தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வலுவான இலங்கை – இந்திய பங்காளித்துவத்திற்குள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளினதும் பெரும் செழிப்பையும், முன்னேற்றத்தைம் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவேற்றம் செய்துள்ளார். இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து  இரு நாட்டு மக்களின் உறவால் …

Continue Reading

தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் வாழ்த்து

தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் தனது எக்ஸ் வலைத்தலத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள். வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையும் அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்பட்ட சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் …

Continue Reading

பிரதமருக்கும் வியட்நாம்  ஜனாதிபதிக்கும்  இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 08-05-2026 அன்று  கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு வியட்நாம் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 56 …

Continue Reading

வியட்நாமிய ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதற்காக பாராளுமன்றத்துக்கு வந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாமுக்கு  முப்படை அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி 08-05-2026 அன்று காலை 11  மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இவரின் வருகையை முன்னிட்டு பாராளுமன்ற சுற்றுவட்ட சந்தியிலிருந்து அவரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் கட்டப்பட்டும்  , வியட்நாம்,இலங்கை தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டும் இருந்தன. மிக நீண்ட வாகன பேரணியாக பாராளுமன்றத்திற்கு வருகை  தந்த வியட்நாம்  ஜனாதிபதிக்கு பாராளுமன்ற நுழைவாயில் பகுதியிலிருந்து வீதியின்   இரு புறமும்  முப்படையினரும் அணிவகுத்து நின்று மரியாதை …

Continue Reading

வடமாகாணத்தின் எழுச்சிக்கான  விவசாய கொள்கை வழிவரைபடம்

ஜீவன் தியாகராஜா இலங்கையின் வட மாகாணம் என்பது வெறும் போர் வடுக்களைச் சுமந்த பூமி மட்டுமல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தக்கூடிய பாரிய வளங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். 100,000 ஹெக்டெயருக்கும் அதிகமான வயல் நிலங்கள், செழுமையான வெங்காயச் செய்கைக்கான மண் மற்றும் தெற்காசியாவிலேயே மிக வளமான மீன்பிடித் தளங்களைக் கொண்ட கடற்கரைகள் என்று இயற்கை அன்னை வடக்கிற்கு வாரி வழங்கியுள்ளாள். எனினும், தசாப்தங்களாக நிலவும் கொள்கை முரண்பாடுகள் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் இந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுத்து வருகின்றன. அந்த …

Continue Reading

இராஜதந்திர உறவை ‘விரிவான கூட்டாண்மை’ மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பு; ஜனாதிபதி டோ லாம்

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவை ஒரு ‘விரிவான கூட்டாண்மை’ மட்டத்திற்கு உயர்த்துவதற்கு இரு நாடுகளும் தீர்மானித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி விரைவாகக் கொண்டு செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தெரிவித்தார். வியட்நாம் சோசலிசக் குடியரசின்  ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின்  பொதுச்செயலாளருமான டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் …

Continue Reading

வியட்நாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருமிதம்; ஜனாதிபதி அநுரகுமார

(நமது நிருபர்) வியட்நாமை வெறும் ஒரு நாடாக மாத்திரமன்றி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருமிதமாகவும் பொருளாதார மாற்றத்தின் வாழும் சாட்சியாகவும் இலங்கை பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2030 ஆம் ஆண்டளவில் இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதே தமது பிரதான இலக்கு என்றும் சுட்டிக்காட்டினார். வியட்நாம் சோசலிசக் குடியரசின்  ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின்  பொதுச்செயலாளருமான டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு 08-05-2026 அன்று  ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் …

Continue Reading

வியட்நாம் மக்களின் இதயங்களில்  இலங்கைக்கு தனித்துவமான இடம் உண்டு; இலங்கைப் பாராளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் 08-05-2026 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியை, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். 11 ஆண்டுகளுக்குப் …

Continue Reading

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட நான்கு புதிய உறுப்பினர்களும் சபாநாயகர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (மே 04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர். முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர்  தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர்.  2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க …

Continue Reading

தேசியமக்கள்சக்திவட, கிழக்கைதொடுவதற்குஇடமளியோம்; மே தின உரையில்சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த உண்மைகளை எடது மக்கள் புரிந்துகொண்டமையினாலேயே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் 01-05-2026அன்று  பி.ப 3.30 மணிக்கு மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், …

Continue Reading