மே மாதத்தில் பணவீக்கம் 5.5 சதவீதமாக உயர்வு
- Editor
- June 3, 2026
- பொருளாதாரம்
- 0 Comments
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் தீவிரமடைந்த மோதல்களை அடுத்து உள்நாட்டுப் பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பணவீக்கம் மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்வடைந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 2.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் மே மாதத்தில் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்த போதிலும், ஏப்ரலில் 6.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் மே மாதம் 7.8 சதவீதமாக உயர்வடைந்தது.
அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மாதாந்த அடிப்படையில் நோக்குகையில் மேமாதம் 0.9 சதவீத அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது.
அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 3.8 சதவீதமாகக் காணப்பட்ட மையப்பணவீக்கம், மே மாதத்தில் 3.9 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தது.
அண்மைய காலப்பகுதியில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமைடைந்த மோதல்களின் விளைவாக உருவான நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அவை உலகளாவிய, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் என்பவற்றின் விளைவாக இந்த நிச்சயமற்ற பணவீக்க நிலைமை தொடர்வதாகவும்,

