இலங்கையின் மேம்பட்ட எதிர்காலத்துக்கு சமஷ்டியே பொருத்தம்

  • இலங்கையில் விஷசத்துக்கு நிகராக சமஷ்டியைப் பார்க்கும் நிலைமை
  • சர்வதேச அரசியல்சாசனத்தின் ஊடாக சுயநிர்ணய உரிமையை அடையலாம்
  • சமாந்தரமாக நகர்த்தப்பட வேண்டிவையே அரசியல்தீர்வும், பொறுப்புக்கூறலும்
  • நிலைமாறுகால நீதிவிடயத்தில் சர்வதேச தரப்பின் மீது அதிருப்தி

இலங்கையின் மேம்பட்ட எதிர்காலத்துக்கு சமஷ்டி முறைமையை முன்னெடுப்பதே பொருத்தமானது. அந்த இலக்குநோக்கிய பயணத்தில் தற்போதைய ஏற்பாடாக உள்ளக சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியதும் பகிரப்பட்ட அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான செனட் சபையை ஸ்தாபிப்பதும் பொருத்தமானது என்று பேராசிரியர் ஈவா மரியா பெல்சர் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.

பேராசிரியர் ஈவா மரியா பெல்சர், சுவிட்சர்லாந்தின் பிரிபோர்க் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்ட பீடத்தின் தலைமைய வகிப்பதோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பிரிவின் தலைமையை வகிப்பதோடு, பெடரலிசம் கற்கைகள் நிலையம் மற்றும் சர்வதேச மையத்தின் இணைத்தலைவராகவும், அவர் சுவிஸ் மனித நிபுணத்துவ மையத்தின் அங்கத்தவராகவும் உள்ளார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டிமுறை ஒப்பீட்டு, அரசியலமைப்புச் சட்டம், அதிகாரப்பரவலாக்கம், உலகமயமாக்கல், தேசிய, சர்வதேச மனித உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், ஜனநாயக வளர்ச்சி, அரசியலமைப்பு உருவாக்கம், மோதல் தீர்வு ஆகிய விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும் உள்ளார். அவர் வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

பதில்:- சுவிட்சர்லாந்தில் சமஷ்டி முறைமை அமுலாக்கம் என்பது வெற்றிக்கதையாகும். இதனை பல வடிவங்களில் பார்க்கலாம். அரசியல், சமூக, மொழி, பல்வகைமையில் ஐக்கியமான நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு சமஷ்டி முறைமை உதவியுள்ளது.

சுயாட்சி, மாநிலங்களுக்கான அதிகாரப்பகிர்வு, ஆகியவற்றுடன் ஐக்கியமான ஒருங்கிணைவானது சமஷ்டி முறைமை செயற்பாட்டு ரீதியான வெற்றியைப் பெறுவதற்கு வழிசமைக்கிறது.

சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரையில் சமஷ்டி நடைமுறையானது 175வருடங்கள் பழமைவாய்ந்ததாக உள்ளது. இதனால் வரலாற்று ரீதியாக பார்க்கின்றபோது தற்போதைய சூழலில் பல்வேறு விடயங்களில்; மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து சிறிய நாடாக இருக்கின்றபோதும் 26மாநிலங்கள் காணப்படுகின்றன. குறித்த மாநிலங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களை பாதுகாத்து தமது விடயங்களை தாமே தீர்மானிக்கின்றன.

அத்துடன் பாராளுமன்றமுறைமை காணப்படுவதோடு அதிகாரக்குவிப்பின் அடையாளமான நிறைவேற்று அதிகாரம் காணப்படாமையும் மக்களின் இறைமையை உறுதி செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது.

பதில்:- நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டையும் மையப்படுத்திய இந்தக் கேள்வி முக்கியமானது. குறிப்பாக, ஆசிய நாடுகள் பல சமஷ்டி முறைமையை மேற்குலகத்தின் திணிப்பு என்றே பார்க்கின்றன. அந்தப் பார்வை தவறானது. உலகளாவிய ரீதியில் வௌ;வேறு வகையான சமஷ்டி முறைமையைக் கொண்ட பல நாடுகள் காணப்படுகின்றன. எதிரோப்பியா, நைஜீரியா, இந்தியா (அதிகாரக் கட்டமைப்பு முறைமையின் அடிப்படையில் சமஷ்டி) போன்ற பல நாடுகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவை எடுத்துக்கொண்டால் அது ஒற்றையாட்சி நாடாகும். ஆனால் அங்கும் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

சுயாட்சியை மையப்படுத்திய வேறுவேறுவகையான அதிகார, ஆட்சிக் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றபோது அவை சமஷ்டி முறைமையாகவே தான் கொள்ளப்படுகின்றன.

அதேநேரம், ஆசிய நாடுகள் பல சர்வாதிகாரப் போக்கை பின்பற்றவும் சிறுபான்மையிருக்கு அதிகாரங்களை பகிர்வதில் விருப்பமற்ற மனோநிலையைக் கொண்ட தலைவர்களையும் கொண்டிருக்கின்றமையும் மற்றொரு காரணமாகின்றது.

தற்போதைய நிலையில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் சமஷ்டி பற்றிய உரையாடல்கள் தோன்றியுள்ளன. அவற்றின் முன்னேற்றகரமான போக்கால் இலங்கையும் விரைவில் கவரப்படலாம்.

பதில்:- இலங்கை பல்லின, மத, மொழிகளைக் கொண்ட நாடாக இருக்கின்றது. இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் ஐக்கியம் கட்டியெழுப்பப் படுவதாக இருந்தால் சமஷ்டி முறைமையை மையப்படுத்திய செல்நெறியே பொருத்தமாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக, சமஷ்டி முறைமையானது, தமிழ் மக்களுக்கு உரித்தானது என்றும் சமஷ்டி இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயம் என்றும் தான் இலங்கையில் பார்க்கப்படுகின்றது. சமஷ்டி பிரிவினையை தூண்டும் என்றும் நம்பப்படுகின்றது.

ஒட்டுமொத்தமான தீவு தேசத்தின் மேம்பாட்டுக்கும் அவசியமானதொரு விடயம் என்பது உணரப்படவில்லை. ஒற்றையாட்சி முறைமையால் அனைத்து விடயங்களையும் கொழும்பே தீர்மானிக்கின்றது. தீர்மானிக்கும் சுயம் தமக்கு இல்லை என்பது அனைத்தின மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் காணப்படுகின்ற உணர்வுபூர்வமான வரலாற்றுப்பின்னணியினால் இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு அச்சமான மனோநிலை காணப்படுகின்றமை என்னால் உணர முடிந்தது.

பதில்:- ஆம், நீண்டகால முரண்பாடுகளுக்குப் பின்னரான சூழலில் இனங்களுக்கு இடையிலான நம்பகத்தன்மை கட்டியெழுப்பபடவில்லை. முரண்பாடுகளுக்கான மூலகாரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.

முதலில் புரிந்துணர்வுக்கான கலந்துரையாடல்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவை நடைபெறாமையானது தீவு தேசத்தின் அரசியல்,பொருளாதார பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைத்துத் தரப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில வேளைகளில் பரம்பரை ரீதியான மாற்றங்களால் அனைத்து தரப்புக்களிடையேயும் நம்பிக்கை ஏற்படுவதில் பரஸ்பர முன்னேற்றகரமான நிலைமைகள் தோன்றுவதற்கு வாய்;ப்புக்கள் உள்ளன.

பதில்:- ஒருமைப்பாடும், அமைதியும் நிறைந்த மேம்பட்ட எதிர்காலத்தினை இலங்கை அடைவதாக இருந்தால் ‘சமஷ்டி நாடு’ என்ற அடையாளமும் அங்கீகாரமும் அவசியமாகின்றது.

சமஷ்டி என்ற சொற்பதம் அச்சமாக காணப்படுமாக இருந்தால் அதனைத் தவிர்த்துவிட்டு அதிகாரங்களை பகிர்வதற்கான உரையாடல்களை முன்னெடுக்க முடியும். கிராமத்தில் வாழுகின்ற சதாரண பொதுமகனின் உள்ளத்தில் கொழும்பு என்னை ஆட்சி செய்யவில்லை என்றதொரு நிலைமை உருவாக்கப்படுவது தான் இலக்காக இருக்க வேண்டும்.

இலங்கை மரபுரீதியான அதன் ஜனநாயக வரலாற்றை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சமஷ்டியை நோக்கிய கலந்துரையாடல் அவசியமாகின்றது. கலந்துரையாடல்களில் போது பல்வேறு முறைமைகள் பற்றி பரிசீலிக்கலாம். உடன்பாடுகளை எட்டலாம்.

முதலில் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது தான் பிரதானமானது. அதற்குரிய நகர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் சாத்தியமான நிலையை அடைகின்றபோது அரசியல்சாசன ரீதியான தீர்வு சாத்தியமாகும்.

பதில்:- இடையீடு செய்வதற்கு மன்னிக்கவும், நான் விஜயம் செய்த அனைத்து தருணங்களிலும் சமஷ்டி பற்றி உச்சரிப்பதற்கே இடமளித்திருக்கவில்லை. பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது, சமஷ்டி என்ற பதம் விஷமாகவே பார்க்கப்பட்டது. சமஷ்டி நாட்டின் ஆட்புல எல்லைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாகவே கருதப்பட்டதை உணர்ந்து கொண்டேன்.

பதில்:- வடக்கு,கிழக்கை மையப்படுத்திய தரப்பினர் தங்களை சிறுபான்மையினராக அடையாளப்படுத்துகின்றார்கள். தங்களை தாங்களே ஆட்சிசெய்யக்கூடிய வகையில் சுயாட்சி அதிகாரங்களை கோருகின்றார்கள். தமக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

தீவு தேசத்தின் ஏனைய பகுதியில் உள்ளவர்கள் அதிகாரங்களை வழங்கினாலும் அதிகாரங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். இதுதான் சிக்கலுக்குரிய பிரச்சினையாக அடைளாயம் காண்கின்றேன்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பில் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன. அவற்றை சுயாதீனமாக இயங்குவதற்கான அதிகாரங்களை பகிர்வது பொருத்தமானது. ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களும், மாகாண சபைகளும் தமக்கு தேவையான இலக்குகளை அடைவதில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பிக்கின்றபோது முரண்பாடுகள் குறைவடையும்.

ஏனென்றால், அக்கட்டமைப்புக்கள் தமது வினைத்திறனான செயற்பாட்டுக்காக நிதி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற விடயங்களை கையாள்வதில் அதிகமான நேரத்தினைச் செலவிட வேண்டியிருக்கும்.

ஆகவே, சமஷ்டி நோக்கிய பயணத்துக்கு முன்னதாக அதிகாரக்கட்டமைப்புக்களை சுயாதீனமாகச் செயற்படச் செய்வதன் ஊடாக தீவு தேசத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

பதில்:- மிகவும் இக்கட்டானதொரு கேள்வியைத் தொடுத்துள்ளீர்கள். உங்களுடைய நாட்டுக்கு விஜயம் செய்து உரையாடி சந்தர்ப்பங்களில் சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாடுகளை வலுவாக முன்வைப்பவர்களிடத்தில் நான் இந்தக் கேள்வியை தொடுத்திருக்கின்றேன். பதில் கிடைக்கவில்லை.

உண்மையில், இந்தக் கேள்வி அதிக அரசியல் உணர்திறன் கொண்டது. இருப்பினும், சிறுபான்மையினருக்கு காணப்படுகின்ற மத, மொழி, போன்ற அடிப்படைய உரிமைகள் போன்றதே சுயநிர்ணய உரிமைக்கும் உரித்துடையவர்களாக உள்ளனர்.

ஆகவே, உள்நாட்டில் சுயநிர்ணய உரிமையைக் வலுவாகக் கேருவதற்கும் அதுபற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் முழுமையான உரித்துக்கள் காணப்படுகின்றன.

என்னுடைய பார்வையில் உள்நாட்டில் அந்த நிலைமைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுமாக இருந்தால் சர்வதேச அரசியல்சாசனச் சட்டத்தின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நோக்கி நகரமுடியும்.

பதில்:- நீங்கள் எழுப்பிய இரண்டாவது வினாவுக்கு முதலில் பதிலளிக்கின்றேன். தற்போதைய அரசியலமைப்பை தொடர்ந்து பின்பற்றுவதா? புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதா என்பது ‘அரசியல் ரீதியான இயலுமையில்’ தான் தங்கியிருக்கின்றது.

ஆட்சியை முன்னெடுப்பவர்களின் ‘அரசியல் இயலுமை’ புதிய அரசியலமைப்பை உருவாக்குவற்கான சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முடியுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியும். இல்லையென்றால் தற்போதைய அரசியலமைப்பில் காத்திரமான திருத்தங்களை மேற்கொண்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அடுத்தகட்ட கட்டமைப்புக்களை வலுப்படுத்தலாம்.

முதலாவதாக நீங்கள் எழுப்பிய ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு சாத்தியமாக என்று பார்த்தால் ஆம், சாத்தியம் தான். உலகளாவிய ரீதியில் ஒற்றையாட்சி முறைக்குள் சுயநீர்ணய உரிமையை உறுதிப்படுத்திய ஆட்சிக்கட்டமைப்புக்கள் உள்ளன.

ஆகவே, ஒற்றையாட்சி என்ற பெயர்ப்பலகையை மையவாதமாக வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும். அது சமச்சீரனதாகவும் இருக்கலாம். சமச்சீரற்றதாகவும் இருக்கலாம்.

வரையறுக்கப்பட்ட அதிகாரக்கட்டமைப்புக்கு தேவையான தீர்மானங்களை எடுத்தல், வளங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வினைத்திறனாக நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் உறுதியாகின்றபோது சொற்பகாலத்தில் கணிசமான இலக்குகளை அடைய முடியும்.

பகிரப்பட்ட அதிகாரங்களை உறுதி செய்து கொள்வதற்காக இடையேற்பாடுகளை முன்னெடுக்க முடியும். செனட் சபை அல்லது இரண்டாவது சபையை உருவாக்குதல், தேசிய மாநாட்டை நடத்துதல், பிரதிநிதித்துவ பங்கேற்பு முறைமையிலான சபை, அரசியலமைப்பு பேரவை போன்ற பொறிமுறைமைகளில் ஒன்றை செயற்படுத்திப் பார்க்க முடியும்.

பதில்:- உண்மையில், இலங்கையைப் பொறுத்தவரையில் மாகாண சபைகள் முறைமை மிகச் சிறந்தவொரு தெரிவாகும். மாகாண சபைகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி மகாhணங்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் காணப்படுகின்றது.

ஆகவே, மாகாணங்களுக்கான அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அதிகாரப்பகிர்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். அத்துடன், மாகாண சபையின் வினைத்திறனான செயற்பாடுளின் ஊடாக காலவோட்டத்தில் ஒற்றையாட்சி முறைமையை சமஷ்டி முறைமையாக உருமாற்றம் செய்துகொள்ள முடியும்.

பெல்ஜியத்தில் ஐந்து தடவைகள் அரசியலமைப்பில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு நடைமுறைசாத்தியமாக்குவதற்கு அவ்விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. பின்னர் சமஷ்டி கட்டமைப்பாக உருமாறியது.

இனங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையற்ற தீவு தேசத்தில் மாகாணங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதன் மூலமாக, இயற்கை மற்றும் மனித வளங்களை அதியுச்சமாக உபயோக்க முடியும். அதன் ஊடாக எட்டப்படுகின்ற வளர்ச்சியானது அடுத்தகட்டத்துக்கான வாயில்களைத் திறப்பதற்கு வழிசமைக்கும்.

எந்தவிதமான முன்னகர்வுகளும் இல்லாது மாகாணம் காணப்படுமாக இருந்தால் தொடர்ச்சியாக பின்னடைவுகளுக்கும் மலினப்படும் நிலைமைகளுக்கும் அங்குவாழும் திரட்சியான சமூகத்தினை தள்ளிவிடும் ஆபத்துள்ளது.

பதில்:- நிச்சயமாக சவலான பணி தான். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறப்படாது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதால் முன்னேற்றகரமான நிலைமைகளை எட்ட முடியாது. அதேபோன்று தான் இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு பதிலளிக்காது விடமுடியாது. அவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தேடல்களுக்கு, கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாக முன்னெடுப்பதாக இருந்தால் வௌ;வேறு குழுவினர் ஒருங்கிணைந்து சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். அதன் அடைவு மட்டங்களை இறுதியாக ஒன்றிணைத்துக்கொள்வதன் ஊடாக இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.

பதில்:- நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை அமுலாக்குவதாக இருந்தால் அந்தப் பொறிமுறையின் கட்டமைப்பு முறையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதற்கான விசாரணை, இழப்பீடு மீள நிகழாமை உள்ளிட்ட விடயங்கள் வினைத்திறனாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் விடயத்தில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை அமுலாக்குவதில் அரசாங்கத்திற்கு போதியளவிலான ஆர்வம் காண்பிக்கவில்லை.

இதேநேரம், நிலைமாறுகால நிதிப்பொறிமுறையை ஆதரித்து வரவேற்ற, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் அச்செயன்முறைக்கான ஊக்கிகளாகச் செயற்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவ்விதமான நிலைமைகள் காணப்படவில்லை. ஆகவே இந்த விடயத்தில் எனக்கு ஐ.நா.உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அதிருப்திகள் உள்ளன.

Tags:

Leave A Comment