எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில்தேசிய மக்கள் சக்தி வெற்றி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில்தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

காலிமாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு ஆகியன போட்டியிட்டன.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளைப் பெற்று 06 ஆறு ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 3,597 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணி-2612 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் சுயேட்சை குழு 2568 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி-1350 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

முன்னதாக, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 63 சதவீதமான

வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றிருந்தன.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 17 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

Leave A Comment