நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்குபாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு) அவர்களின் நியமனத்திற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளராக எல்.மொஹமட் நவவி அவர்களின் நியமனத்திற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க அவர்களின் நியமனத்திற்கும், துறைமுகங்கள் …

Continue Reading

176,527 பேர்பல்கலைக்கழகஅனுமதிக்குவிண்ணப்பிக்கதகுதி

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 1,76,527 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். தித்வா புயல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகத் தாமதமாகி நடைபெற்ற இத்தேர்வில், ஒட்டுமொத்தமாக 62.64 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், வழமை போன்றே இம்முறையும் பெரும்பாலான பாடப்பிரிவுகளில் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்தின் …

Continue Reading

அமெரிக்காவின் மொன்டானாவுக்கு  தூதுவர் மஹிந்த சமரசிங்க விஜயம்

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான மாநில பங்காண்மைத் திட்டத்தின் ஊடாக மேம்பட்டுவரும் இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க 31-03-2026 அன்று மொன்டானா மாநிலத்துக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயமானது பேரிடர்கால பதில் நடவடிக்கைசார் ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கைத்தொழில் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதேவேளை, இருதரப்பினரும் பல தசாப்தகாலமாகக் கட்டியெழுப்பியிருக்கும் மீண்டெழும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக மொன்டானா தேசிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. ‘மொன்டானாவின் மலைப்பகுதிகள் முதல் இலங்கையின் கடற்கரைகள் வரை நாம் ஒரு பொதுவான …

Continue Reading

ரஷ்யாவிடமிருந்துஎரிபொருளைஅரசாங்கம்கொள்வனவுசெய்யாது; சம்பிக்க

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பகைத்துக் கொள்ளும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது. ஆகவே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை அரசாங்கம் கொள்வனவு செய்யாது. எதிர்வரும் காலங்களில் வலுசக்தி துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ளுமென ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் 01-04-2026 அன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது புத்தாண்டு நாட்டு மக்களுக்கு சுபமானதாக அமையாது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை குறிப்பிட்டுக் கொண்டு …

Continue Reading

கனடிய உயர்ஸ்தானிகருடன் மனோகணேசன் சந்திப்பு

மலையக தமிழரின் அனைத்து பிரச்சினைகளையும், தொழிலாளர் பிரச்சினையாக சுருக்குவது முறையற்றது  என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளார். கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்டினை, கனடா இல்லத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுகுழு சந்தித்து உரையாடியது. இதன்போது அரசியல் குழு உறுப்பினர்கள், பரணீதரன், பாரத் அருள்சாமி, ஆகியோரும் கலந்து கொண்ட இச்சந்திப்பு பற்றி கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;  இறுதி கட்ட போர் காலத்தில், கொழும்பு தெருக்களில் திரிந்த வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிரான எனது …

Continue Reading

இனப்பிரச்சினை தீர்வு  குறித்து பேசவில்லை – ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சிவ்வா செவ்வி

எனது இந்திய விஜயத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமான விடயங்கள் பேசப்படவில்லை என்று  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: உங்கள் கட்சி இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்றும், தற்போது திடீரென ஒரு திருப்பத்தை மேற்கொண்டு இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் பரவலாகக் கூறப்படுகிறதே? பதில்: நாங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல. அன்று ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கமும், இலங்கையில் ஜே.ஆர். …

Continue Reading

முட்டுக்கட்டை நிலையில் இருந்து தேசிய நலனுக்காக கருத்தொருமிப்புக்கு …!

கலாநிதி ஜெகான் பெரேரா கணக்காய்வாளர் நாயகமாக. சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்னவின் நியமனம் இலங்கையின் மிகவும் முக்கியமான அரசியலமைப்புப் பதவிகளில் ஒன்று தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவிய நிச்சமற்ற நிலையை. முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்னர் அந்த பதவியில் இருந்தவர் 2025 ஏப்ரிலில் ஓய்வுபெற்றதை தொடர்ந்து சுமார் பத்து மாதங்களாக நீடித்த வெற்றிடத்துக்கு நியமனத்தைச் செய்வதற்கு  அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக எடுத்த தீர்மானம் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தொடர்ச்சியை மீள உறுதிப்படுத்துவதுடன்  இலங்கையின் அரசியலமைப்பு ஆட்சிமுறை எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது என்பது …

Continue Reading

பெரியஅண்ணன்இந்தியாவிடமிருந்துகூடுதல்ஒத்துழைப்பைஎதிர்பார்க்கிறோம்; பாதுகாப்புசெயலர்

“எதிர்காலத்திலும், எமது அண்டை நாடு மற்றும் இலங்கையின் பெரிய அண்ணன் என்ற ரீதியில், பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை இந்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.   கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற இந்திய – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த, இரு …

Continue Reading

பாதிக்கப்பட்டோருக்கானசட்டஆட்சியைபலப்படுத்துவதிலேயேநாட்டிற்குசுபீட்சம் ; ஐ.நாவதிவிடப்பிரதிநிதி

ஒரு நாட்டின் சுபீட்சம் என்பது அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டத்தின் ஆட்சி எந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல தசாப்தகாலமாகத் தொடரும் நிச்சயமற்ற தன்மையின் ஊடாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் உரிமையை அழித்துவிடமுடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இவ்வாரத்தொடக்கத்தில் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ், அங்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆகியோர் …

Continue Reading

மேற்கு ஆசிய மோதல்களின் பின்விளைவுகள் குறித்து இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு

மேற்கு ஆசிய மோதல்களினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக தற்போதைய மேற்கு …

Continue Reading