வெளிநாட்டில்பதுங்கியுள்ளராஜபக்ஷக்களைநாட்டுக்குஅழைத்துவருவேன்; மேதினஉரையில்அநுர

2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். மஹரக பகுதியில் …

Continue Reading

ராஜபக்சக்களின் பாதையில் தற்போதைய ஆட்சியாளர்கள்; மேதினஉரையில்துமிந்தநாகமுவ

அரசாங்கத்தின் மீது எழும் கேள்விகளை மௌனி;க்க செய்யவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. ராஜபக்சக்களின் இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னிலை சோசலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2026அன்று  கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கீழ்மட்ட அமைப்பாளர்கள் எழுப்பும் கேள்விகளை மௌனிக்கச் செய்யவே இந்தத் தந்திரோபாயம் கையாளப்படுகின்றது. மறுபுறம், எதிர்க்கட்சியினரோ சமூகத்தின் துடிப்பை உணராதவர்களாகவும், காலிமுகத் திடலில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தத் திராணியற்றவர்களாகவும் உள்ளனர். இன்று தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கும் சேவையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை துறைமுக நகரத்திற்குள் முடக்குவதற்கு இந்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் வேடிக்கையானது. முன்னைய ஆட்சியாளர்கள் இதனைச் செய்ய முற்பட்டபோது பாராடாளுமன்றத்தில் கர்ஜித்தவர்கள், இன்று அதிகாரத்திற்கு வந்ததும் நவதாராளவாதத்திற்குப் பழகியவர்கள் போலச் செயற்படுகின்றனர். எட்டு மணிநேர வேலை நாளை ஒழிப்பதற்கும், சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவதற்கும் கமிட்டிகளை அமைத்துள்ள இந்த அரசாங்கம், ஆசிரியர் போராட்டத்தையும் திட்டமிட்டுப் படுகுழியில் தள்ளியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைத்தனமான பொருளாதாரக் கொள்கையினால் 2028 ஆம் ஆண்டில் நாடு பாரிய சரிவைச் சந்திப் போவது உறுதி. அத்துடன், புதிய பாதுகாப்புச் சட்டங்கள் ஊடாக மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைப் பறித்து, ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, மலையக மற்றும் வடபுலத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தீபச்செல்வன் போன்ற சம்பவங்கள் ஊடாக அரசாங்கம் சிதைத்துள்ளதுடன், ராஜபக்சக்களின் அதே இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர். எனவே, ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாக மாறிப்போயுள்ள இந்த அரசாங்கத்தையும் பலவீனமான எதிர்க்கட்சியையும் நம்புவதில் இனி பயனில்லை. உழைக்கும் மக்களின் உண்மையான அதிகாரத்தை ஒரு மக்கள் இயக்கத்தின் ஊடாகக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்றார்.

Continue Reading

ஆட்சிமாற்றத்தைஏற்படுத்தும்வரையில்ஓயப்போவதில்லை; மே தின உரையில்விஜேதாசராஜபக்ஷ

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளமே இந்த மேதின கூட்டம்.   எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும். அதனால் சவால்களை எதிர்கொண்டு சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன் றை ஏற்படுத்தும்வரை நாங்கள் ஓயப்போவதில்லையென சிறிலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட உபதலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் 01-05-2026அன்று  பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது.  அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், …

Continue Reading

ஐ.தே.க.வுடன்ஏற்கனவேஇணைந்துவிட்டோம்; மேதினஉரையில்எதிர்க்கட்சித்தலைவர்சஜித்பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இணைந்துவிட்டன. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சதிகாரர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பகிரங்க சவால் விடுத்த அவர், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அடுத்த வருட மே தினக் கூட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர்களுடனேயே பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார். கொழும்பு – மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் …

Continue Reading

தசாப்தமொன்றுக்கு பலமாக இருப்போம்;மேதினஉரையில்ஜனாதிபதிஅநுரகுமார

ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையும் வென்றுள்ள எமது அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது. ஒரு தசாப்தத்திற்கு பலமாக ஆட்சியில் இருப்போம். இந்த காலப்பகுதியில் நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வோம். அதேபோல் எதிர்கால அரசியலுக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்தார் அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ள தரப்பினர் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்தாண்டு பலர் சிறைச்செல்வார்கள். சர்ச்சைக்குரிய 10 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார், நுவரெலியா நகரசபை  மைதானத்தில் 01-05-2026அன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின …

Continue Reading

தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் மே தினச் செய்தி

நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த குடும்ப அரசியல் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உழைக்கும் மக்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் புதியதொரு சமூக மாற்றத்தை தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையின் ஊடாக அவர் மேலும் தெரிவிக்கையில், உலகெங்கிலும் வாழும் உழைக்கும் மக்களால் பெருமையுடன் கொண்டாடப்படும் 137 ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் தொழிலாளர் சமூகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இம்முறை மே தினமானது மக்களாட்சிக்கு மக்கள் சக்தி எனும் தொனிப்பொருளின் கீழ் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. எமது நாட்டில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த குடும்ப அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும், தூரநோக்கற்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பையும் மக்கள் ஒன்றிணைந்து தோற்கடித்துள்ளனர். மனிதாபிமானத்தை முன்னிறுத்திய ஒரு மக்கள் ஆட்சியை நிலைநாட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் வெற்றியைத் தேடித்தரும் சமூகப் மாற்றத்திற்கான பின்னணியில் இம்முறை மே தினத்தை கொண்டாடுவது மிகவும் சிறப்பம்சமாகும். அரசு, தனியார் மற்றும் தோட்டத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், முறையான ஊதிய உயர்வை உறுதிப்படுத்துவதே எமது இலக்காகும். அத்துடன், உற்பத்தித் திறன் மிக்க, ஜனநாயக ரீதியான மற்றும் அமைதியான தொழில் உறவுகளைக் கட்டியெழுப்புவதுடன், உழைப்பின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள தொழில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த இந்நாட்டை, பாரிய சவால்களுக்கு மத்தியில் மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்த்தியமை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அடைந்த பிரதான வெற்றியாகும். எத்தகைய சவால்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், அதன் பயன்கள் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதும் எமது பிரதான பொறுப்பாகும். எதிர்காலச் சவால்களை இனங்கண்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்கும் பெரும் எதிர்பார்ப்புடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் தவிர்க்க முடியாத கடமையாகும். நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக மக்கள் எதிர்பார்த்த பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, முழு உழைக்கும் மக்களுக்கும் இலங்கை வாழ் பிரஜைகளுக்கும் வெற்றியைத் தேடித்தர நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றார்.

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமாரவின் மே தினச் செய்தி

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மே தினத்தினை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘தித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் …

Continue Reading

பிரதமர் ஹரிணியின் மே தினச் செய்தி

அனைத்து விதமான உழைப்பையும் மதிக்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் …

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவரின் மே தினச் செய்தி

தொழிலாளர் உரிமைகளை நசுக்கி, அநீதியான வரிக் கொள்கைகள் மூலம் மக்களின் நுகர்வுத் திறனை அழித்து வரும் தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.  அன்று வியர்வை, கண்ணீர் …

Continue Reading

ஆளும்  எதிர்க்கட்சிகள்  மே  தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு 

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தவுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள்  இம்முறை மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை  வரையறுத்துள்ளமை விசேட அம்சமாகும். கொழும்பு மற்றும் புற நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் விசேட போக்குவரத்து வசதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மே தினத்தை முன்னிட்டு இன்றும், எதிர்வரும் 3-0 மற்றும் 31ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் …

Continue Reading