செயற்கை நுண்ணறிவு (AI):’உலகளாவிய ஆளுகை செயற்றிட்டம் பற்றிய ஒருபார்வை’

செயற்கை நுண்ணறிவு பற்றிய உலகளாவிய உயர்மட்டக்கூட்டமானது, ஜூலை 26முதல் 28வரையில் ஷங்காயில் நடைபெற்றிருந்த நிலையில் செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய ஆளுகை செயற்றிட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அச்செயற்றிட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

செயற்கை நுண்ணறிவு என்பது அண்மைக்காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்புரட்சியின்  முக்கியமான மைல்கல்லாகும். அத்துடன் மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் சர்வதேச பொது நன்மையான விடயமாகுமாக பார்க்கப்படுவதோடு அதன் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.

அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவானது எப்போதுமில்லாத சவால்களையும் பாதிப்புக்களையும் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு தசாப்;தத்தில், உலகளாவிய ஒற்றுமையின் மூலமாக மட்டுமே, அதன் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் சமநிலையை உறுதிசெய்துகொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி, ‘ஐக்கிய நாடுகளின் எதிர்காலத்திற்கான உடன்பாடு மற்றும் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம்’ ஆகியவற்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, நிலையான, நியாயமான, பாதுகாப்பான, அறிவார்ந்த டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

அதற்காக, முன்வைக்கப்படுகின்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை செயற்றிட்டம்; நல்ல நோக்கங்களுக்காகவும், மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும்;, தேசிய இறையாண்மையை மதித்தல், வளர்ச்சி இலக்குகளுடன் இணைத்தல், பாதுகாப்புக் கட்டுப்பாட்டை உறுதிசெய்தல், சமத்துவத்தை நிலைநிறுத்துதல், திறந்த ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகிய இலக்குகளின் அடிப்படையில், அனைத்து தரப்பினரும் உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாகின்றன.

செயற்கை நுண்ணறிவின் வாய்ப்புக்களை கூட்டாகப் பயன்படுத்துதல்

அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட குடிமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் தீவிர பங்கேற்பு, ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படுவதோடு டிஜிட்டல் உட்கட்டமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிநவீன கண்டுபிடிப்புகளை கூட்டாக ஆராய்தல், உலகளவில் பயன்பாடு, பிரயோகத்தை ஊக்குவித்தல், உலகளாவிய பொருளாதார சமூக வளர்ச்சிக்கு அதிகாரம் அளிப்பதில் மகத்தான ஆற்றலை அதிகப்படுத்துதல், ஐக்கிய நாடுகளின் 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை செயற்படுத்துவதற்கு ஆதரவளித்தல், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவின் புதுமையான வளர்ச்சியை ஊக்குவித்தல்

திறந்த மனப்பான்மையுடன், துணிச்சலான ஆய்வுகளுக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக பல்வேறு சர்வதேச தளங்களை நிறுவவேண்டும். புதுமைகளை ஊக்குவிக்கும் கொள்கை சூழலை வளர்க்க வேண்டும். தேசிய கொள்கை, ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தொழில்துறைகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அதிகாரமளித்தலை மேம்படுத்துதல்

உற்பத்தி, நுகர்வு, வணிகப்புழக்கம், சுகாதாரம், கல்வி, விவசாயம், வறுமை ஒழிப்பு மற்றும் பிற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஸ்மார்ட் நகரங்கள் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதை முன்னெடுக்க வேண்டும். மேலும், ஒரு பன்முகத்தன்மை, ஆரோக்கியமான, நல்ல நோக்கங்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வளர்க்க வேண்டும்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு கட்டுமானத்தை விரைவுபடுத்துதல்

உலகளாவிய தூய மின்சாரம், அடுத்த தலைமுறைக்கான வலைப்பின்னல்கள், அறிவார்ந்த கணினி சக்தி, தரவு மையங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும் ஒன்றோடொன்று இணக்கமான டிஜிட்டல் உட்கட்டமைப்பின் அமைப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்.

பன்முகத்தன்மை, மற்றும் புதுமையான சூழலை உருவாக்குதல்

அரசாங்கங்கள், தொழில்துறைகள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பல பங்குதாரர்களின் பங்கேற்புடன் செயற்கை நுண்ணறிவு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன், செயற்கை நுண்ணறிவின் ஆளுகை குறித்த சர்வதேச பரிமாற்றங்கள், உரையாடல்களை கூட்டாக ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகள் தளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

உயர்தர தரவுகளின் வழங்கலை தீவிரமாக மேம்படுத்துதல்

உயர்தர தரவுகளுடன் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை இயக்க வேண்டும். தரவுகளின் சட்டபூர்வமான, சுதந்திரமான பயணத்தை எளிதாக்க ஒத்துழைக்க வேண்டும். தரவுப் பகிர்வுக்கான உலகளாவிய பொறிமுறைத் தளத்தை உருவாக்குவது தொடர்பில் ஆராயவேண்டும். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அதிகளவான வாய்ப்புக்களை வழங்குவதோடு தனிப்பட்ட தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை திறம்பட தீர்த்தல்

நிலையான செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தை ஆதரிப்பதோடு வளங்களைச் சேமிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாதிரிகளில் தொடர்ச்சியான ஆய்வுகளையும் புத்தாக்கங்களையும் ஆதரிப்பது முக்கியமானதாகும். பசுமை மாற்றம்,  காலநிலை மாற்றம், பல்லுயிர்வகைமை உள்ளிட்ட பிற துறைகளுக்குள் செயற்கை நுண்ணறிவு உள்ளீர்க்கப்படுவதை ஊக்குவதித்தல் வேண்டும்.

தரநிலைகள், விதிமுறைகள் குறித்த பொதுவான புரிதலை ஊக்குவித்தல்

நாடுகளின் தரநிலைகளை உருவாக்கும் அமைப்புகளுக்கு இடையே அதிக உரையாடல்களையும், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம், சர்வதேச தர நிர்ணய அமைப்பு, சர்வதேச மின்னியல் தொழில்நுட்ப ஆணையகம் போன்ற சர்வதேச தர நிர்ணய அமைப்புகளின் பங்களிப்புக்களையும் ஆதரித்தல்

பொதுச்சேவைப் பிரயோகத்திற்கு தலைமை தாங்குதல்

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற பொது சேவைகளில் நம்பகமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்காக சர்வதேச பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த மதிப்பீடு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பை மேம்படுத்துதல்

செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை சரியான நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும். இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு, பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்மொழிய வேண்டும். முகாமைத்துவ அணுகுமுறைகளை ஆராய வேண்டும். செயற்கை நுண்ணறிவுக்கான அபாய சோதனைகள்,  மதிப்பீட்டு அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், தகவல்களைப் பகிர்வதில் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கான பதிலளிப்புக்கள் மேம்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்தை கூட்டாக செயல்படுத்துதல்

ஐக்கிய நாடுகளின் எதிர்காலத்திற்கான ஒப்பந்தம் மற்றும் இணைப்பு, உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உறுதிமொழிகளை நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும். ஐ.நா.வை முக்கிய வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளிடையே டிஜிட்டல் பிளவை குறைத்து சமமான வளர்ச்சியை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். சர்வதேச சட்டத்திற்கு இணங்குதல், தேசிய இறையாண்மை மற்றும் வளர்ச்சி வேறுபாடுகளை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான பல்தரப்பு உலகளாவிய டிஜிட்டல் ஆளுகை அமைப்பை நிறுவ ஊக்குவிக்க வேண்டும். அதன்மூலம், வளர்ந்து வரும் நாடுகள் செயற்கை நுண்ணறிவு குறித்த புதுமைகளையும், பயன்பாடுகளையும் தங்களின் விரிவான திறன் மேம்பாட்டை அடைவதற்காக ஆதரவளிக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளை மையப்படுத்திய செயற்பாடுகள்

செயற்கை நுண்ணறிவின் ஊடாக பிளவுகளைக் குறைப்பதற்காக செயற்படும் அதேநேரம், பெண்கள், குழந்தைகளின் டிஜிட்டல் மற்றும் அறிவார்ந்த உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தி, பொதுமக்களின் செயற்கை நுண்ணறிவு அறிவுத்திறன்களை மேம்படுத்த கூட்டாக பணியாற்ற வேண்டும்.

பல பங்குதாரர் ஆளுகை மாதிரியை உருவாக்குதல்

பொதுநலன்கள், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் கூட்டு பங்கேற்பின் அடிப்படையில் ஆளுகை தளங்களை நிறுவுவதை ஆதரிப்பதோடு வௌ;வேறு நாடுகளிலிருந்து வரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை உரையாடல் மற்றும் பரிமாற்றங்களில் ஈடுபடவும், பல்வேறு துறைகளில் ஒருவருக்கொருவர் பயன்பாட்டு நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், குறிப்பிட்ட களங்கள், சூழ்நிலைகளில் புதுமை, பயன்பாடு, நெறிமுறைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட வேண்டும்.

ஆராய்ச்சிக்கான சிந்தனைக் குழுக்களையும் சர்வதேச தளங்களையும் உலகளாவிய, பிராந்திய பரிமாற்றம், ஒத்துழை ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களாக உருவாக்க ஊக்குவிக்க முடியும். அதன்மூலம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள், உருவாக்குநர்கள் மற்றும் ஆளுகைத் துறைகளின் தொழில்நுட்பம், கொள்கை குறித்து தொடர்ந்து உரையாடல்களையும், இருதரப்பு- பல்தரப்பு தொடர்பாடல்களையும் பேணவும் முடியும்.

Leave A Comment