சட்டவாக்க கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்; ஐரோப்பியஒன்றியதூதர் வலியுறுத்து
- Editor
- July 28, 2025
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
சிறுவர்களுக்கான நீதியில் நேர்மையும் சமத்துவமும் பிரதிபலிக்க வேண்டும் என்றும், சட்டவாக்கக் கட்டமைப்புக்க ள் மறுசீரமைக்கப்பட்டு பலப்படுத்த வேண்டுமெனவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் கார்மென் மொரெனோ வலியுறுத்தினார்.
இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கெதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அழுத்தங்களை வழங்கும் நோக்கில் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு மாநாடு கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரையில் நடைபெறுகின்றது,
இந்நிலையில் இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சட்டவாக்கக் கட்டமைப்புக்களை பலப்படுத்தி சிறுவர்களுடன் கடமையாற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் ஆற்றலை மேம்படுத்தி சிறுவர் நேய நீதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அத்துடன், சிறுவர்களுக்கான நீதியில் நேர்மையும் சமத்துவமும் பிரதிபலிக்க வேண்டும், அவர்களின் வயது மற்றும் பால்நிலைத் தேவைகளை கருத்திற்கொண்டு அவர்களைப் பராமரிப்பதோடு, அவர்களின் கண்ணியமும் எதிர்கால வளர்ச்சியும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி பெகோனா அரல்லானோ கருத்து தெரிவிக்கும் போது
‘பலமான சான்றுகள், வினைத்திறன்மிக்க தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டுடன் இலங்கைக்கு அனைத்து சிறுவர்களும் பயன்பெறும் ஒரு பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப முடியும். எனவே, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வுகாண்பதில் கல்வித் துறையின் வகிபாகம் இன்றியமையாதது” என்று வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விஷேட பிரிநிதி கலாநிதி. நஜாத் மாலா மாஜித், சிறுவர்களுக்கெதிரான வன்முறை தொடர்பான கானொளிச் செய்தியில் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய சேவைகளை தொடர்ச்சியாக ஒருவiரயும் தவறவிடாமல் வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறியுள்ளார்.

