தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடக அறிவித்தல் 2026.04.28

தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மையுடைய போதை பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்துக்கொண்டிருந்த 20 பேரை கொண்ட பௌத்தப்பிக்கு குழுவினரை கைது  செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம்.

இலங்கை அரசின் அத்திவாரமாக கருதப்படும் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் கோட்பாடுகளை மேம்படுத்திய அதி வணக்கத்துக்குரிய பௌத்த பிக்குகளின் பிம்பத்தை போர்வையாக பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டது மிகப் பாரதூரமான விடயமாகும். இவ் விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்வதேச பார்வையை கருத்தில் கொள்கையில் இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானகரமான சம்பவமாகும். இந்த சூழலில் தராதரம் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கட்டாயம் என்பது எமது புரிதலாகும்.

பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மதத்தை பாதுகாக்கும் கடமை உள்ள பிக்குகளும் அரசு அதிகாரிகளும் முந்தைய அனுபவங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதின் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டியுள்ளது. தற்போதைய சட்ட விதிமுறைகளுக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கும் திறன் தெளிவாக உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் மதத்தின் தூய்மை கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவ மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சங்க சபை செயற்குழு முன்னிலையில் இருக்கும் சவால்களை நிவர்த்தி செய்வது தேசிய கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

இதற்காக மதப் பற்றாளர்கள் மற்றும் அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள் பலரின் ஆசிர்வாதத்தை பெற்று பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. தேரவாத கதிகாவ (பதிவு செய்தைல்) சட்டத்தின் தேவை மற்றும் விகாரை மற்றும் அறநிலையங்கள் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் இவை தொடர்பில் பல்வேறு பரிந்துரைகளை நாங்கள் அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம் இவை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறோம்.

இதன்போது தேரவாத பிக்குகளின் நிகாய அல்லது தரப்பிற்கான சட்டங்களை உருவாக்கி, பதிவு செய்து குறித்த பிக்குகள் தமக்குரிய தரப்பின் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும் என்பதற்கான விதிமுறையையும், பதிவு செய்யப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் பிக்குகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் அதனுடன் தொடர்பு பட்ட விடயங்களுக்கான கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் இந்த சட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதற்காக தயாரித்த சட்டமூலம் 2015 டிசம்பர் மாதம் 11-ம் திகதி வர்த்தமானியின் ஊடாக வெளியிடப்பட்டது. அந்த சட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாதமை இலங்கையின் ஒட்டுமொத்த பௌத்தர்களும் வருத்தம் அடைய வேண்டிய விடயமாகும்.

இது போன்ற சட்டங்கள் அங்கீகாரம் பெறாத சூழ்நிலையில், பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் இது போன்ற பிக்கு வேடதாரிகளுக்கு உகந்த நடவடிக்கை எடுப்பதற்கு நிகாயகளின் தலைமை நாயக்க தேரர் அவர்களுக்கோ, செயற்குழு சங்க சபைகோ அதிகாரம் இல்லை. ஆகையால் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை செவிமடுத்து விரைவாக தேரவாத பிக்கு கதிக்காவை சட்டத்தை நிறைவேற்றுமாறு கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையின் பௌத்த மதத்தின் இருப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தின் கடமையை நிறைவேற்றுமாரும் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்காபிமானி கரு ஜயசூரிய, தலைவர், சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

Leave A Comment