இயற்கையால் உத்வேகம் பெறுவோம் ‘இன்று உலக சுற்றுச்சூழல் தினம்’
- Editor
- June 5, 2026
- சமகாலம், தமிழ் Header
- சமகாலம்
- 0 Comments

கலாநிதி திருமதி சுபாஐpனி உதயராசா, சிரேஷ;ட விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம்
இயற்கையைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் சுற்றுப்புறச் சூழலை பேணவேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்கள், தன்னார்வ நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புறசூழலை பேணுவதற்கான முழுமையான செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மிக எளிதாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்திகளைப் பரப்ப முடியம். சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். மனிதனைச் சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் ‘சூழல்’ எனப்படும். நாள்தோறும் நாம் காணுகின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கின்றது. சூழல் என்னும் விடயத்தில் சூழலியல், சூழல், சூழற்றொகுதி போன்ற சொற்பதங்கள் முக்கியமானவை. உயிரினத் தோற்றத்திற்கும், நிறைவேற்றுத் தன்மைக்கும் சூழலமைப்பே காரணமாகும். இச்சூழல் இரண்டு வகைப்படும். அவை பௌதிகச் சூழல் அல்லது இயற்கைச் சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழல் அல்லது மனிதனால் உருவாக்கப்படும் சூழல் ஆகியவையாகும்.
இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல் தன்மை. பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுகக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும், அபிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும், விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் மனிதன் சுற்றுச்சூழலின் இயற்கைச் சமனிலையைப் பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். அண்மைக் காலங்களில் விஞ்ஞானத்துறையானது மிகவும் முன்னேற்றம் அடைத்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல்க்கல்வி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் அண்மைக் கால உலக சூழல் நெருக்கடியாகும்.
சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையால் 1972ஆம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற சூழல் மகாநாட்டில் சுற்றுச்சூழலை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக சுற்றுச்சூழல் தினமானது ‘ஒரே ஒரு பூமி’ எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யூன் மாதம் ஐந்தாம் திகதி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆய்வுப் பொருளைஃகருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான ஆய்வுப்பொருள் அல்லது கருப்பொருளாக ‘நமது எதிர்காலத்திற்காகவும் காலநிலைக்காகவும் இயற்கையால் உத்வேகம் பெறுவோம்’ என்பதாகும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 150இற்கும் மேற்பட்ட நாடுகள் சுற்றுச்சூழல் தினத்தில் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக அஜர்பைஜான் குடியரசு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்ஆண்டில் அஜர்பைஜான் குடியரசால் நடாத்தப்படும் சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கருத்தானது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் நீண்டகால சுற்றுச்சூழல் மீள்திறனைக் கட்டமைப்பதற்கும் இயற்கை சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதில் கவனம்; செலுத்துகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப்பாதையின் வழியே கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அஜர்பைஜான் குறிப்பிடத்தக்க இயற்கை பன்முகத்தன்மை கொண்ட ஒரு நிலமாகும். இதன் நிலப்பரப்பு அயனவலயம் மற்றும் இடைவெப்பவலயம் ஆகிய இரண்டு முக்கிய காலநிலை வலயங்களில் பரவியுள்ளது. அயனவலயக் காடுகள் தொடக்கம் மலைப்பகுதி சூழல் அமைப்புக்கள் வரை தனித்துவமான காலநிலை வகைகளை உள்ளடக்கி செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்தை உருவாக்குகிறது. அஜர்பைஜான் குடியரசானது பசுமை வளர்சச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் ஆற்றலை வேகமாக முன்னெடுத்து வருகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக 2035ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க சக்திவளங்களின் பயன்பாட்டை 30 வீதமாக அதிகரிப்பதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சூழல் மாசடைதல்
உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்iதாகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பன பொதுவாகக் காணப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பிற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே மனிதன் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் காணப்படுகின்றது. இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல தொகுதியில் அல்லது சுற்றாடத் தொகுதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. மனிதர்களின் அலட்சியப் போக்குக் காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல், குடித்தொகைப் பெருக்கம் ஆகிய காரணங்களால் சூழல் பலவகையாக மாசுபடுகின்றது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையைப் புவி இழந்துள்ளது. போர் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளினாலும் அழிவுகளைப் புவி எதிர் நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. நகரங்களில் வசதிவாய்ப்புக்கள். அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற வசதிபடைத்த மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயருகின்றனர். இதன் காரணமாக நகர்ப் பகுதிகளில் கிராமங்களை விட சூழல் மாசடைதல் அதிகமாகக் காணப்படுகின்றது இந்த வகையில் சூழலில் உள்ள பல்வேறு கூறுகளும் அதாவது நிலம், நீர், வளி ஆகிய கூறுகள் மனிதனுடைய பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மாசடைகின்றன.
இந்தவகையில் நீர் மாசடைதலுக்கான காரணங்களாக தொழிற்சாலைக் கழிவுகள் நீருடன் கலத்தல், விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் நீர் நிலைகளுடன் கலத்தல், பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை நீர் நிலைகளில் இடுதல், தொழிற்சாலைகளில் வெளியேறும் இரசாயனப்பதார்தங்கள் மற்றும் கழிவுநீர் என்பன நீர் நிலைகளில் விடுவிக்கப்படல், நகர்ப்புற குப்பை கூழங்கள் ,கழிவுநீர் என்பவற்றை ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுள் விடுவித்தல், நீர் நிலைகளில் பல்வேறு பொருட்களை கழுவுதலும், குளித்தலும் கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டுதல், மலசலகூட கழிவுகள் நீருடன் கலத்தல், இறந்த கால்நடைகளை நீர்நிலைகளில் வீசுதல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
அடுத்ததாக நிலம் மாசடைதலுக்கான காரணங்களாக பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தில்; புதைத்தல், காடழித்தல், உக்காத பொருட்களை நிலத்தினுள் புதைத்தல் (கண்ணாடி, பீங்கான் ஓடுகள்), தொழிற்சாலை எண்ணெய்க் கழிவுகளை நிலத்தினுள் செலுத்துதல். அளவிற்கு அதிகமான செயற்கை இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையும் விவசாயத்தின் போது பயன்படுத்துதல், பல அடுக்கு மாடிக்கட்டடங்களை கட்டுதல், ஆற்றுக் கழிமுகங்களில் மண் அகழ்தல், பல அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தல் போன்ற செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்.
அடுத்ததாக வளி (காற்று) மாசடைதலுக்கான காரணங்களாக தொழிற்சாலை புகைகள் வளியில் கலத்தல், நச்சுவாயுக்கள் வளியினுள் கலத்தல், கிருமிநாசினிகள் விசிறும் போது அவை வளியில் கலத்தல், வெடிபொருள்களின் நச்சுவாயுக்கள் வளியில் கலத்தல் பழைய வாகனங்;களில் இருந்து வெளியேறும் புகை வளிமண்டலத்தில் கலத்தல், யுத்தங்கள் நடைபெறுகின்ற போது நவீன ஆயுதங்களின் பயன்பாட்டால் நச்சுப்புகைகள் வளிமண்டலத்தில் கலத்தல், எரிமலை வெடிப்பினால் ஏற்படும் புகை, தூசு போன்றனவற்றை குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி அணுஆயுதத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் வளிமாசடைகின்றுது. ஏவுகணைகளை வானத்தில் ஏவுவதாலும், காட்டுத் தீபரவும் சந்தர்ப்பங்களிலும், நாம் விறகை எரித்துப் பயன்பெறும் போதும் அதிகளவு புகை வளிமண்டலத்தைச் சென்றடைகின்றமை போன்ற செயற்பாடுகளினாலும் வளி மாசடைகின்றது. இதனால் ஓசோன் படை சிதைவடைதல், பச்சை வீட்டுத்தாக்கம், அமிலமழை, தீயகதிர்வீச்சு போன்ற பல தீயவிளைவுகள் ஏற்படுகின்றன. இன்று அதிகளவான ஒலி மற்றும் அதிகளவான ஒளி போன்ற காரணிகளும் சூழலை மாசடையச் செய்கின்றன.
பூகோள சுற்றாடல் பிரச்சினைகள்
உலகில் எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய ஒரே ஒரு கோள் புவியாகும். இந்தப் புவியில் இன்றைய மிதமிஞ்சிய குடித்தொகையும், அதன் எல்லையற்ற முயற்சியும், முக்கிய துறைகளின் வளர்ச்சியும் எல்லைக்கே சென்றுள்ளது. குறிப்பாக கைத்தொழில,; விவசாயம், கால்நடை வளர்ப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள், ஆயுத உற்பத்திகள் போன்றவை சூழலை ஆதாரமாக வைத்தே அதன் வளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இத்துறைகளின் எல்லையற்ற வளர்ச்சியினால் இன்று புவிக் கோளமானது உலகளாவிய ரீதியில் பல சூழல்ப் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. அவற்றுள் முக்கியமான பிரச்சினைகள் பின்வருமாறு.
• பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும்
• ஓசோன் படைத் தேய்வு
• காடழிப்பும், உயிரினப் பல்வகைமை அழிவும்
• பாலைவனமாதல்
• அமில மழை
சீரற்ற காலநிலை நிலவும் குளிர் பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடியிலான முடிய அமைப்பு முறையையே ‘பச்சை வீடு’ என அழைக்கப்படுகின்றது. பூமி அதிகளவில் வெப்பமடைவதால் ‘பச்சை வீட்டு விளைவானது’ நிகழ்கின்றது. இத்தாக்கம் பற்றி முதன் முதலில் 1827இல் பரோன் ஜீன் பாப்டிஸ்ட் ஃபோர்னியர் என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டினதும், மெதென், நைதரசன் ஒட்சைட்டு, ஓசோன், நீராவி, குளோரோபுளோரோ காபன்கள் ஆகியவற்றின் பொறிமுறை செயற்பாடாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மனித நடவடிக்கைகளினால் வெளிவிடப்படும் வாயுக்களின் பங்களிப்பினை மாற்றியமைப்பதோடு இவ்வாயுக்களின் செயற்பாட்டையும் பாதிக்கின்றது. இதனால் வளி மண்டலம், உயிர் மண்டலம், நீர் மண்டலம், நில மண்டலம் என்பவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இவ்வாயுக்களின் அதிகரிப்பினால் வெப்பநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சி மாதிரியில் வேறுபாடு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நீரியல் வட்டத்தில் பாதிப்பு, சூறாவளிகள், புயல்கள் போன்றவற்றின் உருவாக்கம், சமுத்திர நீரோட்டங்களின் திசை மாறுதல், தாவரங்கள், விலங்குகளில் ஏற்படும் தாக்கம் போன்றன ஏற்படுவதோடு மனிதனின் சமூக, பொருளாதார கட்டமைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக முனைவுப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகும் வேகம் படிப்படியாக அதிகரித்துள்ளது. ஆட்டிக், அந்தாட்டிக் பகுதிகளில் மட்டுமன்றி இமயமலையிலுள்ள பனிக்கவிப்புகளும் உருகத் தொடங்கி உள்ளன. 1999ஆம் ஆண்டுத் தகவலின் படி இமயத்தின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் பனி உருகி வழிந்ததில் அதன் உயரத்தில் 1.3 மீற்றர் குறைந்துள்ளது. இப்போது ஆண்டிற்கு சராசரியாக 0.1மீற்றர் என்ற அளவில் பனி உருகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டளவில் சீனாவிலுள்ள பனிமலைகளில் 65வீதம் உருகிவிடும். கோள வெப்ப அதிகரிப்பு காரணமாக பசி, பட்டினியாலும், மலேரியா, வயிற்றுப்போக்குப் போன்ற வெப்ப மண்டல நோய்களாலும் ஏழை நாடுகளில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக உயரும் என அஞ்சப்படுகிறது. இதில் அனுதாபதிற்குரிய விடயம் கோள வெப்ப உயர்வால் அதிகம் தண்டிக்கப்படும் இவர்கள் பூகோளத்தை வெப்பப்படுத்தும் செயல்கள் எதிலும் தொடர்புபடாத அப்பாவி ஏழைமக்கள் என்பது தான். இக்கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக ஓசோன் படையில் துவாரம் ஏற்பட்டுள்ளதோடு ஓசோன் படை தேய்வடைந்தும் செல்கின்றது. ஓசோன் படையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் வளர்ந்த, வளர்முக நாடுகளில் அமில மழை உருவாக்கம், பாலைவன பரவலாக்கம் என்பன அதிகரிக்கும்.
பூகோள சூழற் பிரச்சினைகளில் ஒன்றாக விளங்கும் அமிலமழையானது இன்றைய காலகட்டத்தில் சூழலை மாசடையச் செய்து மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகக் காணப்படுகிறது. இது 1980களின் பின்னரே தீவிரமடைந்த ஒரு நிகழ்வாகும். அமில மழை என்பது எரிபொருட் படிமங்களை எரிக்கும் போது உருவாக்கப்படும் சல்பரொக்சைட், நைதரசன் போன்ற பிரதான வாயுக்களை உள்ளடக்கிய மாசுப் பொருட்கள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி அமிலத் தன்மையடைந்து வளிமண்டலத்தினூடாக எடுத்துச் செல்லப்பட்;டு மீண்டும் மழையாகப் பொழிதலைக் குறிக்கின்றது. இவ் அமிலமழைப் பொழிவினால் நீர்ச் சூழல்பாதிக்கப்படல், மண்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படல், மண்ணின் வளம் குறைவடைதல், மனித சுகாதாரம் பாதிக்கப்படல், கட்டடங்கள் ஓவியங்கள் பாதிக்கப்படல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
உயிர்ப்பல்வகைமை என்பதில் புவியில் காணப்படும் சகல விதமான உயிரினங்களும் அவற்;றின் வாழ்விடங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் புவியில் 30 மில்லியன் முதல் 100 மில்லியன் வரையிலான அளவில் அங்கிகள் காணப்படலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கிகளிடையே சுமார் 1.5 மில்லியன் மாத்திரமே விஞ்ஞர்ன ரீதியாக சிறப்பாக ஆராய்ந்தறிந்து பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூமியில் வாழும் மொத்த அங்கிகளில் 50 சதவீதமானவை அயன மண்டலத்தினுள் இனங்காணப்பட்டுள்ளன. அதேநேரம் இவ்வயனமண்டலக் காடுகள் வருடாந்தம் மனிதநடவடிக்கைகளினால் ஒரு சதவீதம் என்ற அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அயன மண்டலத்தில் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உயிரினப் பல்வகைமையானது துரிதமாக அழிவிற்குட்பட்டு வருவது தெளிவாக இனங்காணப்பட்டதன் விளைவாக 1992ஆம் ஆண்டு உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் நிலைத்திருக்க் கூடிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைச் சூழல் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. இம்மாநாட்டில் 160ற்கும் மேற்பட்ட நாடுகள் உயிரின வளங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை நிலையான அடிப்படையில் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டு கையொப்பமிட்டன. உயிரினப் பல்வகைமையானது உயிரியல், பொருளாதார, கல்வி, கலாசார, மனோத்துவம், அழகியல் எனப் பல்வேறு விதங்களில் முக்கியம் பெறுகின்றது. எனினும் இவ்வுயிர்ப் பல்வகைமையானது மனிதனது நேரடியான தாக்கங்களிற்கு உட்பட்டு வருவதுடன் திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, இயற்கை வளங்களின் அதிகரித்த பாவனை என்பன காரணமாகவும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. மனிதன் உட்பட்ட சூழல்த் தொகுதியில் வாழ்கின்ற ஒவ்வொரு அங்கியும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு ஒரு வலையமைப்பில் வாழ்ந்து வருகின்ற அதே நேரம் இவை ஒவ்வொன்றும் முக்கிய பங்களிப்புகளை அவற்றின் வாழ்க்கையில் நிலைப்பிற்காகச் செய்து கொண்டிருக்கின்றன.
புவிpல் உள்ள கூறுகள் மாசடைதலைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியாக இப்பிரச்சினை இன்று ஆராயப்படுகிறது. உலக நாடுகளின் அரசாங்கங்களோடு இவ்வெண்ணக் கருவை கவனமெடுக்கும் விஞ்ஞான நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன. சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்ச்சிச் செயற்பாடுகள் கையாளப்படுகின்றன. சிறப்பாக சூழல் மாசடைதலைத் தடுக்கும் இந்த நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் சூழல் பற்றிய கல்வியுறிவு, மாசடைதலைத் தடுக்கும் எச்சரிக்கைகள், பிரசாரங்கள் என்பனவெல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் முக்கிய வளங்களான நீர், காற்று, நிலம், வனம், கனிமங்கள் போனவற்றின் அழிவினை தடுப்பதற்கான பரிகார நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புகளும் கவனம் செலுத்தி வருவது நல்லதொரு செயற்பாடு ஆகும். அந்த வகையில் மரங்களை நடுதல், இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல், குப்பைகூழங்கள் எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல், உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல், பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சூழலை மாசடைவதை தடுக்கலாம்.
சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்திந்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. காலநிலை நடவடிக்கை என்பது காபன் வெளியேற்றத்தைக் குறைப்பது மட்டுமல்ல அது நமது பொருளாதாரங்களுக்கு ஆற்றலளிக்கும் அமைப்புக்களை மறுபரிசீலனை செய்வதும், காலநிவையுடனான நமது உறவை சீரமைப்பதுமாகும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் அனைவருக்கம் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நீதியான எதிர்காலத்தை நாம் உறுதி செய்ய முடியும். ஆகவே சூழல் மாசடைவதைத் தடுக்க வேண்டியது மனிதராய் பிறந்த எங்கள் ஒவ்வொருவருடைய பெறுப்பும், கடமையும் ஆகும்.

