக உலகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரில்லை என்ற செய்தியை இலங்கை பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மென்மேலும் அமுல்படுத்துவதின் ஊடாக, இலங்கை நாகரீக உலகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு தயார் இல்லை எனும் செய்தியை சர்வதேசத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ள …
Continue Reading
இலங்கை – ஜப்பான் நீடித்த நட்புறவின் அடையாளம் புதிய சசகாவா கலாசார நிலையம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் நீடித்த நட்புறவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா 11-06-2026 அன்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், …
Continue Reading
இந்தியஉயர்ஸ்தானிகர்சந்தோஷ்ஜாவைசந்தித்தபெண்பாராளுமன்றஉறுப்பினர்கள்சங்கம்
இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கடந்த மே மாதத்தில் இக்குழுவினர் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் கற்றறிந்த விடயங்களை உயர்ஸ்தானிகருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பின் போது பாலின வரவுசெலவுத் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மேம்பாடு, பெண்களின் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த …
Continue Reading