இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பயணத்தை குறைக்குமாறும் பணியிடங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார  அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடக்கலாம் என்று அவதானிப்புகள் சுட்டிக்காட்டப்படுவதால், இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என தூதுவர் அறிவித்துள்ளார்.

நிலைமை காரணமாக, ஈரான், ஈராக், லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேலுக்கான விமானங்களுக்கான விமானப் பாதைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்கூறினார்.

Leave A Comment