இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பான பங்கினை வகிக்க மிகுந்த ஆர்வமாகவுள்ளோம்; நாத் பரமேஸ்வரன்
இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இது கடந்த சில மாதங்களாக அனைத்துப் பங்குதாரர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட ஒரு உண்மையான கூட்டாண்மையின் விளைவாகும். paypal நிறுவனத்தின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவும், இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து, ஒரு பொறுப்பான பங்கினை வகிக்கவும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம் paypal நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான நிறுவன விவகார பணிப்பாளர் நாத் பரமேஸ்வரன் தெரிவித்தார். …
Continue Reading
12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்
இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத …
Continue Reading
நீதிமன்றத்தின்நடவடிக்கைகளுக்குஎவ்விதத்திலும்அழுத்தம்பிரயோகிக்கவில்லை – ரில்வின்சில்வா
சட்டத்தை கையில் எடுத்து எம்மால் ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாது.நீதிமன்றமும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தலையிடவில்லை.நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான வசதிகளையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். சட்டத்துக்கு கட்டுப்பட ராஜபக்ஷர்கள் இன்றும் விரும்பவில்லை. இந்த கலாசாரத்தை மாற்றியமைப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் 61 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சமூக ஊடகங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச …
Continue Reading
இந்திய பாராளுமன்ற சபாநயகருடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர், இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நாகரீக, கலாசார மற்றும் ஜனநாயக ரீதியான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திச் செயற்படுவதற்கு இரு நாடுகளினதும் பாராளுமன்றங்கள் முன்வர வேண்டுமென்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், தலைமைத்துவம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஜனநாயக ரீதியான தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் …
Continue Reading
கொள்கைநிலைத்தஇராஜதந்திரத்தைமுன்னெடுக்கதயாராகவுள்ளோம்;பிரதிஅமைச்சர்அருண்ஹேமசந்திரா
இலங்கையின் மரபுடைமை தொடர்பான விடயங்களில்,சர்வதேச பங்குதாரர்கள்,அறிஞர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உரையாடல்,ஆராய்ச்சி, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கொள்கைநிலைத்த இராஜதந்திரத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ‘யாருடைய சட்டம்: ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காலனித்துவ காலத்தில் இடம்பெயர்க்கப்பட்ட கலாசார மரபுடைமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக, இம்மாநாடு சட்ட அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகத் துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்த முக்கியமான தளமாக …
Continue Reading
உள்நாட்டு பொருளாதாரத்தினை உடன் வலுப்படுத்தாதுவிட்டால் மீண்டும் நெருக்கடி – கலாநிதி அகிலன் கதிர்காமர்
கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பன்முகப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனைச் செய்யத் தவறினால், சர்வதேச நெருக்கடிகளின் போது இலங்கை மீண்டும் பொருளாதாரச் சரிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: தற்போதைய ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? இது உலக நாடுகளுக்கு எத்தகைய செய்தியைச் சொல்கிறது? பதில்: தற்போதைய சூழல் என்பது அனைத்து …
Continue Reading
தமிழக முதல்வருக்கு கோரிக்கையுடன் தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து
ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நடைபெற்று முடிந்த தமிழ்நாடு …
Continue Reading
‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்’ … முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரை
முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் – தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், …
Continue Reading
மூன்று வாக்குறுதிகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் மூன்று வாக்குறுதிகளில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் கையெழுத்திட்டுள்ளார். அவையாவன, 1) வீடுகளுக்கு 200 அலகு மின்சார பாவனை இலவசம்… ( 500 அலகு மின்சாரத்தை மாதந்தோறும் பாவிக்கும் குடும்பம்..) 2) பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சிங்கப்பெண் அதிரடி படை அமைப்பு.. 3) போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் போதைப் பொருள் களைப்பு படை உருவாக்கம்.
Continue Reading
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் சி ஜோசப் விஜய்
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிறைவடைந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்த நிலையில் ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலமைச்சராக பதவி பிரமாணமும், இரகசிய …
Continue Reading