கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்த போது ராஜ் சோமதேவ உறுப்பினர்; கஜேந்திரகுமார் எம்.பி.
- Editor
- October 23, 2026
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்த போது அந்த குழுவின் உறுப்பினராக ராஜ் சோமதேவ செயற்பட்டார். ராஜ் சோமதேவ சிங்கள, பௌத்த தேசியவாதி.இவர் நிகழ்சி நிரலொன்றி அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.உள்ளக வவிசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் 22-10-2026 அன்று நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவ தனது அறிக்கையின் 17ஆவது பக்கத்தில் ”சுகாதார விபத்து காரணமாக கணிசமான நபர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப் போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை” என்ற கருத்தை தெரிவித்துள்ளார். அதே பந்தியில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்யவுள்ள காரணத்தினால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, சுகாதார விபத்தில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார். பேராசிரியர் ராஜ் சோமதேவ இவ்வாறு எந்த அடிப்படையில் அறிக்கையில் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்,
17 பக்கத்தை உள்ளடக்கிய வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பிலும் விபத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிட்ட விடயத்தை அழுத்திக் கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் அவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது
இதேவேளை அவர் இதற்கு முன்னர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இதற்கு முன்னர் செம்மணி தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்த தரப்புகளும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ராஜன் ஹுல் என்பவர் 1999ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில் செம்மணியில் உடல்கள் ஆடைகள் இன்றி புதைக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு முகாம்களில் இருந்து கொண்டு சென்று செம்மணியில் புதைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் செம்மணி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்த் தேசியப் பேரவையின் நிலைப்பாடானது, தொல்லியன் நிபுணர் ராஜ் சோமதேவ என்பவர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகின்றார். இதனை நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். அவருடைய கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். கோதாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் தொடர்பான குழுவை அமைக்கப்பட்ட போது, ராஜ்சோமதேவவையும் இணைத்திருந்தார். அவரொரு ச சிங்கள, பௌத்த தேசியவாதியாவார். அவர் நிகழ்சி நிரரொன்றில் இயங்குகின்றார் என்பது இப்போது வெளிவந்துள்ளது.உறுதியாகியுள்ளது.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இந்த நாட்டுக்குள் மேற்கொள்ள முடியாது என்பதனை தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம். இந்த அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும். இந்த குற்றங்களை செய்தவர்கள் தனியாக செய்யவில்லை. இதனால் சர்வதேச விசாரணைக்கு இணங்காமல் உண்மையை கண்டறிய முடியாது. இப்போதாவது அரசாங்கம் கண்களை திறக்க வேண்டும்.
செம்மணியில் கிட்டத்தட்ட 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 600 உடல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதூரமான குற்றம் நடந்துள்ள சம்பவத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். அரசாங்கத்திடம் இனவாதம் இல்லையென நிரூபிப்பதென்றால்,முன்னைய ஆட்சியாளர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதனை நிரூபிப்பதாக இருந்தால் தயவு செய்து இந்த விடயத்திலாவது சர்வதேச குற்றவியல் விசாரணையை தடுக்காமல் இதற்கு இணங்க வேண்டும் என்றார்.

