அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாராளுமன்றில் சந்திப்பு
பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுத்தலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றக்குழுக்களுக்கு ஒப்பீட்டளவிலான பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது குறித்து இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்ந்துவருவதாகவும், இதுகுறித்து அமெரிக்கப் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை அந்நாட்டு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனநாயகப் பங்காண்மை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் 8 – 12 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். …
Continue Reading
ஐ.நா. அமைதிப்படைமற்றும் இராணுவத்தின்தளவாடப்பொருட்கள்கொழும்பைவந்தடைந்தன
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக, இந்திய இராணுவத்திடமிருந்து பெறப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள், எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளன. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த, கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா போர்க்கப்பல், இந்த உத்தியோகபூர்வ தளவாட இடமாற்றப் பணிக்காகவும், வழமையான செயல்பாட்டுப் …
Continue Reading
பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாணக்கியன் எம்.பி.பேச்சு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியை பிரஸ்ஸஸில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை மற்றும் அதன் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் சாணக்கியன் தனது கடுமையான கவலையை வெளியிட்டதுடன், குறித்த கைதானது இலங்கையின் …
Continue Reading
இந்தியபிரதிஉயர்ஸ்தானிகருடன் எதிர்க்கட்சித்தலைவர்சஜித்பிரேமதாசசந்திப்பு
இலங்கையில் தனது பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு, விரைவில் இந்தியா திரும்பவுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இலங்கையில் தான் கடமையாற்றிய காலப்பகுதியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தரப்பினரிடமிருந்து தனக்குக் கிடைத்த அளப்பரிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே இதன்போது தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். …
Continue Reading
பதவிகளுக்காக யாரிடமும்m மண்டியிடப்போவதில்லை – அனந்தி சசிதரன்
2013ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் ஒரு சாதாரணப் பெண்ணாகப் போட்டியிட்டுஇ ஈழப் போராட்டத்தின் சாட்சியாகவும்இ ஒரு போராளியின் மனைவியாகவும் மக்கள் முன் நின்று சாதனை வாக்குகளைப் பெற்றவர் அனந்தி சசிதரன் தற்போது ஈழவர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடருகிறார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறுஇ கேள்வி: அனந்தி சசிதரன் என்கிற ஆளுமை கடந்த சில காலமாக அரசியல் தளத்தில் சற்று மௌனமாக இருந்ததாக உணரப்படுகிறது. எங்கே சென்றிருந்தீர்கள்? இந்த இடைவெளிக்கு என்ன காரணம்? பதில்: அனந்தி …
Continue Reading
இயற்கையால் உத்வேகம் பெறுவோம் ‘இன்று உலக சுற்றுச்சூழல் தினம்’
கலாநிதி திருமதி சுபாஐpனி உதயராசா, சிரேஷ;ட விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் சுற்றுப்புறச் சூழலை பேணவேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்கள், தன்னார்வ நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புறசூழலை பேணுவதற்கான முழுமையான செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் …
Continue Reading
அச்சுறுத்தல் நிலையில் இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை; சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களும், அதன்விளைவாக உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புமேயாகும் என்றும், அதனை சீரமைப்பதற்கு இலங்கை அதிகாரிகளால் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு …
Continue Reading
தித்வாவினால் பாதிக்கப்பட்ட 4000 குடும்பங்களுக்கு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு நிதியுதவி
‘தித்வா’ சூறாவளியின் மிகமோசமான பாதிப்புக்களிலிருந்து இலங்கை தொடர்ந்து மீண்டுவரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட 4000 குடும்பங்களுக்கான நிதியுதவி சர்வதேச புலம்பெயர்வு அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்பான அவசரகாலப் பதிலிறுப்பு நிதியம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் என்பவற்றின் ஆதரவுடனும், இலங்கை அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதியுதவி வழங்கல் செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவி வழங்கலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புத்தளம், பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 4000 க்கும் …
Continue Reading
புலம்பெயர்தொழிலாளர்உரிமைகளைப்பாதுகாக்கும்குழுவின்தலைவராகபிரசாத்காரியவசம்தெரிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் 42 ஆவது கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது. இத்தெரிவை அடுத்துக் கருத்துரைத்த பிரசாத் காரியவசம், தன்னை ஏகமனதாகத் தெரிவுசெய்தமைக்காக குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோhன்று சமகாலத்தில் மனித உரிமைகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் வளக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இக்குழுவின் எதிர்காலப் பணிகளில் ஒரு …
Continue Reading
சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமாரவிடம் எழுத்துமூல கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவரான சுரேஷ் சலே சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் அதிகாரிகள் குழுவினர் அவரது அறைக்குள் நுழைந்து, பிற அதிகாரிகள் மற்றும் கைதிகளின் முன்னிலையில் அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி,விலங்கிட்டு, மனிதாபிமானமற்ற மற்றும் அநாகரீகமான நடத்தைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.இது முற்றிலும் கடும் மனித உரிமை மீறலாகும். எனது கணவரின் உடல் மற்றும் உளவியல் நிலை வேகமாக மோசமடைந்து வருவது தெளிவாகிறது. அவரது உயிருக்கு இப்போது கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதற்கு அவரது …
Continue Reading