தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில்ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களை நிரப்புங்கள்
- Editor
- March 10, 2025
- அரசியல், தமிழ் Header
- 0 Comments

– சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தல்
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவில் தற்போது பல்வேறு பதவிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவ்வெற்றிடங்களை நிரப்புவதுடன் ஆணைக்குழுவை மேலும் வலுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தகவல் அறியும் உரிமை தொடர்பிலான ஆணைக் குழுவில் பல வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு, விரைவில் அந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்து குழுவின் பணிகளை மேலும் வலுப்படுத்த அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்
நாட்டின் நன்மைக்கும் பிரஜைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் பெருந்துணையாக அமையும் தகவல்களை தடையின்றி மக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை ஒரு காலகட்டத்தில் ஆட்சியாளர்கள் அரசுக்கு எதிரான செயற்பாடு என கருதினர்.
இந்த யோசனைக்கு எதிராக நாட்டின் சில தலைவர்கள் வெளிப்படுத்திய வெறுப்பின் காரணமாக இதற்காக முன்வந்து செயற்பட்ட பலருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்த நேர்ந்தது. 2002இல் பாராளுமன்றத்தில் தனி உறுப்பினர் பிரேரணையாக கொண்டு வந்த இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு 2016 ஆவது வருடம் வரை 14 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
எவ்வாறாயினும் தகவல் அறியும் உரிமை தொடர்பிலான ஆணைக் குழுவை நிறுவுவதற்கான சட்டத்தின் காரணமாக நாட்டில் வேறு ஊன்றி இருந்த ஊழல், வீண் விரயம் மற்றும் முறைகேடுகளை குறைத்துக் கொள்வதற்கு மாபெரும் பங்களிப்பு இதன் ஊடாக கிடைத்தவுடன், இன்று வரை பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக்களின் ஊடாக மேற்கொள்ளும் விசாரணைகளின் ஊடாக வெளிவரும் தகவல்களை பேசும் பொருளாக கொண்டு வருவதற்கு அந்த வெற்றி பாரிய பின்புலமாக அமைந்தது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
ஆகையால் கடினமான நீண்ட கால போராட்டத்திற்கு பின் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக் குழுவை மீண்டும் துரிதமாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரதும் கடமை என்பதை வலியுறுத்துவதுடன், இவ் விடயம் தொடர்பில் தனது கவனத்தை செலுத்துமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ள விரும்புகிறது.

