உயிர்த்தஞாயிறுகுண்டுத்தாக்குதல் பொறுப்புக்கூறக்கூடிய அரசியல் சூழல் இல்லை; கத்தோலிக்கத்திருச்சபை
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலானது, இலங்கையின் மிகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு தருணமாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய ஒரு உண்மையான அரசியல் சூழல் நாட்டில் உருவாகு மென கத்தோலிக்கத் திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் 05-04-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் …
Continue Reading
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு பாரதூரமானது; விஜயதாச ராஜபக்ஷ
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக முன்வைத்த சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் தான் நீதிமன்றம் சென்றார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டவர்கள், அந்த சட்டத்தை காட்டிலும் பாரதூரமான சட்டவரைவையே சமர்ப்பித்துள்ளது என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் 02-04-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைசட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாடு 2015 ஆம் …
Continue Reading
21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோள்
கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத் தகனக்கொள்கை தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகமானதுமான விசாரணைகளை நடாத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும், இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் 21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு முற்றிலும் விரோதமாக கொவிட் – 19 பெருந்தொற்றினால் மரணித்தோரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 31) ஆறு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அக்கொள்கை அமுலாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதுடன் …
Continue Reading
சட்டமியற்றமுன்னர்அரசாங்கம்உரியசட்டஆலோசனைகளைபெறவேண்டும்; பேராசிரியர்ஜி.எல்.பீரிஸ்
சட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு முன்னர் அரசாங்கம் முறையான தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை பெற வேண்டும். அரசாங்கம் சமர்ப்பித்த பல சட்டவரைவுகள் விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தாலேயே மீளப்பெறப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் சட்டமியற்றல் குறித்து மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் 02-04-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் சட்டமியற்றல் செயற்பாடு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சட்டவரைவு திணைக்களத்தால் தயாரிக்கப்படும் சட்டவரைவுகள் ஏதாவதொரு வழியில் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதை …
Continue Reading
அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு முதலாவது தேசிய வழிகாட்டல் வெளியீடு
அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டை முறைப்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதலாவது தேசிய வழிகாட்டிக் கையேடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் முடிவாக இந்த வழிகாட்டல் கையேடு தொகுக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த , சுகாதாரப் பணியாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் ஊடாக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலுள்ள ஏனைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டிற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. ஆகையால் இவ்வாறான முறையான வழிகாட்டல்கள் மூலம் தேவையற்ற விரயங்களைக் குறைத்து, நோயாளர்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியும். மேலும், திஸ்ஸமஹாராம, அவிசாவளை, உடுகம மற்றும் கேகாலை ஆகிய வைத்தியசாலைகளில் தற்போது ஒட்சிசன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேற்படி பிரிவுகளின் மூலம் அவ்வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிவதுடன், மேலதிக ஒட்சிசனை ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வழங்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இந்த வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் சுகாதாரத் துறையினரின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவும் என்றார்.
Continue Reading
ஒத்துழைப்பைவலுப்படுத்தல்குறித்துமொஸ்கோவில்உயர்மட்டசந்திப்பு
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்களை நடாத்தியுள்ளார். அதற்கமைய ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத்தலைவர் ஆன்ட்ரே டெனிஸோவை சந்தித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இருநாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று இருநாட்டு நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவதுடன் நட்புறவுக்குழுக்களை நிறுவும் நோக்கில் யுனைடெட் …
Continue Reading
உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் இலங்கை சிக்கும்; சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்
2022 ஆம் ஆண்டு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான இலங்கையின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், அது நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் கலாநிதி ரஜினி கமகே எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ரஜினி கமகேவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையில் …
Continue Reading
அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் …
Continue Reading
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர். மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார். மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான …
Continue Reading
சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது. பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் …
Continue Reading