சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்கு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஜெனிவா பயணம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 114 ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் 31-05-2026 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா சென்றுள்ளனர். தொழில் அமைச்சின் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் இவ்வருடம் ஜெனிவா மாநாடானது ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருப்பதுடன், இலங்கை அரசாங்கம், தொழில்தருனர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு தூதுக்குழு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்து கொள்ளவுள்ளது. இம்முறை மாநாட்டின் பிரதான கருப்பொருளாக ‘சமூக நீதியை முன்னோக்கி எடுத்துச் சென்று, நிலையான வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்’ என்பது ஆழமாக முன்வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 187 உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள், தொழில்தருனர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடானது, உலகளாவிய தொழிலாளர் துறை சார்ந்த கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான மிக உயர்ந்த சர்வதேச மாநாடாகக் கருதப்படுகிறது. ‘தொழிலாளர் பாராளுமன்றம்’ என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில், எண்மிய பொருளாதாரம் மற்றும் நவீன தளப் பொருளாதார அமைப்புக்குள் நிலையான வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல், பணிப்புரியும் இடங்களில் பாலின சமத்துவத்தைப் பேணுதல், சமூக உரையாடல்களை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கம், தொழில்தருனர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்வதற்கும், தொழிலாளர் துறையின் புதிய போக்குகள் மற்றும் சவால்கள் தொடர்பான உலகளாவிய கலந்துரையாடல்களில் பங்களிப்பதற்கும் இலங்கைக்கு மிகச்சிறந்த வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன், நியாயமான சேவை நிபந்தனைகள், சமூக நீதி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்துக்கு முன்னிலைப்படுத்துவதற்கும் இந்த மாநாட்டின் ஊடாக வழிவகுக்கும் என தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Continue Reading
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம்; சாணக்கியன்
-
Editor
-
June 1, 2026
-
அரசியல், தமிழ் Header
-
0 Comments
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள யோசனைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல்களை …
Continue Reading
பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; கருஜயசூரிய
பெளத்த சமூகத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்திய பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பொது சமூகத்திலும் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பௌத்த சமயத்தை பேணிப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது மகத்தான பாரம்பரியத்தைப் பற்றிச்சிந்தித்து, நமது தேசிய உரிமைக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து …
Continue Reading
மக்களாணையை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்துவது வரவேற்கத்தக்கது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் இறையாண்மைக்கு எதிராக கட்சி மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இரத்து செய்வதற்கான புதிய சட்ட வரைவை முன்மொழிவதற்கான உத்தேசம் வரவேற்கத்தக்க சீர்திருத்தம் என்பது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாடாகும். 2013-ஆம் ஆண்டு முதல், எமது அமைப்பின் ஸ்தாபகத் தலைவரான, மறைந்த வணக்கத்திற்குரிய மதுளுவாவே சோபித நாயக்க தேரர், தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்த வடிவமைக்க …
Continue Reading
எமது அதிகாரங்கள் எவருக்கும் பகிரப்படவில்லை; தேர்தல்கள் ஆணைக்குழு
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் எவருக்கும் பகிரப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஒவ்வொரு தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆணைக்குழுவால் பொறுப்பேற்க முடியாது. மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றம் தீர்வளித்ததன் பின்னர் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துக்கு அரசியல் தரப்பினரும், …
Continue Reading
இந்தியாவின் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகிறது; ஆனந்த விஜயபால
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் நேரடித் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றன. இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் அவர் காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் 25-25-05-2026அன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் பாவனைக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த 134 கெப் ரக வாகனங்களின் அன்பளிப்புக்காக, இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா மற்றும் இலங்கை நீண்டகாலமாக நேரடி நட்பு ரீதியான உறவுகளைப் பேணி வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக, இலங்கை காவல்துறையின் மேம்பாட்டுக்காகவும், பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்கவும் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகின்றது. இந்த வாகனங்களை வழங்குவதன் மூலம், இலங்கை மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எமது காவல்துறைக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் நேரடித் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றன. இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் அவர் காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம். இது ஒரு நீண்டகால கூட்டுப் பயணத்தின் வெளிப்பாடாகும் என்றார்.
Continue Reading
அநுர – மோடி தொலைநோக்கு பார்வைகள் எமக்கு வழிகாட்டுகின்றன; சந்தோஷ் ஜா
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன்25-05-2026அன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 2025 இல் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, இரு தரப்பினரும் மிக நெருக்கமாகவும், கூட்டுப் பொறுப்புடனும் செயற்பட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் 80 வாகனங்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது அதனை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளமை எமது சிறந்த ஒத்துழைப்பிற்குச் சான்றாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசாங்கங்கள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னெடுக்கும் தூய்மையான நிர்வாகம் மற்றும் நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த கெப் ரக வாகனங்கள் உள்ளூர் மட்டத்திலும், சமூக மட்டத்திலும் காவல் சேவையை வலுப்படுத்த உதவும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு என்றார்.
Continue Reading
ரணிலின் தர்க்கத்தை முன்வைக்கும் ரில்வின்; தயாசிறி
உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டு நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு …
Continue Reading
மக்கள் பிரிதிநிதியாக இல்லாதவர்கள் தீர்மானங்களை எடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்; ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா போன்றவர்களே நாட்டை வழிநடத்துகின்றனர். மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவர் நாட்டின் கொள்கைகளை வகுக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தவராக மாறியிருப்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 25-05-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முடிவுகளை அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது …
Continue Reading
வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரெனக் குறைப்பு;இறக்குமதியாளர்கள் சங்கம்
மத்திய வங்கியினால் வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரென 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, முறையாக வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் இத்துறையை நம்பி சுமார் 30 முதல் 40 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திடீர் சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவசர …
Continue Reading