மாகாணசபைத்தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது; மனோகணேசன்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமான அறிகுறிகள் காணப்படுவதில்லை.ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,2025 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார். 2025 முடியாது 2026 …
Continue Reading
மாகாணத் தேர்தல் இந்தாண்டு இல்லை; யாழில் ரில்வின் அறிவிப்பு
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு இந்தாண்டு வரவு –செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்காக செலவிடப்பட்டுள்ளது.அதனால் இந்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தயாராகவுள்ளோம்.அதேநேரம் இந்த விடயத்தில் இந்தியாவிடமிருந்து எமக்கு எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம்- அரியாலையில் 23-05-2026 …
Continue Reading
நாட்டின்ஜனாதிபதியார்என்பதில்சந்தேகம்; சாணக்கியன்
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது.ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை அவமதிப்பதாக அமைந்துள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது, ஒதுக்கிய நிதி தித்வா தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்க …
Continue Reading
மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த முழுமையான சட்டப் பின்னணி உண்டு; பேராசிரியர் ரொஹான்சமரஜீவ
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத் தேவை என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பிரதித் தலைவரும் பேராசிரியருமான ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் 20-05-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்: நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்து எமது அமைப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போதே இத்தேர்தல்களை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. பழைய தேர்தல் முறையின் கீழ் ஒருமுறை மட்டும் இத்தேர்தலை நடத்துவதற்கான யோசனையை முன்வைத்தோம். அதற்கு அனுமதி அளிக்கும் சட்டம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தினால் தெளிவுபடுத்தப்பட்டு, தற்போதுள்ள பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் சட்டப் பின்னணிகளும் உள்ள சூழலில் இதனைச் செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசியல் யாப்பை எமக்குத் தேவையான பகுதிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, ஏனைய பகுதிகளைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் அர்த்தமற்ற செயலாகும். மாகாண சபைகள் நிறுவப்பட வேண்டும் என்பதும், மாகாண சபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் என்பதும் தற்போதைய எமது அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் யாப்பை முன்மாதிரியாகக் கொண்டே இம்முறை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் காண்கின்றோம். மாகாண சபைகள் இயங்காத காரணத்தினால் குடிநீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களின் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. மாகாண சபை முறைமை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கு பொருத்தமான தீர்வு அல்ல என்று அரசாங்கம் நினைத்தால், அவர்கள் ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வரட்டும். ஆனால், அதுவரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசாங்கம் தேர்தலை நடத்த நினைத்தால் அதற்குத் தேவையான அனைத்துச் சூழல்களும் இன்று ஆளும் தரப்பிடம் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அவர்களிடம் உள்ளது. ஆனால், ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது அது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒரு சிலரின் ரகசியக் குழுவினால் இது செய்யப்படக் கூடாது. பாராளுமன்றத்தில் உள்ள மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பங்களிப்புடன் இந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
Continue Reading
16ஆயிரம் ரூபாவில் யாருக்காவது 30 நாட்களுக்கு வாழமுடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் தனிநபர் ஒருவருக்கு 30 நாட்களுக்கு 16 ஆயிரம் ரூபா செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 16ஆயிரம் ரூபாவில் யாருக்காவது 30 நாட்களுக்கு வாழமுடியுமா என கேட்கிறோம். அதனால் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நிலைமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச் …
Continue Reading
பிரிவினைவாதத்திற்கு எனது ஆட்சியில் இடமில்லை; ஜனாதிபதி அநுரகுமார
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 19-05-2026 அன்று 15ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் …
Continue Reading
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய விமானப்படை தளபதி
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார். அவர் 19-05-2026 அன்று பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், விமானப்படைத் தலைமையகத்திற்கு வந்தடைந்த அவரை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது. பின்னர் அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு …
Continue Reading
இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பான பங்கினை வகிக்க மிகுந்த ஆர்வமாகவுள்ளோம்; நாத் பரமேஸ்வரன்
இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இது கடந்த சில மாதங்களாக அனைத்துப் பங்குதாரர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட ஒரு உண்மையான கூட்டாண்மையின் விளைவாகும். paypal நிறுவனத்தின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவும், இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து, ஒரு பொறுப்பான பங்கினை வகிக்கவும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம் paypal நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான நிறுவன விவகார பணிப்பாளர் நாத் பரமேஸ்வரன் தெரிவித்தார். …
Continue Reading
12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்
இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத …
Continue Reading
நீதிமன்றத்தின்நடவடிக்கைகளுக்குஎவ்விதத்திலும்அழுத்தம்பிரயோகிக்கவில்லை – ரில்வின்சில்வா
சட்டத்தை கையில் எடுத்து எம்மால் ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாது.நீதிமன்றமும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தலையிடவில்லை.நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான வசதிகளையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். சட்டத்துக்கு கட்டுப்பட ராஜபக்ஷர்கள் இன்றும் விரும்பவில்லை. இந்த கலாசாரத்தை மாற்றியமைப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் 61 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சமூக ஊடகங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச …
Continue Reading