வாழ்க வளமுடன் !

சுதந்திரத்திற்குப் பின், இந்த நாட்டின் அரசியல் துறையில் முன்னணிப் பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்த பல அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களின் ஓய்வு பெற்ற பெரும்பாலோர் நாட்டின் இக்கட்டான சந்தர்ப்பங்கள் மற்றும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மௌனம் சாதித்து வருகின்றனர். அரசியல் அதிகாரம் இல்லாத பட்சத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தாம் கண்டுகொள்ள தேவை இல்லை  என்று அவர்களில் பலர் நினைக்கின்றதாக இருக்கக்கூடும். எனவே, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் குடும்பம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மட்டும்  செலவிடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் திரு.கரு ஜயசூரிய அவர்கள் அதிகாரத்தில் இருந்த போதும், அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நாட்டின் பொது நலன் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு அர்ப்பணிப்புடன் தன்னலமின்றி பெரும் தியாகங்களை செய்த ஒரு சிறந்த தலைவராக அடையாளம் காட்ட முடியும். உண்மையில், அவர் அரசியல் அதிகாரத்தை தனது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வரப் பிரசாதமாக கருதவில்லை, மாறாக தனது தாய்நாட்டிற்கு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாகவே கருதினார்.

கரு ஜயசூரிய அவர்கள் அரசியல் களத்தில் பிரவேசித்ததும், அதில் பல்வேறு அதிகாரங்கள் மற்றும்  பதவிகளை வகித்ததும் வய்புகளை தனக்குத் தருமாறு கேட்டுப் பெற்று அல்ல. அந்தப் பொறுப்புகளை ஏற்குமாறு அவரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளினால் மட்டுமே அவர் அப்பதவிகளை வகித்துள்ளார். இதேவேளை, இந்த நாட்டின் இரண்டு ஜனாதிபதிகள் தமது அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கரு ஜயசூரியவிடம் கோரியதையும் அவர் இரண்டு தடவைகள் அதனை மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரு.கரு ஜயசூரியவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மற்றும் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அக்காலக் கட்டங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகாரத்தின் மீது பேராசை கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதிகாரத்தைப் பெறுவதற்கான காத்திரமான சந்தர்ப்பங்களில் அவை கிடைக்காமல் போனது தொடர்பில் விரக்தி அடையாமல் இருந்த இவரின் தன்னம்பிக்கையும் அற்புதமானது. அதற்குச் சிறந்த உதாரணமாக 20015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வழங்கப்படவிருந்த பொது வேட்பாளரின்  வகிபாகத்தை இந்த நேரத்தில் குறிப்பிடலாம் .அந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக அவரைத் தெரிவு செய்ய எல்லாம் தயாராக இருந்தது, பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற திரு. மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன் வந்தது அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பில் அல்ல,

மறைந்த வண. மாதுளுவவே சேபித்த  தேரர் தெரிவித்ததின்படி, அடுத்த அரசாங்கத்தில் மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சுப் பதவிகளையே திரு.சிறிசேன எதிர்பார்த்துள்ளார்.  வணக்கத்திற்குரிய சோபித்த தேரர் போன்றே நாட்டின் ஜனநாயகத்திற்காக போராடிய பெரும்பாலான சிவில் சமூக அமைப்புகளின் பொதுவான எதிர்பார்ப்பு திரு.கரு ஜயசூரியவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நியமித்து ஒரு பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதாகும். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே முட்டுக்கட்டையாக அமைந்தது. அப்போதைய எதிரணியின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு பொது வேட்பாளராக வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி வகிப்பவர்களுக்கோ உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கோ அந்த சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்வைத்த விசையிட நிபந்தனையின் காரணமாகவே அந்த வாய்ப்பு கரு ஜயசூரியா அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

மாதுளுவாவே சோபித தேரரின் வாழ்நாளில் இது போன்ற ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தை அவர் சந்தித்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.   தனது உயிரை பணயம் வைத்து முன்னெடுத்து வந்த ஒரு போராட்டம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் ஒரு நிபந்தனையால் தோல்வி அடைவதை காண்பதற்கு சோபித்த தேரர் விரும்பவில்லை. இறுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியதன் தேவை கருதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்குவதற்கான முடிவு அனைவராலும் எடுக்கப்பட்டது.

அந்தத் தருணத்தில்தான் திரு.கரு ஜயசூரிய அவர்களின் மாண்பை புரிந்து கொள்ளக்கூடிய தருணம் வந்தது.கரு ஜயசூரிய அவர்கள் தனக்கு கிடைத்த வாய்ப்பை இழப்பது குறித்து முகம் சுளிக்கவில்லை. மாதுளுவாவை சோபித தேரர்  முன்னிலையில், “ஹாமுதுருவனே, நாங்கள் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வோம். மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றார்.  கூறியவாறே அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். மைத்திரிபால சிறிசேனவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு, அவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு தூய உள்ளத்துடன் கரு ஜயசூரிய அவர்கள் இந்த நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, சில இடங்களில் நடைபெற்ற  பொதுக்கூட்டங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் கரு ஜயசூரிய அவர்கள் சளைக்கவில்லை. அவர் செய்த அந்த தியாகம் அவரது சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ளஅதுவே போதுமானது.

அரசியலில் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றியவர். நம் நாட்டில் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை வடிவமைக்கும் செயல்பாட்டில் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார்.  பாராளுமன்றத்தின் சபாநாயகராக அவரது பங்கு ஒருபுறம் அவரது நடுநிலைத் தன்மை மறுபுறம். சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அவரது துணிச்சலையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியது. இராணுவ சேவையில் அவரது சிறந்த சாதனைகளும், ஒரு தனியார் துறை தொழில் முயற்சியாலராக மிகவும் வெற்றிகரமான தலைமைத்துவம் மற்றும் அவரது இராஜதந்திர செயல்திறன் ஆகியவை அவரது  வாழ்க்கையில் அழகாக உள்ளடங்கியுள்ளது.

ராஜதந்திரியாக அவர் பெற்ற அங்கீகாரமும் புகழும் நிகரற்றது. கொழும்பு அமரசேகர மாவத்தையில் உள்ள அவரது வீட்டை, இந்நாட்டில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி வரும் முக்கிய இராஜதந்திர அதிகாரிகள் அடிக்கடி வந்து போகும் வீடு என்றே கூறலாம். மேலும், பல வெளிநாடுகளில் அவருக்கு மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானியப் பேரரசரால் வெளிநாட்டவருக்கு வழங்கக்கூடிய  மிக உயரிய விருதான உதிக்கும் சூரியன் விருதும், இந்தியாவின் அப்துல் கலாம் இன்ஸ்டிடியூட் வழங்கும் “ஆசியாவின் பெருமை” விருதும் அவற்றில் முக்கியமானவை. இலங்கையின் பிரஜைக்கு வழங்கப்படக்கூடிய உயரிய கௌரவ பட்டமான ஸ்ரீலங்காபிமானி கௌரவ பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சீனக் குடியரசிற்கு இறப்பர் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் கரு ஜயசூரிய ஆவார் . அப்படிப்பட்ட உன்னத குணம் கொண்ட திரு.கரு ஜயசூரியவிற்கு சர்வதேச சமூகம் காட்டும் மரியாதையை கண்டு வியக்க தேவையில்லை.

முன்னரே குறிப்பிட்டது போல அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் நாட்டுக்காக செய்த சேவையில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. புத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக பல முதல்தர நிறுவனங்களில் அவரது தலைமைதுவமும் பங்களிப்பும் மிக உயர்ந்தது. திரு. கரு ஜயசூரிய அவர்கள் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்காகவும், இனங்களுக்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும் இயங்கி வரும் சூரிய அறக்கட்டளையின் முன்னணி நன்கொடையாளராவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வசதிகள் மற்றும் சிகிச்சை சேவைகளை இலவசமாக வழங்கும் இந்திரா கேன்சர் டிரஸ்ட் நிறுவனமும் கரு ஜயசூரிய அவர்களின் மக்கள் சேவையின் மற்றும் ஒரு அங்கமாகும்.

கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் தேசத்திற்கு  வழங்கப்பட்ட சமீபத்திய நிறுவனம் “ஜனநாயகம் மற்றும் ஆளுகைக்கான பயிற்சி நிறுவனம்.” ஆகும்.  இது எதிர்கால அரசியல் களத்தில் பிரவேசிக்க உள்ள இளைஞர்களின் அரசியல் கல்வியறிவை வளர்ப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இம்மாதம் 30ம் தேதி திறக்கப்பட உள்ளது.

மேலும், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக உள்ளடக்கம் மற்றும் ஜனநாயகத்தை முன்னெடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிவில் அமைப்பான  சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தற்போதைய தலைமைத்துவத்தையும் வகித்து தேசத்தை கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை மேம்படுத்துவதற்கு திரு.கரு ஜயசூரிய தற்போது தனது நிபுணத்துவத்தை வழங்கி வருகிறார். ஒரு இளைஞனை விட ஆற்றல் மிக்க, உறுதியான மன உறுதியுடன் அனைத்தையும் அவர் நிர்வகிக்கிறார்.

வாழ்க வளமுடன்!

சுனில் ஜயசேகர.

Leave A Comment