வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க, ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
Continue Reading
இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய …
Continue Reading
இந்திய துணை ஜனாதிபதியுடன் வட,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்படும் நிலையில் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் …
Continue Reading
இந்திய துணை ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார். கொழும்பு தாஜ் சமுத்திரா விடுத்தியில் 19-04-2026அன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது, “தமது முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனை இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம். வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் நாம் ஈடுபட்டோம். இலங்கையும் இந்தியாவும் வெறும் …
Continue Reading
இந்திய துணை ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் 19-04-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான …
Continue Reading
இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா. 12கோரிக்கைகளை முன்வைத்து மகஜர்
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 19-04-2026 அன்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளுக்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துகளையும் ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். …
Continue Reading
சி.வி.கே. மற்றும் சிறிதரனின் கரங்களைப் பற்றி இந்திய துணை ஜனாதிபதி கூறிய முக்கிய செய்தி
தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று இந்திய துணை ஜனாதிபத சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு குறிப்பிட்டுள்ளார். வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தங்களது அறிமுகத்துடன் சமகால நிலைமைகள் மற்றும் இந்தியாவிடத்திலான கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படுத்தினர். …
Continue Reading
வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது
கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் இன்று (ஏப். 10) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (10) இடம்பெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பி.ப 6.00 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
Continue Reading
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (ஏப். 09) சான்றுரைப்படுத்தினார். சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (அறவீடு) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் 2026.04.07ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் திருத்தப்படுவதுடன், இந்த வரி விதிப்பிற்கான பதிவிற்குத் தேவைப்படும் விற்பனைவரவு வரம்பைக் குறைப்பதும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான …
Continue Reading
இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்
இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் …
Continue Reading