மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது. குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள …

Continue Reading

எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கூட்டுக் கடிதம்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மதத்தலைவர்கள் உள்ளடங்கலாக 324 பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அதற்கமைய இதுகுறித்து எஸ்.ராஜேஸ்வரி, இ.மாதவராஜா, எஸ்.கதிர்காமத்தம்பி ஆகியோர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த ஐவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய ஒன்றியம், இனக்கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், …

Continue Reading

இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ மதிப்பீடு அறிக்கை வெளியீடு

பாலின சமத்துவம் தொடர்பில் ஆதாரபூர்வமான கொள்கை உருவாக்கம் மற்றும் மூலோபாய முதலீடுகளுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘நாடு அடிப்படையிலான பாலின சமத்துவ மதிப்பீடு’ எனும் விரிவான பகுப்பாய்வு அறிக்கை ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிறிஸ்டின் அரப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிறிஸ்டின் அரப் கடந்த மார்ச் மாதம் 25 – 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது தொழிலாளர் …

Continue Reading

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) பாராளுமன்றத்தில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய …

Continue Reading

பாராளுமன்றம் நாளை கூடும் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

பாராளுமன்றத்தை நாளையதினம் (08) கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஏப். 07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகல புதன்கிழமைகளிலும் அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமையால் நாளையதினம் (08) பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய நாளையதினம் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள …

Continue Reading

நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி

இந்தச் சலுகைகள், பணத்தை அச்சிட்டோ அல்லது கடன் பெற்றோ வழங்கப்படவில்லை. மாறாக, பெற்றுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இவை வழங்கப்படுகின்றன. – ஜனாதிபதிபாராளுமன்றத்தில் வலியுறுத்தல் புதிய பொருளாதார நிவாரணப் பொதியை சமர்ப்பித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று 2026-04-07 பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை மத்திய கிழக்கு யுத்த நிலைமையுடன் நாட்டின் பல துறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் துறைகள் குறித்து கவனம் செலுத்தி சில மானியங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். எரிபொருள் மற்றும் வலுசக்தி …

Continue Reading

இந்தியத் துணை  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்த கலந்துரையாடல்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய  துணை  ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை  ஜனாதிபதி ,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். மேலும், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள …

Continue Reading

நான்அரசியல்செய்யவரவில்லை; தென்னிந்தியதுணைத்தூதுவர்கேதீஸ்வரன்

புதுச்சேரியில் எந்தவொரு அரசியல் பிரசாரத்திலும் தான் ஈடுபடவில்லை என மறுப்பு வெளியிட்டிருக்கும்  தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், தனது இராஜதந்திரக் கடமைகளின் ஓரங்கமாக மீனவ சமூகங்களுடனான வழமையான சந்திப்பிலேயே ஈடுபட்டதாக விளக்கமளித்துள்ளார்.  தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் தமிழகத்தின் புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், இதனூடாக அவர் தேர்தல் காலப்பகுதியில் இராஜதந்திரிகளுக்குரிய விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட தலைவரான பவன் கேரா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் …

Continue Reading

புத்தாண்டுகாலஇணையவழிமோசடிகள்குறித்துப்பொதுமக்களுக்குபொலிஸார்எச்சரிக்கை

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டுப் பரிசில்கள் மற்றும் சலுகைகள் வழங்குவதாகத் தெரிவித்துச் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகளை அனுகுவதன்  மூலம் மோசடிக்காரர்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, பணத்தைச் சூறையாடும் வாய்ப்புள்ளதால்  எனவே, பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்கள் பொருட்கொள்வனவு மற்றும் கட்டணங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இணையவழி ஊடாக நிதி மோசடி மற்றும் தரவுத் தகவல்  திருட்டில் ஈடுபடும்  மோசடிகாரர்கள், பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதாக  பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் உடனடி பண இலாபத்தை எதிர்பார்க்கும் நோக்கில், சில குழுவினர் இவ்வாறான மோசடி வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் குறித்துப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன.  சமூகவளைத்தங்களில் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள், புத்தாண்டு சலுகைகள், அன்பளிப்புகள், போலியான வர்த்தக இணையத்தளங்கள் மற்றும் வங்கி இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தகவல்களை நுணுக்கமான முறையில் திருடுகின்றனர்.  அதற்கும் மேலதிகமாக, தற்போது வங்கிச் செயலிகளைப்  புதுப்பிக்குமாறு கோரும் போலியான செய்திகள், போலியான  கிவ்.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடான மோசடிகள்  மற்றும் அழைப்பாளர் அடையாளத்தை மாற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு இவ்வாறான குழுக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. அதுமாத்திரமின்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் உருவப்படங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படலாம். இதன் ஊடாகத் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, இலக்கு வைக்கப்பட்ட மோசடித் தாக்குதல்கள் மற்றும் அடையாளத் திருட்டுகளை  முகந்தெரியாத குழுவினர் மேற்கொள்கின்றனர். ஆகையால்  இணையவழி ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். 

Continue Reading

இலங்கையில் அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம்குறிப்பிடத்தக்க முன்னேற்றம்  ; ‘ப்ரீடம் ஹவுஸ்’ அறிக்கையில் தெரிவிப்பு

உலக அளவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து 20ஆவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ‘ப்ரீடம் ஹவுஸ்’  (Freedom House)    அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ப்ரீடம் ஹவுஸ் அமைப்பு, தனது ‘உலகில் சுதந்திரம் 2026’ என்ற வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை தனது புள்ளிகளில் 5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் …

Continue Reading