ஈரான் கப்பல்களுக்கு இராஜதந்திர அழைப்ப விடுக்கவில்லை; இலங்கை அரசாங்கம்
இலங்கைக்கு வருகைத் தருமாறு ஈரானிய கப்பலுக்கு இராஜதந்திர மட்டத்தில் எவ்விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் விடுக்கவில்லை.இலங்கைக்கான ஈரானிய தூதுவர் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தயாரில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 24-03-2026அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரானிய கப்பல்களை இலங்கைக்கு வருமாறு இலங்கை அழைப்பு விடுத்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் குறிப்பிட்ட விடயம் மற்றும், ஈரானிய தூதுவர் கொழும்பில் …
Continue Reading
சர்வதேசசட்டநிபுணத்துவஅமைப்புகளுக்குஎதிர்க்கட்சிப்பிரதிநிதிகள்கூட்டாகக்கடிதம்
நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் வன்முறைகளாலும், சட்ட அமுலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டிருப்பதனாலும் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக நீதித்துறையினர் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டு சர்வதேச சட்ட நிபுணத்துவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான், நிமல் சிறிபால டி சில்வா, மனோகணேசன், திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, ரவி கருணாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோர் உள்ளடங்கலாக 18 பேர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாகப் …
Continue Reading
இலங்கையின்பாதுகாப்புத்தேவைகளில்இந்தியாநிலையானபங்காளியாகஇருக்கும்; இந்தியஉயர்ஸ்தானிகர்
இலங்கையும் இந்தியாவும் ஒரே புவியியல் அமைப்பைப் பகிர்ந்து கொள்வதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் ஆழமான வரலாற்று நலன்களைக் கொண்டுள்ளன. இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் நிலையான பங்காளியாக இருக்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற “இலங்கை இந்திய பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் உரையாற்றுகையில் தற்போதைய உலகளாவிய ரீதியிலான போர்ச் சூழல்கள் மற்றும் கொந்தளிப்பான …
Continue Reading
ஈரானைஅவமதிப்பதுமுறையானவெளியுறவுக்கொள்கையல்ல; பேராசிரியர்ஜி.எல். பீரிஸ்
எமக்கு உதவி செய்யும் நட்பு நாடுகளை அவமதிப்பது முறையான வெளியுறவுக் கொள்கையல்ல எனவும், ஈரான் தொடர்பில் அரசாங்கம் வெளியிடும் கருத்துகள் அந்த நாட்டுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், எமக்கு உதவும் நட்பு நாடுகளை இதுபோன்று ஒருபோதும் அவமதித்திருக்க மாட்டோம். அண்மையில் இலங்கை வந்த ஈரான் கப்பல் குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் மிகவும் தெளிவான கருத்தை முன்வைத்திருந்தார். இலங்கைக் கடற்படைத் தளபதியின் நேரடி அழைப்பின் பேரில், ஒரு நட்பு ரீதியான பயணமாகவே அந்தக் கப்பல் இலங்கை வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பாகும். எனினும் அவ்வாறானதொரு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கூறுவது முற்றிலும் தவறானது. ஈரான் தூதுவரின் கூற்றை அரசாங்கம் பொய்யெனக் கூறுவது நூறுவீதம் தவறான செயலாகும். ஈரானிடம் சென்று எரிபொருள் உதவி கோருகிறோம், அவர்களும் இலங்கையை ஒரு நட்பு நாடாகக் கருதி எமக்கு உதவ முன்வருகின்றனர். இலங்கைக்குத் தேவையான எரிபொருளைக் கொண்டுவரும் கப்பல்களுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டோம் என ஈரான் உறுதியளித்துள்ளது. அங்குள்ள எமது நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் எமக்கு உதவும் ஒரு நாட்டின் தூதுவர் கூறும் கருத்தைப் பொய்யெனக் கூறி அவர்களை அவமதிப்பது முறையான இராஜதந்திரம் அல்ல. அது ஈரான் அரசாங்கத்தின் கன்னத்தில் அறைவது போன்ற செயலாகும். இவ்வாறான பொறுப்பற்ற வெளியுறவுக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மேலும் தற்போதைய அரசாங்கம் எந்தவொரு புதிய திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த அதே எரிபொருள் விலை சூத்திரத்தையே இவர்களும் பின்பற்றுகின்றனர். குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாக்க முறையான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு ஒன்றை உருவாக்க இவர்களால் முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. நிலக்கரி மோசடி காரணமாக இன்று நாட்டு மக்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஒரு நாளைக்கு 8 இலட்சம் லீட்டர் டீசலை மேலதிகமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். பொதுமக்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் கொண்டுவர முயற்சிக்கின்றது. இது 1979 ஆம் ஆண்டின் சட்டத்தை விட பத்து மடங்கு ஆபத்தானது. இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் மக்களின் குரலை ஒடுக்க முடியாது என்றார்.
Continue Reading
பராட்டேசட்டஅமுலாக்கத்தைஉடன் இடைநிறுத்தவேண்டும்; எதிர்க்கட்சித்தலைவர்சஜித்
பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பில் 25-03-2026 அன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. அச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேகமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 52 சதவீதம் பங்களிப்புப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரும் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த …
Continue Reading
தித்வாவின் தாக்கங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை பின்னர் இன்னமும் சீரமைக்கப்படாத சேதமடைந்த வீதிகள், குடிநீர் மற்றும் மின்விநியோகத்தடை போன்ற இடையூறுகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா கவலை வெளியிட்டுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, கேகாலை …
Continue Reading
மத்திய கிழக்கு நாடுகளில் தேயிலையின் கேள்வி அதிகரிப்பு; இலங்கை தேயிலை சபை
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கைத் தேயிலைக்கு பாரிய கேள்வி நிலவுவதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் மக்கள் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முற்படுவதே இந்த அதிகரிப்புக்கு காரணம் ஆகும். மோதல்கள் ஆரம்பமான முதல் வாரத்தில் தேயிலை ஏலத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், தற்போது விலையும் தேயிலைக்கான தேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. …
Continue Reading
அரசசேவையைசீராகமுன்னெடுப்பது குறித்து பிரதமர் ஹரிணி தலைமையில் ஆராய்வு
அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி 24-03-2026 அன்றுஅலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, திட்டமிட்டபடி …
Continue Reading
அநுரவுக்கும் – மோடிக்கும்இடையில்தொலைபேசிஉரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று 24-03-2026அன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான …
Continue Reading
கைத்தொழில் துறையினருக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு;பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
நாட்டின் பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையினருக்கு தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு உற்பத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு போதுமானதாக இல்லை என கைத்தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2,300 கைத்தொழில் …
Continue Reading