தேசியஏற்றுமதிவழிவரைபடம்தனியார்துறையிடம்கையளிப்பு

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் தேசிய ஏற்றுமதி  வழி  வரைபடம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் மாநாடு 04-03-2026 அன்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2025ஆம் ஆண்டின் ஏற்றுமதி முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த காலப்பகுதிக்கான மூலோபாய இலக்குகள் குறித்து பொதுவான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி உரையாற்றுகையில்,

உள்நாட்டுத் தொழில்துறைகளை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முக்கிய முதலீட்டாளர் என்ற ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. குறிப்பாக, தொழில்பேட்டைகளை நவீனமயமாக்கல், எரிசக்தி விநியோகத்தை சீர்செய்தல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதன் மூலம் தொழில்முனைவோருக்குச் சாதகமான வணிகச் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும்.

அரசு மற்றும் தனியார் துறைகளின் கூட்டுப் பங்களிப்பின் ஊடாக மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இந்த இலக்கை நோக்கி இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

இந்நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Comment