நாட்டின்  கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை மிகப்பெரும் மரியாதை; எரான் விக்கிரமரத்ன

நாட்டின் கிரிக்கெட் முன்னேற்றத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய மரியாதையாகும். ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சரின் அழைப்பை அடுத்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர், இந்தப் பொறுப்பை ஏற்க நான் சம்மதித்தேன். இப்பதவியை  நான் மிகுந்த பொறுப்புடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்று சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்றுக் குழுவின் தலைவரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் …

Continue Reading

சபை ஒத்திவைப்புவேளை விவாதத்துக்கு அனுமதி; சபாநாயகர்

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கை அனுமதியளிக்கப்பட்டுள்ளதென சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். கண்டி தலதா மாளிகையில் 30-04-2026 அன்று  இடம்பெற்ற விசேட வழிபாட்டில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தினார்.நாட்டின் பொதுச்சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டேன். பாராளுமன்ற …

Continue Reading

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சு அதிகாரி மர்மான முறையில் மரணம்

நிதியமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய ரங்க ராஜபக்ஷ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 30-04-2026 அன்று குறித்த உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் குறிப்பிட்டார். அவர் தனது நரம்புகளை வெட்டிக்கொண்டு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உதவி பொலிஸ் …

Continue Reading

அரச நிதிக்குழுவில் திறைசேரி செயலாளரிடம் 4 மணிநேரம் விசாரணை

திறைசேரியால் அவுஸ்ரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி விவகாரம் தொடர்பான முழுமையான அறிக்கையை ஒருமாத காலத்துக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2015 நவம்பர் முதல் 2026 வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்ட 10 கடன் கொடுப்பனவுகளின் மொத்த தொகையே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். இந்த மோசடி குறித்து தேசிய …

Continue Reading

தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடக அறிவித்தல் 2026.04.28 தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மையுடைய போதை பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்துக்கொண்டிருந்த 20 பேரை கொண்ட பௌத்தப்பிக்கு குழுவினரை கைது  செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். இலங்கை அரசின் அத்திவாரமாக கருதப்படும் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் கோட்பாடுகளை மேம்படுத்திய அதி வணக்கத்துக்குரிய பௌத்த பிக்குகளின் பிம்பத்தை போர்வையாக பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத …

Continue Reading

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியுடன் மலையகக் கட்சித் தலைவர்களர் சந்திப்பு

இந்திய வம்சாவழி மக்களின் அரசியல், பொருளாதார சமூக மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு காணப்படுகின்றது என்பதை வலியுறுத்திய மலையக கட்சிகளின் தலைவர்கள் அத்தோடு கடல்-கடந்த இந்திய குடியுரிமை இலகு படுத்தும் வகையில் இந்திய துணைஜனாதிபதி ஆறு தலைமுறையினரை மையப்படுத்திய அறிவிப்பை வெளிப்படுத்தியமையை வரவேற்று நன்றிகளையும் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழ் …

Continue Reading

ஆறாம்தலைமுறைவரைஇந்தியவம்சாவளிமக்களுக்கானகுடியுரிமைஅட்டை; இந்தியதுணைஜனாதிபதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ‘இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)’திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எமது பல இன்னல்களுக்கு இதுவொரு தீர்வாக அமையும்..இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணங்கள் இந்திய வம்சாவளியாக ஏற்றுக்கொள்ளப்படும். வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தின் பயனை இலங்கை வாழ் இந்தியர்களும் பெற வேண்டும் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கல்வி உதவுத்தொகையை மேம்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனால் உதவுத் …

Continue Reading

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். 01. பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (Vincent Sumale) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்). 02. சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவா (Abdullahi Mohammed Odowa) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்). 03. லக்சம்பர்க் நாட்டு தூதுவராக கிறிஸ்டியன் பீவர் (Christian Biever) (புதுடில்லியை தளமாகக் …

Continue Reading

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டார்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி, இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். இந்திய துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததோடு, இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டார். …

Continue Reading