ஸ்கொட்லாந்தின் வெளிப்புற சுயநிர்ண உரிமையை வெஸ்மினிட்டர் பாராளுமன்று மட்டுப்படுத்துகிறது
- Editor
- October 9, 2024
- கருத்துக்கள், தமிழ் Header
- opinion
- 0 Comments

அரசியல்துறை மூத்த விரிவுரையாளர் போல் அண்டர்சன்
‘2026இல் நடைபெறும் அடுத்த ஸ்கொட்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் போராட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும்’
‘ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து இணைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் பிரிந்து செல்லும் சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர்’
ஸ்கொட்லாந்துக்கு வெளிப்புற சுயநிர்ணய உரிமை காணப்பட்டாலும் வெஸ்மினிட்டர் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டால் மட்டுமே வாக்கெடுப்பை நடத்த முடியும் என்று பிரித்தானியாவின் லிவர்பூல் ஜோன் மூரிஸ் பல்கலைக்கழகம் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் கற்கை நிலையம் ஆகியவற்றின் அரசியல்துறை மூத்த விரிவுரையாளர் போல் அண்டர்சன் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் பெடரல் யுனிவர்சிற்றியில் வைத்து வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவமையான வடிவம் வருமாறு,
கேள்வி: ஸ்கொட்லாந்தில் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஏன் ஒப்புக்கொண்டது? இதன் பொருள் பிரித்தானிய அரசாங்கம் தன்னுடைய 4 பிராந்தியங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை அங்கீகரிக்கிறதா?
பதில்: 2011இல் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அரசாங்கம் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான ஜனநாயக ஆணையைப் பெற்றுள்ளது என்பதே அப்போதைய பிரதமர் டேவிட் கமரூன் கூறிய முக்கிய காரணமாக இருந்தது. எனவே அந்த வாக்கெடுப்பு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசாங்கங்களால் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. எனினும் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் எதுவும் இருக்கவில்லை.
ஆனால் 2012இல் எடின்பேர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலமாக இங்கிலாந்தின் நான்கு பிராந்தியங்களில் ஏதேனும் ஒன்று அரசை விட்டு வெளியேறலாம் என்பது மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தின் ‘பெரிய வெள்ளி’ (புழழன குசனையல) உடன்படிக்கையில், அயர்லாந்து குடியரசுடன் ஐக்கியப்படுவதற்கான எல்லைக் கருத்துக்கணிப்புக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு காரணம் அப்பகுதி இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அல்லது கட்டுப்பாட்டக்குள் உட்பட்டதாகும்.
உண்மையில், வெஸ்ட்மின்ஸ்டரின் ஆதரவின்றி சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று 2022இல் இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஸ்கொட்லாந்தை மையப்படுத்தி தீர்ப்பளித்திருந்தது.
சுருக்கமாக, பார்ப்பதாயின் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு மறைமுகமான உரிமைகள் இருந்தாலும், அது இங்கிலாந்து அரசு அல்லது வெஸ்மினிஸ்டர் பாராளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டால் மட்டுமே வாக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியத்தை தோற்றுவிக்கின்றது.
கேள்வி: உலகில் அதிக அதிகாரப்பகிர்வு பெற்ற பாராளுமன்றங்களில் ஒன்றாக ஸ்கொட்லாந்து இருக்கின்றபோதும் அது ஏன் இன்னுமும் பிரிவினையை நாடுகிறது?
பதில்:- ஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கான பகுத்தறிவுகள் – அனைத்து பிரிவினைவாத இயக்கங்களுக்கும் உள்ளதைப் போலவே மாறுபடுகின்றன.
சிலருக்கு, வரையறுக்கப்பட்ட சுய-அரசு இருப்பது போதாது, அவர்கள் முழுமையான சட்டமன்ற மற்றும் நிதி சுயாட்சியை விரும்புகிறார்கள். 2021 ஸ்கொட்லாந்து தேர்தல் ஆய்வின் மிக சமீபத்திய தரவுகளின் பிரகாரம் ஸ்கொட்லாந்து சுதந்திரத்தை ஆதரிப்பதற்கான முதன்மைக் காரணம் பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியவையான காரணங்களாவே உள்ளன.
குறிப்பாக இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு (அதிகாரத்தில் 2010-2024) எதிர்ப்பு மற்றும் அதன் ‘ஆரளஉரடயச ருnழைnளைஅ’ என்ற மூலோபாயம் மிகவும் உறுதியானது. அதிகாரம் பெற்ற நிறுவனங்களை அவற்றுக்கான இடத்தில் வைப்பதற்கு வேறு காரணங்கள் உள்ளன,
உதாரணமாக, இங்கிலாந்துக்கு வெளியே ஸ்கொட்லாந்து பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் ஸ்கொட்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து இணைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர்.
இங்கே வலியுறுத்த வேண்டிய முக்கிய விடயம் அவ்வப்போது காணப்டுகின்ற புறச்சூழலாகும். அதுவே ஒரு தனிநபரை தீர்மானிப்பதற்கு வழிசமைக்கின்றது. ஒரு வருடத்தில் சுதந்திரத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ தூண்டும் அந்தச் சூழல் அடுத்த ஆண்டு மறுபட்டதாக இருக்கின்றது.
ஜூலை 2024இல் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் தொழிற்சங்கங்கள் பற்றியதாகும். கன்சர்வேடிவ்களின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தை விடவும் தொழிற்கட்சியின் கீழ் உள்ள தொழிற்சங்கம் மிகவும் சிறப்பாக செயற்படுகிறது.
ஆனால் இந்த விடயத்தினை ஸ்கொட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கும் வாக்காளர்களை நம்ப வைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் தேட முடியுமா தான் இங்கேயுள்ள சுவாரஸ்யமான விடயமாக உள்ளது.
கேள்வி: சமீபத்திய பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து ஆசனங்களை தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் நிலைமை என்ன?
பதில்: மிக சமீபத்திய தேர்தல் வாக்கெடுப்பின் அடிப்படையில், ஸ்கொட்லாந்து தேசிய கட்சிக்கு இது நிச்சயமாக முடிவல்ல.
தொழிலாளர் கட்சி கடந்த பத்து ஆண்டுகளில் செய்ததை விட இப்போது நம்பகமான தேர்தல் சவாலை முகங்கொடுகின்றது.
சமீபத்திய பொதுத் தேர்தலில், ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொழிற்கட்சியிடம் கணிசமான இடங்களை இழந்தது, எனவே நிச்சயமாக ஸ்கொட்லாந்து தேசிய கட்சிக்கு அதுவொரு சவாலாக உள்ளது. ஆனால் அந்தச் சவால் அக்கட்சிக்கு முடிவாகாது.
2026இல் நடைபெறும் அடுத்த ஸ்கொட்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் போராட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அடுத்து தேர்தல் முறை முக்கியமான விடயமாகின்றது. பிரித்தானியாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு தேர்தல் முறைமையை விடவும் கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையானது மிகவும் நியாயமானது.
எனவே பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட முடிவுகள் போன்ற சிதைவை நாம் காண முடியாது, ஆனால் தேர்தலின்போது, ஸ்கொட்லாந்து தேசிய கட்சி நிச்சயமாக தொழிற்கட்சியின் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்பது யதார்த்தமான விடயமாகும்.
கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் நுழைவதற்கு தொழிற்கட்சி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ள நிலையில் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மேசைக்குச் செல்லப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீட்டமைக்க முடியும் என்று தொழிற்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. பழமைவாதிகளின் அனுபவத்ததை விடவும் சமகால நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான மற்றும் நேர்மறையான உறவுகளை வளர்ப்பதற்கு முயல்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், எந்தவொரு அரசாங்கமும்; மீண்டும் வாக்காளர்களிடம் கேட்காமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயல்வது கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆகவே என்னுடைய தனிப்பட்ட பார்வையில் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான மீளிணைவு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
கேள்வி: ஒரு ஒற்றையாட்சி அரசாங்கத்திற்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு காணப்பட வேண்டுமெனில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் யாவை? இங்கிலாந்தை அடிப்படையாக வைத்து தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: இந்தக் கேள்விக்கான பதிலை எவ்வாறு வழங்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, நான் பயப்படுகிறேன். அதனால் இந்த வினாவை விட்டுவிடலாம்.

