இலங்கை சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்; 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் வருகை
-
Editor
-
September 7, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்யும் வகையில், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இதன்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டப்.டப்.எஸ். மங்கல ஆகியோரும் கலந்துகொண்டனர். இச்சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதுடன், சீகிரியா மற்றும் அனுராதபுரம் போன்ற இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். …
Continue Reading
இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைந்து பயணிக்க அரசாங்கம் தயார்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, தாம் வணிகங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தற்போதைய நிர்வாகம் நிரூபித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் அரசின் திட்டத்துக்கு அமைவாக இந்த மின்சார ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொலன்னறுவையில் நடைபெற்ற கனவு இலக்கு மக்கள் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொலன்னறுவை புகையிரத நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட …
Continue Reading
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி; இந்தியா – இலங்கை இடையே முக்கிய பேச்சுவார்த்தை
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக வளாகத்தில் நடைப்பெற்றது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்து கொண்டனர். அத்துடன் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சகச் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்களா, துறைமுக அதிகார …
Continue Reading
இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒருங்கிணைந்த ஏழாவது மறு ஆய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நான்காம் பிரிவு கலந்துரையாடலினை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 தொடக்கம் 23 வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜார்ஜியோ தலைமையிலான இந்த குழு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதுணையுடன் பொருளாதார சீர்த்திருத்தத் திட்டத்தில் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தினையும் அண்மைய பேரியல் பொருளாதார நிகழ்வுகளையும் …
Continue Reading
பிராந்திய ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு வழங்கப்படும்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
பிராந்திய மட்டத்தில் ஏற்றுமதித் துறையின் விரைவான வளர்ச்சியை எட்டும் நோக்கில் ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை எதிர்ப்பாகும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமேல் மற்றும் வட மத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை ஒன்றிணைக்கும் பிராந்திய வலையமைப்பு மாநாடு அண்மையில் சிலாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் …
Continue Reading
மத்தியவங்கி – திறைசேரிக்கிடையிலானகொள்கைமுரண்பாடு; அரசாங்கநிதிபற்றிகுழுத்தலைவர்ஹர்ஷ
மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகிய இரு முக்கிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கொள்கை முரண்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றி குழுவின் இறுதி அறிக்கை, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இக்குழுவின் விசாரணை அமர்வுகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளதால், அது தொடர்பான காணொளி பதிவுகளும் நாட்டின் பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் நாங்கள் …
Continue Reading
பொருளாதார மீட்சியானது மக்களுக்கு உண்மையான பலன்களை வழங்க வேண்டும்; ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது. தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதற்கும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருப்பதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தைப் பாராட்டியது.பல சவால்களுக்கு மத்தியிலும்இ இலங்கை உறுதியுடன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொண்ட நிதியம், நாடு தனது பொருளாதார மீட்சியை நோக்கி நகரும் போது அரசாங்கத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது. வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக அல்லாமல், பொருளாதாரக் …
Continue Reading
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சி பாராட்டத்தக்கது; சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் உறுதி
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் ஏற்றுக்கொண்டு, இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உறுதியளித்தனர். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, …
Continue Reading
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி,ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
Continue Reading
அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல் தொடர்பில் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆராய்வு
கனேடிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அபிவிருத்தியில் பெண்கள் – பொருளாதார ரீதியிலான வலுவூட்டல் மற்றும் சிறிய, நடுத்தரளவிலான நிறுவனங்களின் நிலைபேறான தன்மை’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் உள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் இல்லத்தில் நடைபெற்றது. இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு இலங்கை, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை தலைவர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் வகையிலேயே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு …
Continue Reading